விக்டோரியா காசுபி
விக்டோரியா மிக்கேல் "விக்கி" காசுபி (Victoria Michelle "Vicky" Kaspi) CC FRS FRSC (பிறப்பு: ஜூன் 30, 1967) ஓர் அமெரிக்க-கனடிய வானியற்பியலாளரும் மெக்கில் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார். இவரது ஆய்வு முதன்மையாக நொதுமி விண்மீன்களையும் துடிவிண்மீன்களையும் பற்ரியதாகும்.[1]
வாழ்க்கை
தொகுகாசுபி டெக்சாசில் உள்ள ஆசுட்டீனில் பிறந்தார். ஆனால், இவரது குடும்பம் இவர் ஏழாம் அகவையில் உள்ளபோதே கனடாவுக்குப் புலம்பெயர்ந்துள்ளது.[1] இவர் தன் இளவல் பட்டப் படிப்பை மெக்கில் பல்கலைக்கழகத்தில் 1989 இல் முடித்தார். இவர் பட்டமேற்படிப்புக்கு பிரின்சுடன் பல்கலைக்கழகத்டில் சேர்ந்து முடித்தர். இவர் தன் முனைவர் பட்ட ஆய்வை 1991 இல் நோபல் பரிசாளராகிய வானியற்பியலாளர் ஜோசப் கூட்டன் டெய்லர் மேற்பார்வையில் முடித்துள்ளார்[1][2] இவர் கலிபோர்னியா தொழில்நுட்பம், தாரைச் செலுத்த ஆய்வகம், மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றில் பதவிகள் வகித்த பிறகு, 1999 இல் மெக்கில் பல்கலைக்க்ழகத்தில் புல உறுப்பினராகச் சேர்ந்தார்.[1] மெக்கில்லில் இவர், மெக்கில்லின் முதல் கனடிய ஆராய்ச்சிக் கட்டிலில் அமர்ந்தார்.[3] இவர் 2006 இல் உலோர்ன் டிராட்டியர் வானியற்பியல் பேராசிரியராக அமர்த்தப்பட்டார்.[4] இவர் கனடிய உயராய்வு நிறுவன ஆய்வுறுப்பினரும் ஆவார்.[5] ஐவரது கணவராகிய டேவிடு இலாங்லேபன் மெக்கில்லில் இதயநோய் வல்லுனராக இருந்தார்[3] மேலும், இவர் மான்டிரீலில் அமைந்தசர் மார்ட்டிமர் பி. டேவிசு யூதர் பொது மருத்துவமனையில் இதயநோய்த் துறைத்தலைவரும் ஆவார்.[4]
ஆராய்ச்சி
தொகுசகாரிட்டசு விண்மீன்குழு சார்ந்த விண்மீன் பெருவெடிப்பு எஞ்சியுள்ள துடிவிண்மீன் G11.2−0.3 பற்றிய இவரது சந்திரா எக்சு கதிர் வான்காணக நோக்கீடுகள், துடிவிண்மீன் விண்மீன் பெருவெடிப்பின் மையத்தில் நிலவுவதைக் காட்டின. இது முன்பே கி.மு 386 இல் சீனரால் நோக்கப்பட்டுள்ளது. இதுவரை அறிந்துள்ள விண்மீன் பெருவெடிப்பு எஞ்சியுள்ள துடிவிண்மீன் களில் இது இரண்டாவதாகும். முதலில் அறிந்த்து நண்டு ஒண்முகிலில் அமைந்துள்ளது. இவரது ஆய்வுகள் விண்மீன் பெருவெடிப்புக்கும் துடிவிண்மீனுக்கும் உள்ள முன்கணித்த உறவை பெரிதும் ஏற்கவைத்தன. மேலும் இது துடிவிண்மீன்களின் அகவையைத் தற்சுழற்சி வீதத்தை வைத்து கணக்கிடும் முறையைக் கேள்விக்குள்ளாக்கியது;பழைய முறைகள் துடிவிண்மீன் அகவையை விண்மீன் பெருவெடிப்பைப் போல 12 மடங்கெனக் காட்டின.[6] உரோசு எக்சு கதிர் நேரத் தேடல் கருவியைப் பயன்படுத்திய காசுபியின் ஆய்வு, மென் காமா மீளியற்றிகள், ஒழுங்கற்ற காமாக்கதிர் வெடிப்புகளின் வானியல் வாயில்கள், பிறழ்நிலை எக்சு கதிர் துடிவிண்மீன்கள், உயர்காந்தப்புலம் வாய்ந்த மெதுவாகச் சுழலும் துவடிவிண்மீன்கள் ஆகியவற்றை காந்த விண்மீன்களாக விளக்கலாம் எனக் காட்டியது.[5][7] இவர் மிக வேகமாகச் சுழலும் PSR J1748-2446ad துடிவிண்மீனையும் கண்டுபிடித்தார்.[2] star clusters with a high concentration of pulsars,[2] மேலும் இவர் கிரீன் பேங்க் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, மெதுவாகச் சுழலும் துடிவிண்மீன்கள் மிரக வேகமாகச் சுழலுபவையாக (மில்லிநொடி துடிவிண்மீன்களாக) அண்டவெளி மீள்சுழற்சி நடப்பதையும் சுட்டிக் காட்டினார்.[8][9]
தகைமைகளும் விருதுகளும்
தொகுஇவர் 1998 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் ஆன்னி ஜம்ப் கெனான் வானியல் விருதை வென்றார். இவர் 2004 இல் கனடிய இயற்பியலாளர் கழகத்தின் ஜெரார்டு எர்சுபெர்கு பதக்கத்தைப் பெற்றார்.[5] இவர் 2006 இல் சுட்டீயசு பரிசையும் பெற்றார்.[10] இவர் 2007 இல் கனடிய அரசு கழகத்தின் உரூதர்போர்டு நினைவுப் பதக்கத்தைப் பெற்றார். இவர் 2009 இல் கியூபெக்கின் உயரறிவியல் விருதாகிய பிரிக்சு மரீ-விக்டோரின் விருதை வென்றார்.[1][2] இவர் 2010 இல் அரசு கழக ஆய்வுறுப்பினர் ஆனார்.[11] இவர் 2010 இல் ஜான் சி. பொலான்யி விருதைப் பெற்றார். இவர் 2016 இல் அறிவியல் பொறியியலுக்கான கனடிய ஜெரார்டு எர்பிக் பொற்பதக்கத்தை வென்றார். இப்பரிசைப் பெற்ற முதல் பெண்மணி இவரே.[12][13] இவர் 2016 இல் கனடாவின் இரண்டாம் உயர் பொதுப்பணி தகைமையாகிய கனடா ஆணை சார்ந்த கனடா ஆணைத் துணைவர்கள் பட்டியலில் அமர்த்தப்பட்டார்.[14]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Les Prix du Québec - la lauréate Victoria Kaspi. (In French.)
- ↑ 2.0 2.1 2.2 2.3 Kaspi earns Quebec’s top honour[தொடர்பிழந்த இணைப்பு], McGill Reporter, January 24, 2010.
- ↑ 3.0 3.1 Victoria Kaspi, by Bronwyn Chester, McGill Reporter, January 25, 2001.
- ↑ 4.0 4.1 Reaching for stars: juggling ambition, angst பரணிடப்பட்டது 2011-06-04 at the வந்தவழி இயந்திரம், Montreal Gazette, February 6, 2007.
- ↑ 5.0 5.1 5.2 2004 CAP Herzberg Medal will be awarded to Dr. Victoria Kaspi பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம், Canadian Association of Physicists, retrieved 2010-01-24.
- ↑ Scientists Find Second Pulsar and Link It to Ancient Supernova, John Noble Wilford, த நியூயார்க் டைம்ஸ், January 11, 2001.
- ↑ Evidence Helps Confirm Existence of Powerful Magnetars, Robert Roy Britt, space.com, September 11, 2002.
- ↑ Scientists witness cosmic recycling first, AdelaideNow, May 22, 2009.
- ↑ Researchers catch nature in the act of "recycling" a star, Space Daily, May 22, 2009.
- ↑ McGill professor Vicky Kaspi awarded coveted Steacie Prize, McGill University, December 14, 2006.
- ↑ "New Fellows 2010: H-K".
- ↑ "Victoria Kaspi, neutron star researcher at McGill, wins $1M Herzberg medal". CBC News. February 16, 2016. http://www.cbc.ca/news/technology/herzberg-kaspi-1.3205517.
- ↑ Mehta, Diana (February 16, 2016). "Une scientifique de McGill est la première femme à recevoir la médaille Herzberg" (in French). La Presse Canadienne. http://www.lapresse.ca/sciences/201602/16/01-4951223-une-scientifique-de-mcgill-est-la-premiere-femme-a-recevoir-la-medaille-herzberg.php.
- ↑ "Governor General Announces 100 New Appointments to the Order of Canada as Canada Turns 150". The Governor General of Canada His Excellency the Right Honourable David Johnston. பார்க்கப்பட்ட நாள் 31 December 2016.