விக்டர் செடெர்கி
விக்டர் செடெர்கி (Victor Sterki-1846, சொலொதர்ன், சுவிட்சர்லாந்து– 1933) சுவிச்சர்லாந்து நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த மெல்லுடலிகள் ஆராய்ச்சியாளர்.[1].[2]
விக்டர் செடெர்கி | |
---|---|
பிறப்பு | 1846 சொலொதர்ன், சுவிச்சர்லாந்து |
இறப்பு | 1933 (அகவை 86–87) |
வாழிடம் | ஒகியோ |
துறை | மெல்லுடலிகள் |
கல்வி கற்ற இடங்கள் | பெர்ன் மற்றும் முனிச் பல்கலைக்கழகம்[1] |
அறியப்படுவது | பூபிலிடே மற்றும் சுபேரிடே குடும்ப மெல்லுடலிகளில் ஆய்வு[1] |
இவர் 1909லிருந்து 1933வரை கேர்னெஜி இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் முதுகெலும்பற்ற விலங்குகள் பிரிவின் உதவியாளராக பணியாற்றினார்.[1]
செடர்கியின் நத்தைச் சேகரிப்பில் நிலத்தில் வாழும் சிறிய நத்தைக் குடும்பமான பூபிலிடேயில் 4000 தொகுதியினையும், நீர்வாழ் சிறிய இருவோட்டுடலிகள் குடும்பமான சுபேரிடே குடும்பத்தில் 12000 தொகுதிகளையும் சேகரித்து இருந்தார்.[1] இவை அனைத்தும் கேர்னெஜி இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த வழங்கப்பட்டது.[1]
விக்டர் செடெகியினைப் பெருமைப்படுத்தும் விதமாக நத்தையியல் ஆராய்ச்சி ஆய்விதழுக்கு செடெர்கனா என்றும் நிலத்தில் வாழும் நத்தை இனம் ஒன்றிற்குக் கப்பையா செடெர்கி எனவும் பெயரிடப்பட்டது.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Victor Sterki" பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம். Carnegie Museum of Natural History, accessed 23 April 2011.
- ↑ Coan E. V., Kabat A. R. & Petit R. E. (15 February 2011). 2,400 years of malacology, 8th ed. பரணிடப்பட்டது 2012-11-11 at the வந்தவழி இயந்திரம், 936 pp. + 42 pp. [Annex of Collations]. American Malacological Society
- ↑ "Victor Sterki". Archived from the original on 2012-05-05. பார்க்கப்பட்ட நாள் 2020-09-04.
- ↑ Pilsbry H. A. (1946). Land Mollusca of North America (north of Mexico), vol. II part 1, 1946, pg. 246.