விக்கிப்பீடியா பேச்சு:விக்கியன்புக் குறியீடு திட்டம்

சுந்தர் ஒரு எண்ணம். பல லினக்சு குழுமத்தில் இருப்பது போல, தகுந்த பங்களிப்புகளை தந்தால், ஒரு சிறப்புகுறியீடு தருவது போல, இங்கும் ஒருவருக்கு விக்கியன்பு குறியீடு தரலாம். எவ்வளவு குறியீடுகளை ஒருவர் பெற்றுள்ளார் என்று பார்த்தவுடன் கணித்துவிடலாம். அதுபோல, பலவித வளர்ச்சிநிலைகளில் பங்களிப்பவர்களுக்கு, தனித்தனி குறியீடுகள் அளிக்கப்பட்டால், புதிய பங்களிப்பவர்களுக்கும், ஏற்கனவே இருக்கும் பங்களிப்பவர்களுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். விரைந்து செயல்படுவர். விக்கியும் வளரும். ஒவ்வொரு கட்டுரைப்பகுதியிலும் இருக்கும் உரையாடற்பகுதி, அக்கட்டுரையை வளர்க்கத்தான். எந்த கட்டுரையையும் எழுதா நிலையில், நமக்கு உரிமைகள் குறைவு என்பதே பலரும் புரிந்து கொள்ள வழிமுறைகளை நாம் உருவாக்குதல் மிக மிக அவசியமென்று நான் எண்ணுகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 03:02, 22 அக்டோபர் 2013 (UTC)Reply

விக்கியன்புக் குறியீடு நல்ல திட்டமாகத் தோன்றுகிறது, நன்றி தகவலுழவன். ஆனால் அதை உரிமைகளுடன் தொடர்பேற்ற வேண்டியதில்லை. அக்குறியீட்டை அளப்பது எப்படி, ஒருவருக்கொருவர் நாமே பதக்கம் போல அளித்துக் கொள்ளலாமா? இதை எல்லாம் சற்று எண்ணிப் பார்த்து பொருத்தமான இடத்தில் முன்மொழிவாக வையுங்கள். -- சுந்தர் \பேச்சு 03:12, 22 அக்டோபர் 2013 (UTC)Reply
வழக்கம்போல, ஆர்வக்கோளாறு செய்துவிட்டேன்? என்னால் இடையூறு ஏற்பட்டிருப்பின் மன்னிக்கவும்.--≈ உழவன் ( கூறுக ) 03:39, 22 அக்டோபர் 2013 (UTC)Reply
இடையூறு இல்லை, தகவலுழவன். நல்ல திட்டம் தானே? அதை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதால் தனியாக முன்னெடுக்க வேண்டினேன். அவ்வளவுதான். -- சுந்தர் \பேச்சு 04:27, 22 அக்டோபர் 2013 (UTC)Reply
  1. உயர்நிலை குறியீடு: கட்டுரைப் போட்டியில் உள்ள 15360 பைட்டுகள் அளவீடு உள்ளது போல, யாருடைய பங்களிப்பும் இல்லாமல், தனி ஆளாக, அந்த அளவு உருவாக்கியவருக்கு உயர்நிலை குறியீடு தரலாம். அதுபோல எத்தனை கட்டுரைகள் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணிக்கையும், அதனுள்ளேயே வர வழிவகை செய்யலாம். மேலும், tooltip போல, அது எதற்கு என்ற விவரமும் வருவது போல செய்தால் நன்றாக இருக்கும். ஒரு பயனரை அளக்கும் குறியீடு திறம்பட உருவாக்கப்பட்டால், கட்டுரையாக்க நோக்கத்தில் பலர் வேகமெடுப்பர். உரையாடற் பக்கத்தின் பைட்டுகளும் குறைய வாய்ப்புண்டு. நமது நோக்கம் கட்டுரையை உருவாக்குவது தான் என்பதால், அந்த எல்லையை அதிகம் தொடுபவருக்கு அதிக உரிமைகளும், மதிப்பும் தரலாம் என்பதே எனது எண்ணம். --≈ உழவன் ( கூறுக ) 16:13, 23 அக்டோபர் 2013 (UTC)Reply
இக்குறியீட்டு முறை பங்களிப்பாளர்களுக்குள் ஏற்றத் தாழ்வினை உண்டாக்குமா?. இத்தனை சிறப்பு குறியீட்டினை நான் பெற்றுள்ளேன், நீங்கள் குறைந்த குறியீட்டினையே பெற்றுள்ளீர்கள் என்பது போன்ற சிக்கல் வரலாமென நினைக்கிறேன். இதனை எவ்வாறு அனுக வேண்டும் என்று தெளிவு செய்ய வேண்டுகிறேன் தகவலுழவன் நண்பரே!. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:22, 23 அக்டோபர் 2013 (UTC)Reply
ஏற்றத்தாழ்வு எப்படி வரும்? நண்பரே!. ஏனெனில், தனிநபர் ஒருவரின் பதிவுகள்/உழைப்புகள் அடையாளம் காட்டப்படுகின்றன. அதிக குறியீடு வேண்டுமெனில், அதிக உழைப்பைத் தரவேண்டும். உழைத்தால் பெயர் கிட்டும் என்று உறுதியான எண்ணம் மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதே என் இலக்கு. தனிநபர் ஒருவரின் உழைப்பை பிற நண்பர்களுக்கு உடன் காட்ட வேறு வழி தெரியவில்லை. பள்ளிகளில் மதிப்பெண் பெற வேண்டுமானால், மாணவர் உழைக்கத்தானே வேண்டும். திட்டமிடும் பணி, நிரலாக்கப்பணி போன்ற வற்றை விட, கட்டுரை உருவாக்கம் தானே, நமக்கு தலையானது. நீங்கள் எத்தனை பைட்டுகள் இதுவரை கட்டுரையாக்கத்தில் செய்துள்ளீர்கள் என்று எனக்குத் தெரியாது. அதனை எப்படி அறிவது? தற்போது குறைந்த அளவுள்ள அல்லது அதிக அளவுள்ள பைட்டுகளை கட்டுரையாக்கத்தில் பெற்றவர் யார்? எண்ணிக்கை என்ற அளவு கோலை விட இது தலையானது உண்மை. அனைவரையும் விட நான் குறைந்த அளவு பைட்டுகளைப் பெற்றிருக்கிறேன் என்று ஒருவர் எண்ணினால், அதிகம் உழைக்க வாய்ப்புண்டு. இது ஆரோக்கியமான உந்துதலைத் தரும் என்பதுஎனது ஆழமான நம்பிக்கை. இது குறித்து ஏதேனும் கருவிகள் இருக்கிறதா என இனிமேல் தான் அலச வேண்டும்.--≈ உழவன் ( கூறுக ) 16:39, 23 அக்டோபர் 2013 (UTC)Reply
தெளிவுரைக்கு நன்றி நண்பரே. Stackoverflow, codeproject போன்ற தளங்களில் இம்மாதிரியான குறியீட்டு முறையை கையாளுவதை அறிந்திருக்கிறேன். அங்கு இக்குறியீட்டினைக் கொண்டே அணுக்கங்கள் கிடைக்கின்றன. இது புதிய பயனர்களுக்கு உந்துதலைத் தரக்கூடியது. சிறப்பாக செயல்படுத்த என்னுடைய வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:49, 23 அக்டோபர் 2013 (UTC)Reply
ஒரு சிந்தனை தான். நண்பரே! திட்டமொன்றும் இல்லை. இனிதான் வழிமுறைகளை, ஆய வேண்டும். அவ்வப்போது தங்களது நுட்பங்களையும் தெரிவியுங்கள். முதலில் நான் ஒரு 100 கட்டுரைகளையாவது உருவாக்க வேண்டும். பிறகு தான் திட்டமெல்லாம். கட்டுரைகளை வளர்த்தெடுப்பதே எனது முதன்மை நோக்கம். உங்கள் நோக்கில், கட்டுரையொன்று எத்தனை பைட்டுகள் இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? வேறு அளவீடுகள் இருப்பினும் தெரிவிக்கவும். அவசரமில்லை. மீண்டும் சந்திப்போம். வணக்கம். --≈ உழவன் ( கூறுக ) 16:56, 23 அக்டோபர் 2013 (UTC)Reply
விக்கியில் நிறைய புள்ளி விபரங்கள் உள்ளன. தொகுக்குகள் எண்ணிக்கை. சராசரி ஒரு கட்டுரையில் எத்தனை திருத்தங்கள். என நிறைய உள்ளன. அதனைப் பயன்படுத்தி பயனர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாமே! --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:02, 23 அக்டோபர் 2013 (UTC)Reply
கொஞ்சம் விரிவாக கூறுங்கள். பக்கத்தொடுப்பு தந்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும். இப்பொழுது வெளியில் செல்கிறேன். நாளை வந்து பார்த்துக் கொள்கிறேன்.வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 17:06, 23 அக்டோபர் 2013 (UTC)Reply

தினேஷ்குமார் பொன்னுசாமி கருத்து தொகு

தரக்குறியீடுகள் தர,

  1. புதிய கட்டுரைத் துவக்கம் (1000 பைட்டுகள் உள்ளடக்கம்) - 5 புள்ளிகள்
  2. சிறிய தொகுப்பு (100 பைட்டுக்கு குறைவாக) - 1 புள்ளி
  3. ஓரளவு பெரிய தொகுப்பு (1000 பைட்டுக்கு குறைவாக) - 2 புள்ளிகள்
  4. பெரிய தொகுப்பு (2000 பைட்டுக்கு குறைவாக) - 4 புள்ளிகள்
  5. சற்று பெரிய தொகுப்பு (3000 பைட்டுக்கு குறைவாக) - 5 புள்ளிகள்
  6. வார்ப்புரு / பகுப்பு சேர்த்தல் - 1 புள்ளி
  7. துப்புரவுப் பணி (5 மாற்றங்கள்) - 1 புள்ளி
  8. துப்புரவுப் பணி (10 மாற்றங்கள்) - 2 புள்ளிகள்
  9. துப்புரவுப் பணி (20 மாற்றங்கள்) - 4 புள்ளிகள்
  10. மொழிபெயர்ப்பு பணிகள் (10 மாற்றங்கள்) - 3 புள்ளிகள்
  11. படிம பதிவேற்றம் - 5 புள்ளிகள்

இன்னும் பிற தகுதிகள் சேர்க்கலாம்; பிற பணிகளை அடையாளம் கண்டு அவற்றையும் இதனுடன் இணைத்துவிடலாம். ஒருவர் மூவாயிரம் புள்ளிகளை தாண்டிவிட்டால் ஒரு பதக்கம் கொடுக்கலாம் (எடுத்துக்காட்டு தான், 100 புள்ளிகளுக்கு கூட பதக்கம் கொடுக்கலாம்). ஒருவர் பத்தாயிரம் புள்ளிகள் பெற்று விட்டால் அவருக்கு நிருவாக அணுக்க தர பரிசீலிக்கலாம்.

இவை அனைத்து என்னுடைய தனிப்பட்ட கோரிக்கை என்றே வைத்துக்கொள்ளலாம். தானியங்கி மூலம் பயனர் கணக்கில் இதை சேர்த்துவிடலாம். (நீச்சல் உங்கள் உதவி இங்கு தேவை :D). ஒவ்வொரு பயனரின் கையொப்பத்தில் இணைக்க கோரலாம் (அவர் உரையாடலில் பங்குபெறும் போது அவருடைய பங்களிப்பு விவரமும் தெரிந்துவிடும் :D). இன்னும் நிறைய கருத்துகள் என்னிடம் உள்ளது, பிற பயனர்களின் கருத்தைக் கேட்டபிறகு அதனையும் சேர்த்து விடுகிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:39, 23 அக்டோபர் 2013 (UTC)Reply

@தினேஷ்குமார் பொன்னுசாமி தங்களின் பரிந்துரைகள் நன்றாக உள்ளன. புள்ளிகள் குறித்து பதக்கம் தரும் யோசனையும் வரவேற்கத்தக்கதே. சிந்தனையில் இருக்கும் மற்ற யோசனைகளும் பகிர்ந்து கொள்ளுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:53, 23 அக்டோபர் 2013 (UTC)Reply
நல்ல முன்மொழிவு. கொஞ்சம் கொஞ்சமாக ஆழப்படுத்துவோம். ஒரு வேண்டுகோள். முதலில் பழ.இராஜ்குமார் சொன்ன விக்கி வசதிகளை தெரிந்து கொள்ளலாமா?. வாரம் ஒருமுறை இங்கு வந்து கருத்திட்டால் போதுமென்று எண்ணுகிறேன். உரையாடுவதை விட, உருவாக்குதலுக்கு முன்னுரிமை தருவோம். நான் எனக்குள் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். இரண்டு வரி உரையாடினால். ஒரு வரியாவது ஏதாவது ஒரு தமிழ் விக்கியில் கட்டுரையாக்கத்தில் எழுத வேண்டும் என்பதே அது. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 23:35, 23 அக்டோபர் 2013 (UTC)Reply
புள்ளிகள் தரும் யோசனை கலக்கலானது. அப்புள்ளிகள் பயனரின் அதீத உரிமையைத் தீர்மானிக்காமல் அதீத மகிழ்ச்சியைத் தருமானால் அது அசத்தலாகவும் இருக்கும். விக்கிக்கு வெளியிலும் விக்கி சார்ந்து உழைப்பவர்கள் இருப்பதால் ஒட்டுமொத்தப் புள்ளியாகக் கொண்டு அவர்களைப் புறக்கணிக்காமல், புள்ளிகள் அனைத்தும் துறைசார்ந்து இருப்பதால் நல்லது என நினைக்கிறேன். உதாரணம் படிமப்புள்ளி என்பது படிமங்கள் சார்ந்து இயங்கியதைக் குறிக்கலாம். கட்டுரைப்புள்ளி, வார்ப்புருப்புள்ளி என்று துறை சார்ந்து இருக்கலாம். en:Template:DYK user topicon இந்த வார்ப்புரு மூலம் பயனர் தனது புள்ளிகளைப் பயனர் பக்கத்திலும் குத்திக்கொள்ளலாம். தானியங்கியால் ஒவ்வொரு பயனரின் புள்ளிகளைக் கணிக்க வைக்கமுடியும் என நினைக்கிறேன். உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் பயனரின் பக்கத்தில் அப்புள்ளிகளை இடவைக்கலாம். --நீச்சல்காரன் (பேச்சு) 07:45, 24 அக்டோபர் 2013 (UTC)Reply
//விக்கிக்கு வெளியிலும் விக்கி சார்ந்து உழைப்பவர்கள் இருப்பதால் ஒட்டுமொத்தப் புள்ளியாகக் கொண்டு அவர்களைப் புறக்கணிக்காமல்// புறக்கணிப்பு என்றில்லை, அவர்களுடைய ஒட்டுமொத்த பங்களிப்பும் ஒரே எண்ணாக தெரிந்தால் நன்றாக இருக்கும், அவருடைய பயனர் பக்கத்தில் இப்பணிக்காக (துறைசார்ந்த புள்ளிகள்), இவ்வளவு புள்ளிகள் சேர்க்கப்பட்டது என்று பிரித்துக்காட்டலாம். (மைக்ரோசாப்ட் அல்லது, ஸ்டேக் ஓவர்ப்ளோ தளத்தைப் பார்க்கவும்). //சிந்தனையில் இருக்கும் மற்ற யோசனைகளும் பகிர்ந்து கொள்ளுங்கள்.// நூறு புள்ளிகளுக்கு குறைவாக இருப்போருக்கு புதுப்பயனர் , ஆயிரம் புள்ளிகளுக்கு குறைவாக இருப்போருக்கு அனுபவப் பயனர், பத்தாயிரம் புள்ளிகளுக்கு குறைவாக இருப்போருக்கு நீண்ட நாள் பயனர், என வேறு சில பெயர்களையும் புள்ளிகளோடு இணைக்கலாம். இன்னும் நிறைய வசதிகள் செய்யலாம் ஆனால் இவை அனைத்தும் அடுத்த கட்டமாக இருக்க வேண்டும். முதலில் தரக்குறியீடு சேர்த்தல் நலம், அதன் பின் பிற மேம்படுத்தும் யோசனைகளை சேர்க்கலாம். //உரையாடுவதை விட, உருவாக்குதலுக்கு முன்னுரிமை தருவோம். // இதைப் பார்த்தாலே தெரிந்துவிடும், உரையாடுவதை எவ்வளவு குறைத்துள்ளேன் என்று. // உறுதியாகத் தெரியவில்லை.// விரைவாக உறுதிப்படுத்தவும். முடியுமென்றே நினைக்கிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:30, 24 அக்டோபர் 2013 (UTC)Reply

ஐயங்கள் தொகு

  1. இது போன்ற திட்டம் வேறு விக்கியில் செயல்பாட்டில் இருக்கிறதா? அங்கு விளக்கப் பக்கங்களைத் தந்தால் இத்திட்டள்ளத்தை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.
  2. புள்ளிகளைக் கணக்கிடும் தானியங்கி இதற்காகத் தமிழ் விக்கியில் தொகுப்புகளை மேற்கொள்ளுமா? எத்தகைய தொகுப்புகள்? எத்தனைத் தொகுப்புகள்?
  3. மதிப்புப் புள்ளிகள் வழங்கும் முறை புறவயமாக இருக்கிறது. ஆனால், எந்த நடவடிக்கைக்கு எவ்வளவு புள்ளிகள் என்று தீர்மானிப்பது அகவயமாக இருக்கிறது. தகுந்த அடிப்படை இன்றியும் உள்ளது. இந்த முரணை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?
  4. நாளடைவில் இது புள்ளிகள் அடிப்படையிலான உரிமைகள், அணுக்கம் வழங்கல், சமூக மதிப்பீடு என்ற நலமற்ற போக்குக்கு இட்டுச் செல்லாதா?


ஏற்கனவே இருக்கிற பதக்கங்கள் வழங்கும் நடைமுறையே போதுமானதாக இருக்கும் என்பது என் கருத்து. அன்புக்கு எண்ணிக்கைக் குறியீடு என்பதே ஒரு முரணாக உள்ளதே? :) புள்ளிகள் அடிப்படையில் போட்டியிடுவது நன்றாக இருக்கும் எனில் தற்போதைய கட்டுரைப் போட்டி போலவோ விக்கிமரத்தான்கள் போலவோ அவ்வப்போது நடத்தலாம். விக்கிச் சமூகம் நடைமுறைச் சமூகத்தை ஒத்தது. இங்கு ஒவ்வொருவரின் செயல்பாட்டைப் பற்றியும் நாம் ஒரு மதிப்பு கொண்டுள்ளோம். இது நீண்ட கால அடிப்படையிலானது. தானாய் உருவாவது. பல் நோக்கு கொண்டது. இதுவே சிறப்பாக இருக்கும்.

தற்போது நமக்குப் புதிதாக கிடைத்துள்ள தொழில்நுட்ப ஆர்வத்தையும் வளத்தையும் தமிழ் விக்கியின் மெய்யான சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுத்த வேண்டும். நன்றி. --இரவி (பேச்சு) 18:15, 24 அக்டோபர் 2013 (UTC)Reply


//இது போன்ற திட்டம் வேறு விக்கியில் செயல்பாட்டில் இருக்கிறதா? அங்கு விளக்கப் பக்கங்களைத் தந்தால் இத்திட்டள்ளத்தை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். // இதுபோன்ற திட்டம் எனக்குத் தெரிந்த வரை விக்கியில் இல்லை. இது மைக்ரோசாப்ட், ஸ்டாக் ஓவர்ப்ளோ( துறைவாரியாக புள்ளி விவரம், புள்ளிகளை அடிப்படையாக வைத்து பதக்கங்கள்) போன்ற தளங்களில் உள்ளது.
//புள்ளிகளைக் கணக்கிடும் தானியங்கி இதற்காகத் தமிழ் விக்கியில் தொகுப்புகளை மேற்கொள்ளுமா// தொகுப்புகளை இது மேற்கொள்ளாது. மேற்கொள்ளவும் கூடாது. ஒவ்வொரு பயனரின் தனிக்கணக்கில் புள்ளிகள் சேர்க்கப்படலாம். விக்கியில், ஏற்கனவே உள்ள தரவுகளை (database) பயன்படுத்த வேண்டும்.
// எந்த நடவடிக்கைக்கு எவ்வளவு புள்ளிகள் என்று தீர்மானிப்பது அகவயமாக இருக்கிறது // நான் பரிந்துரைத்தவை அனைத்தும் எடுத்துக்காட்டுகளே, அனைவரும் உரையாடி பிறகு முடிவெடுப்போம்.
// நலமற்ற போக்குக்கு இட்டுச் செல்லாதா // உரிமைகள், அணுக்கம் வழங்கல் போன்றவற்றிற்கு பரிந்துரை செய்ய எளிதாக இருக்குமே தவிர, அப்பொழுதும் விக்கியின் நடைமுறையின் அடிப்படையிலேயே அனைத்து செயல்களும் இருக்கும்.
//கட்டுரைப் போட்டி போலவோ விக்கிமரத்தான்கள் போலவோ அவ்வப்போது நடத்தலாம்// எப்போதாவது நடக்கும் போட்டிகள் இவை, ஆனால் இங்கு குறிப்பிட்டவை ஒட்டுமொத்த உழைப்பை காட்டும்.
//தமிழ் விக்கியின் மெய்யான சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுத்த வேண்டும்// மெய்யான சிக்கல்களைத் தீர்க்க பல திட்டங்கள் தேவை. இத்திட்டத்தின் நோக்கம், விக்கியில் தொடர் பயனர்களை உருவாக்குவதும், அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ற தரக்குறியீடு தருவது மட்டுமே.
வேறு ஐயங்கள் இருந்தாலும் எழுப்பவும்; அது இத்திட்டத்தினை சிறப்பாக வழிநடத்த உதவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:30, 25 அக்டோபர் 2013 (UTC)Reply
சிலக் கட்டுரைகள் எழுதுவது எளிது. நீண்ட கட்டுரைகள் மிக குறைவான நேரத்திலும், குறைவான தேடல் மற்றும் படிப்பினாலும் எழுதி விடலாம். சில கட்டுரைகள் சிறிய பத்திகளை எழுதுவதற்கு பலவற்றை படிக்கவும், தேடவும், தொகுப்புகள், சமன்பாடுகள் என பலவற்றை தேடி, தவறுகளை நீக்கியும், பொருத்தமான கலைச்சொற்களை தேடவும் மிகவும் கடினமாக இருக்கும். ஒரு எளிதான கட்டுரையின் 15000 பைட்டிற்கும், கடினமான கட்டுரையின் 4000 பைட்டிற்கு ஒரே உழைப்பை தந்திருந்தால், இந்த மதிப்பெண் முறை எளிதான கட்டுரை எழுதியவரை முன்னிறுத்தியும், கடினமான கட்டுரைகள் எழுதியவரை குறைத்து மதிப்பிடவும் காரணமாக அமைந்துவிடாதா? தரமான கட்டுரையை எழுதுவதை விடுத்து மதிப்பெண்களை சேர்க்கும் படி பயனர்களை திசை திருப்பாதா? --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:06, 25 அக்டோபர் 2013 (UTC)Reply
தரமான கட்டுரை எழுதுவோர்களுக்கு இன்னும் அதிக புள்ளிகள் தரலாம். மதிப்பெண்களுக்காக எழுதுவது தவறு என்று நினைக்கவில்லை. அதிக மதிப்பெண்களுக்கு தேவையான தகுதிகளை உருவாக்க வேண்டும். இதைச் செய்தாலே, கட்டுரைகளும் அதிகரிக்கும், அதனுடைய தரமும் அதிகரிக்கும்; அதன் காரணமாகவே கட்டுரை உருவாக்கம் மட்டுமின்றி, பயனரின் அனைத்து உழைப்பிற்கும் மதிப்பீடு கொடுக்க வேண்டும். எல்லோராலும் அனைத்து சேர்க்க இயலாது என்ற உண்மையின் காரணமாகவே, அனைவராலும் தொகுக்கக் கூடிய அளவில் விக்கிப்பீடியா உருவாக்கப்பட்டது. என்னால் படிமம் சேர்க்க முடியும், என்னால் உசாத்துணை சேர்க்க இயலும், உள்ளிணைப்பு தர இயலும், ஆனால் அனைத்து தேவைகளும் உள்ளடக்கிய கட்டுரை எழுத அதிக நேரம் தேவைப்படும். அவர்களால் முடிந்த அளவு உதவ முடியும், அவர்களுக்கு தரக்குறியீடு தர வேண்டும். இதுவே என்னுடைய தாழ்மையான கருத்து. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:20, 25 அக்டோபர் 2013 (UTC)Reply

தினேசு, ஆங்கில விக்கிப்பீடியாவில் பங்களிப்பாளர் ஈடுபாட்டைக் கூட்ட பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகிறார்கள். விக்கிமீடியா அறக்கட்டளையும் இது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. அவர்களே இது போன்ற ஒரு நடைமுறையைக் கொண்டு வரவில்லை என்றால் ஏன் என்று எண்ணிப் பார்க்கலாம். அல்லது, இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பாதியில் கைவிடப்பட்டனவா என்றும் தேடிப் பார்க்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும், இது போன்ற ஒரு முயற்சிக்கான நுட்ப உழைப்பை மேற்கொள்ளும் முன் இதைப் பற்றி பரவலான கருத்தைக் கோரலாம். Quora, Stackoverflow போன்ற தளங்களில் இயங்குபவர்கள் அங்கு கிடைக்கும் புள்ளிகள், வாக்குகளால் உந்தப்பட்டு இயங்குகிறார்களா என்று தெரியவில்லை. மாறாக, ஒருவரின் கருத்தை மற்றவர் தொகுக்கு வாய்ப்பில்லாத அத்தளங்களில், இருக்கிற விடைகளில் நல்ல விடையைப் புதிதாக வருகிறவர்கள் இனங்காண உதவும் வண்ணமாகவே அங்குள்ள புள்ளிகள் முறை இயங்குகிறது என்பது என் புரிதல்.

நேரம் கிடைக்கும் போது, http://fora.tv/2010/01/27/Daniel_Pink_The_Surprising_Truth_About_What_Motivates_Us , https://readmill.com/books/drive (அங்குள்ள highlights பகுதியை மேயலாம்) படித்துப் பாருங்கள். ஏற்கனவே அங்கு குறிப்பிடப்படும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே விக்கிப்பீடியா வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அப்படி உள்ள ஒரு இடத்தில் பங்களிப்பாளர்களை ஊக்குவிக்க புள்ளிகள் வழங்கத் தான் வேண்டுமா என்று தோன்றுகிறது. இல்லை, நாம் வழக்கமாக நமது அலுவலகங்களில் காணப்படும் appraisal முறையை இங்கும் செய்து பார்க்க முனைகிறோமா என்றும் தோன்றுகிறது :) 10 uploads, 20 edits என்று விக்கிப்பீடியா தரவுகள் கூறுவதில் உள்ள புறவயத்தன்மை ஒரு பதிவேற்றத்துக்கு இவ்வளவு புள்ளிகள் என்று வழங்குவதில் தொலைந்து போய் விடுவதாகவே உணர்கிறேன். எத்தனைப் புள்ளிகள் என்பதும் அவற்றை எப்படி குழுவாக இணைந்து ஒரு மனதாக முடிவு செய்கிறோம் என்பதும் முக்கியமில்லை. எந்தப் பணிக்கு எத்தனைப் புள்ளிகள் வழங்கினாலும் புள்ளிகள் வழங்குதல் என்ற நிலையிலேயே புறவயத்தன்மை தொலைந்து விடுகிறது. எடுத்துக்காட்டுக்கு, படம் ஏற்றுவதையும் கட்டுரை எழுதுவதையும் கூட ஒப்பிட வேண்டாம். இரண்டு படங்களைக் கூட ஒப்பிட முடியாது. நான் என் வீட்டுக்கு எதிரே உள்ள தென்னை மரத்தை பல்வேறு கோணங்களில் படம் பிடித்தும் ஏற்றலாம். இன்னொருவர் காடுகளில் பல மாதங்கள் காத்திருந்து ஒரு அபூர்வ விலங்கு அல்லது பறவையின் படத்தை ஏற்றலாம். இரண்டுக்கும் ஒரே புள்ளி தானா? இங்கு உழைப்பு அளவீடு என்ற சொல் பொருள் இழந்து விடுகிறதே?

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பாளர்களை ஊக்குவிக்க ஏற்கனவே பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

  • முதல் கட்டுரைக்கும் தொகுப்புக்கும் தொடர் பங்களிப்புகளுக்கும் பேச்சுப் பக்க வார்ப்புரு இடல்.
  • பேச்சுப் பக்க பாராட்டுகள்
  • பதக்கங்கள் அளித்தல்
  • முதற்பக்க அறிமுகம் அளித்தல்
  • தகுந்த நேரத்தில் நிருவாகப் பொறுப்புகள் அளித்தல்

இவற்றோடு அன்டன் குறிப்பிட்டுள்ள service award, ribbons போன்றவற்றையும் முயலலாம். சிறு சிறு திட்டங்களை உருவாக்கி அவற்றை நிறைவேற்றும் பொறுப்பைப் புதியவர்களுக்குத் தரலாம். பரப்புரைகளிலும் ஊடகக் குறிப்புகளிலும் பல்வேறு பங்களிப்பாளர்களை முன்னிறுத்தலாம்.

இதற்கு மேல் இவ்விசயம் பற்றி குறிப்பிட ஏதுமில்லை :) தொடர்ந்தும் இத்திட்டத்தை நிறைவேற்ற விரும்புகிறீர்கள் என்றால், அது வேண்டாம் என்று எதிர்ப்பு / நடுநிலை வாக்கு இட ஒரு வாய்ப்பு தாருங்கள். அல்லது, இத்திட்டத்தில் opt-in , opt-out செய்வதற்கான நுட்ப வாய்ப்புகளையாவது தாருங்கள். நன்றி :) --இரவி (பேச்சு) 06:09, 8 நவம்பர் 2013 (UTC)Reply

கருத்து தொகு

விக்கியன்புக் குறியீடு திட்ட சாதமான விடயங்களை விட்டுவிட்டு, மேம்படுத்தலுக்கு உதவுக் கூடியன என்று கருதும் விடயங்களை மட்டும் பட்டியலிடுகின்றேன்.

  1. விக்கி கட்டுரையாக்கத்திற்கு அப்பால் ஈடுபடுதல் கவனிக்கப்பட வேண்டுமா? எவ்வாறு?
    1. படிம பதிவேற்றம் - பல வகைகள்
      1. விக்கியில் பதிவேற்றல், பொதுவில் பதிவேற்றி விக்கியில் பயன்படுத்தல்
      2. எண்மிய ஒளிப்பட கருவியில் சாதாரணமான ஒளிப்படம், தொழில்முறை நுட்பமுள்ள ஒளிப்படம் (பொதுவில் Featured pictures, Valued image, Quality image ஆகிய கணிப்புக்கள் உள்ளன).
      3. "அ" என்ற படிமத்தை பெயிண்ட் பிரசில் 5 நிமிடத்திலும் உருவாக்கலாம், 3-4 மணித்தியாலத்திற்கு மேல் உழைத்து ஒரு படிமத்தையும் உருவாக்கலாம்.
    2. தானியங்கி உருவாக்கம், செயற்பாடு கவணிக்கப்படல் வேண்டும்
  2. துப்புரவுப் பணி (2 புள்ளி) - 3 வரிக்கட்டுரையினை (5 புள்ளி) உருவாக்குவதைவிட கடினமானதாக இருக்கலாம்.
  3. விக்கித்தரவில் இணைப்புக் கொடுத்தல் கவணிக்கப்படல் வேண்டும்
  4. கட்டுரைகளில் பொருத்தமான கட்டுரைகளுக்கு உள்ளிணைப்புக் கொடுத்தல் கவணிக்கப்படல் வேண்டும்
  5. தொகுப்பின்போது மேற்கோள், உசாத்துணை, வெளியிணைப்பு என ஆ.வி.யில் இருந்து பிரதி செய்யும் நிலைகளில் எவ்வாறு செயற்படுவது? அவ்வாறே அட்டவனைகள் மற்றும் பிற என்பனவற்றின் போதான கணிப்பு?


மாற்று/புது யோசனை
இவற்றையும் வழங்கலாம். எ.கா: 2 வருடங்களில் 8,000 தொகுப்புக்கள் செய்திருந்தால் Veteran Editor (or Tutnum) விருது.

--Anton·٠•●♥Talk♥●•٠· 14:10, 25 அக்டோபர் 2013 (UTC)Reply

கருத்துகளை முன்வைத்தது மட்டுமின்றி செய்தும் காட்டிவிட்டீர். :D   விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:11, 25 அக்டோபர் 2013 (UTC)Reply
Return to the project page "விக்கியன்புக் குறியீடு திட்டம்".