விக்டர் வான் லாங்
விக்டர் வான் லாங் (Viktor von Lang) ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். 1838 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 2 ஆம் நாளன்று இவர் பிறந்தார். படிக இயற்பியலின் முன்னோடிகள் மற்றும் நிறுவனர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.
விக்டர் வான் லாங் Viktor von Lang | |
---|---|
விக்டர் வான் லாங் | |
பிறப்பு | வியன்னா, ஆத்திரியப் பேரரசு | 2 மார்ச்சு 1838
இறப்பு | 3 சூலை 1921 வியன்னா, ஆத்திரியா | (அகவை 83)
தேசியம் | ஆத்ஸ்திரியன் |
துறை | கோட்பாட்டு வேதியியல் |
பணியிடங்கள் | வியன்னா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கீசென் பக்லைக்கழகம் |
Academic advisors | ஆண்டிரியாசு வான் எட்டிங்காசன் |
முனைவர் பட்ட மாணவர்கள் | பிராங் எசு எக்சனர் |
1859 ஆம் ஆண்டில் கீசென் பல்கலைக்கழகத்தில் லாங் தனது முனைவர் பட்டத்தை "பிசிகலிசே வெர்கால்ட்னிசே கிறிசுடாலிசியர்டர் கோர்பர்" என்ற தலைப்பில் பெற்றார்.
1865 ஆம் ஆண்டு முதல் 1909 ஆம் ஆண்டு வரை லாங் வியன்னா பல்கலைக்கழகத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார்[1]. லாங் எழுதிய கோட்பட்டு இயற்பியல் என்ற புத்தகம் 1867 முதல் 1891 வரையிலான காலத்தில் எட்டு பதிப்புகள் வரை வெளிவந்தது. படிகவியலாளர் வில்லெம் யோசப் கிராலிச்சுடன் இணைந்து படிகமாக்கப்பட்ட பொருள்களின் இயற்பியல் நிலை ஆய்வுகள் என்ற புத்தகத்தையும் இவர் எழுதினார்[2]. 1921 ஆம் ஆண்டு சூலை மாதம் மூன்றாம் நாள் இவர் காலமானார்.
நெவில் சிடொரி மாசுகெலைன் இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு கனிமத்திற்கு லாங்கைட்டு என்று பெயரிட்டார்[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ The Physical Tourist: A Science Guide for the Traveler edited by John S. Rigden, Roger H. Stuewer
- ↑ WorldCat Identities Most widely held works by Viktor von Lang
- ↑ A Handbook to a Collection of the Minerals of the British Islands by the Museum of Practical Geology (Great Britain), Frederick William Rudler
வெளி இணைப்புகள்
தொகு- கணித மரபியல் திட்டத்தில் Viktor von Lang