விக்கிலீக்ஸ் கட்சி

விக்கிலீக்ஸ் கட்சி (The Wikileaks Party) என்பது ஆஸ்திரேலிய அரசியல் கட்சி ஆகும். இது விக்கிலீக்ஸ் தலைவர் ஜூலியன் அசாஞ்சு மூலம் தொடங்கப்பட்டது.[1] ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற இக்கட்சி,[2] ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் 2013 மேலவைத் தேர்தலில் போட்டியிட உள்ளது.[3]

2013 மார்ச் 23 இல் விக்கிலீக்ஸ் கட்சி ஆத்திரேலியத் தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பித்தது. இக்கட்சியில் ஏறத்தாழ 1300 பேர் பணம் செலுத்தும் உறுப்பினர்களாக உள்ளனர்.[4] இவர்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 2013 சூன் 2 இல் அதிகாரபூர்வமாக அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.[5] ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் மேலவைக்காகத் தனது வேட்பாளர்களை நிறுத்தும் என இக்கட்சி அறிவித்துள்ளது.[6]

மேற்கோள்

தொகு
  1. ஆஸ்திரேலியா தேர்தலில் 'விக்கிலீக்ஸ்' ஜூலியன் அசாஞ்ச் போட்டி! tamil.oneindia.in
  2. http://www.guardian.co.uk/world/2013/jul/02/wikileaks-party-registered-australian-election
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2013-07-09.
  4. "Polls positive for WikiLeaks, as party registers". SMH.
  5. "Wikileaks Party registered for election". The Australian. பார்க்கப்பட்ட நாள் 2 June 2013.
  6. "WikiLeaks expands bid for senate seats – ABC News (Australian Broadcasting Corporation)". ABC News.


"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிலீக்ஸ்_கட்சி&oldid=3571515" இலிருந்து மீள்விக்கப்பட்டது