விக்டோரியா சுசான்னி மீதோவ்சு

விக்டோரியா சுசான்னி மீதோவ்சு (Victoria Suzanne Meadows) வாழ்சிங்டன் பல்கலைக்கழக வானியல் பேராசிரியரும் வானுயிரியல் திட்ட இயக்குநரும் ஆவார்.[1] இவர் நாசாவின் வானுயிரியல் நிறுவனத்தின் மெய்நிகர் கோள் ஆய்வகத்தின் முதன்மை ஆய்வாளரும் ஆவார்.[2] இவர் வாழ்தகவும் வானுயிர் அடையாளங்கள் சார்ந்த நாசாவின் வானுயிரியல் நிறுவனk (NAI) குழுவின் வழிநடத்தும் அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இக்குழுவின் ஆய்வுநெறியும் நோக்கமும் புறவெளிக் கோள்கள் பற்றிய கணினிப் படிமங்களை உருவாக்குவதாகும். இவை புறவெளிக் கோள்களின் உருவாக்கம், நிலைப்பு, வட்டனை படிமலர்ச்சி, அவற்றின் சுற்றுச்சூழலையும் கதிர்நிரல்களையும் ஒப்புருவாக்கம் செய்து அவற்றின் வாழ்தகவைக் கண்டறிதலே ஆகும்.

இவர் நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளமறிவியல் பட்டம் பெற்றார். சிட்னி பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் துறையில் இயற்பியல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Scientific American இதழ், கெப்ளர் விண்கலம் தொலைவில் அமைந்த விண்மீன்களைச் சுற்றிவரும் பல புறவெளிக் கோள்களைக் கண்டுபிடித்தபோது இதுபற்றிய இவரது கருத்தைக் கூறுமாறு வேண்டியுள்ளது.[3]

இவரது ஆய்வின் முதன்மையான கவனம் ஒரு சூரியவெளிக்கு அப்பாலைய கோள் உயிர்தரிக்க ஏற்பு உடையதா என்பதை அறியவல்ல அக்கோளின் நிகழ்வுகளைக் கண்டறிதலே ஆகும். இவர் மெய்நிகர் கோள் ஆய்வகத்தைப் பயன்படுத்தி, புறக்கோள்கள் சார்ந்த கணினிப் படிமங்களை உருவாக்குகிறார். இவை கோள் உருவாக்கம், அதன் நிலைப்பு, வட்டணைப் படிமலர்ச்சி ஆகிய நிகழ்வுகளை ஒப்புருவாக்கம் செய்கின்றன. மேலும் இவை உயிர் வாழ்தகவு உள்ள கோளை இனங்காணவும் அதற்கான திட்டங்களை வகுக்கவும் உதவும்.

2016 நவம்பரின்படி, கூகுள் அறிஞர் இவரது வெளியீடுகள் மொத்தம் 4059 மேற்கோள்களில் சுட்டப்பட்ட்தாகவும் இவரது உயர்சுட்டெண் மதிப்பு 33 ஆக உள்ளது எனவும் கூறுகிறார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Victoria Meadows, Astronomy". University of Washington. Archived from the original on 2015-10-05. பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
  2. "Welcome to the Virtual Planetary Laboratory". washington.edu.
  3. Skibba, Ramin (October 21, 2016). "Kepler Finds Scores of Planets around Cool Dwarf Stars". Scientific American. https://www.scientificamerican.com/article/kepler-finds-scores-of-planets-around-cool-dwarf-stars/. பார்த்த நாள்: 26 October 2016. 
  4. "Victoria Meadows". scholar.google.com. Google Scholar Citations. பார்க்கப்பட்ட நாள் 22 November 2016.

வெளி இணைப்புகள் தொகு