விக்கி ஆலுப்

விக்கி ஆலுப் (Vicki Hollub 1961/62) என்பவர் அமெரிக்கப் பெண்மணி, தொழிலதிபர் ஆவார். இவர் 2016 எப்பிரல் முதல் ஓக்சிடென்டல் பெட்ரோலியம் என்ற பெருங் குழுமத்தின் தலைவராகவும் முதன்மைச் செயல் அதிகாரியாகவும் இருந்து வருகிறார். எண்ணெய் உற்பத்தி செய்யும் பெரிய குழுமத்தை நடத்தி வருகிற முதல் பெண்மணி இவரே ஆவார்.[1][2][3]

வாழ்க்கைக் குறிப்புகள்

தொகு

அலபாமா பல்கலைக்கழகத்தில் பயின்று கனிமப் பொறியியலில் பட்டம் பெற்றார். 2016 இல் அலபாமா பல்கலைக் கழகத்தின் மதிப்பார்ந்த பொறியியல் உறுப்பினர் என அழைக்கப்பட்டார்.

ஒக்சிடென்டல் பெட்ரோலியம் குழுமத்தில் 1981 ஆம் ஆண்டில் சேர்ந்தார். அமெரிக்கா, இரசியா, வெனிசுலா, ஈக்குவிட்டார் உள்பட மூன்று கண்டங்களில் பல்வேறு பதவிகளிலும் பொறுப்புகளிலும் பணி செய்தார். தொடக்கத்தில் சிட்டிஸ் சர்வீஸ் என்ற குழுமத்தில் வேலையில் சேர்ந்தார். அக்குழுமத்தைப் பின்னர் ஒக்சிடென்டல் பெட்ரோலியம் கையகப்படுத்தியது.

விக்கி ஆலுப் அமெரிக்காவில் டெக்சஸ் மாநிலத்தில், டிக்கி தீவில், தமது கணவர் ராபர்ட் கிளென் விஜ் என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.[4]

மேற்கோள்

தொகு
  1. "Vicki A. Hollub". Oxy.com. Archived from the original on 2017-05-10. பார்க்கப்பட்ட நாள் 2017-05-05.
  2. "Vicki Hollub". Fortune.com. Archived from the original on 2017-05-05. பார்க்கப்பட்ட நாள் 2017-05-05.
  3. "Occidental 'Lifer' Vicki Hollub to Be First Female Oil Chief". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 2017-05-05.
  4. "Bruce Vige Obituary - Eunice, Louisiana". Legacy.com. பார்க்கப்பட்ட நாள் 2017-05-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கி_ஆலுப்&oldid=3571493" இலிருந்து மீள்விக்கப்பட்டது