விக்ரம்காட் தாலுகா

விக்ரம்காட் தாலுகா (Vikramgad taluka),இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் விக்ரம்காட் எனும் கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இத்தாலுகா 1 கணக்கெடுப்பில் உள்ள ஊர் மற்றும் 93 வருவாய் கிராமங்களும் கொண்டது. இத்தாலுகாவின் 98% மக்கள் கிராமப்புறங்களில்வாழ்கின்றனர். [2]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, விக்ரம்காட் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 137,625 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 68,489 மற்றும் பெண்கள் 69,136 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,009 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 21962 - 16% ஆகும். சராசரி எழுத்தறிவு 63.78% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 341 மற்றும் 1,26,368 ஆகவுள்ளனர். 98% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 99.26%, இசுலாமியர்கள் 0.44% மற்றும் பிறர் 0.31% ஆக உள்ளனர். இதன் பெரும்பான்மையான பேச்சு மொழி மராத்தி மொழி ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்காட்_தாலுகா&oldid=3782765" இலிருந்து மீள்விக்கப்பட்டது