விக்ரம்பாய் அர்ஜன்பாய் மேதம்
இந்திய அரசியல்வாதி
விக்ரம்பாய் அர்ஜன்பாய் மேதம் (Vikrambhai Arjanbhai Madam)(பிறப்பு 23 மார்ச் 1958) என்பவர் குசராத்து மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2004 முதல் 2014 வரை இரண்டு முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் குசராத்தின் ஜாம்நகர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக உள்ளார்.[1] இவர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் ஜாம்நகரில் பாஜக வேட்பாளரும் தனது மருமகளுமான பூனம் மேதத்திடம் தோற்றார்.
விக்ரம்பாய் அர்ஜன்பாய் மேதம் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் குசராத்து | |
பதவியில் 2017–2022 | |
முன்னையவர் | அகிர் மெராமன் மார்கி |
பின்னவர் | முலு ஆயர் பேரா |
தொகுதி | கம்பாலியா |
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை | |
பதவியில் 2004–2014 | |
முன்னையவர் | சந்திரேசு படேல் |
பின்னவர் | பூனம்பென் மாடம் |
தொகுதி | ஜாம்நகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 மார்ச்சு 1958 ஜாம்நகர், பம்பாய் மாகாணம், இந்தியா |
அரசியல் கட்சி | இதேகா |
வாழிடம் | ஜாம்நகர் |
As of 25 பிப்ரவரி, 2006 மூலம்: [1] |