விக்ரம் லால்

இந்தியத் தொழிலதிபர்

விக்ரம் லால் (Vikram Lal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார். 1942 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இந்தியாவின் புது தில்லியை தளமாகக் கொண்ட இந்திய வணிக வாகன உற்பத்தியாளரான ஐச்சர் மோட்டார் நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாகவுமாக அறியப்படுகிறார்.[1] டூன் பள்ளி இயக்குநர்கள் குழுவில் ஓர் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.[2]

விக்ரம் லால்
Vikram Lal
பிறப்பு1942 (1942) (வயது 82)
தேசியம்இந்தியர்
பணிதொழிலதிபர்
பட்டம்ஐச்சர் மோட்டார் நிறுவனம் நிறுவனர்
பிள்ளைகள்3, சித்தார்த்த லால் உட்பட
வலைத்தளம்
www.eicher.in

செருமனி நாட்டிலுள்ள டெக்னிசு பல்கலைக்கழக டார்ம்சுடாட்டு நிறுவனத்தில் இவர் இயந்திர பொறியியல் பயின்றார். [3][4][5]

1966 ஆம் ஆண்டில் தனது தந்தையால் நிறுவப்பட்ட குடும்ப நிறுவனமான இந்திய ஐச்சர் மோட்டார் நிறுவனத்தில் சேர்ந்தார். 1959 ஆம் ஆண்டில் ஐச்சர் இழுவைவண்டி ஆணையம் என்ற நிறுவனத்தின் பெயரில் இந்தியாவின் முதல் இழுவைவண்டி உற்பத்தியாளராக ஐச்சர் உற்பத்தியைத் தொடங்கியது. செருமன் இழுவைவண்டி உற்பத்தியாளர் ஐச்சருடன் கூட்டு முயற்சியில் இருந்தது, இறுதியில் 1986 ஆம் ஆண்டில் இலகுரக வணிக வாகனங்களிலும் பின்னர் கனரக வாகனங்களிலும் இந்நிறுவனம் கிளைத்தது.[6]

இவரது மகன் சித்தார்த்தா லால் இப்போது ஐச்சர் மோட்டார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.[7] அவரது மகள் சிம்ரன் குட் எர்த் நிறுவனத்தை கவனித்து வருகிறார். [3]

லால் தனது ஓய்வு கால ஆண்டுகளை தனது சொந்த குட்எர்த் கல்வி அறக்கட்டளையில் தன்னார்வத் தொண்டு செய்து வருகிகிறார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Eicher Motors' CEO on the Volvo deal". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 28 March 2012.
  2. "Vikram Lal". The DOON School. 7 October 2007. பார்க்கப்பட்ட நாள் 28 March 2012.
  3. 3.0 3.1 3.2 Karmali, Naazneen. "Indian Motorcycle Magnate Vikram Lal Becomes Billionaire On Rising Shares". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 August 2019.
  4. "Simran Lal: Your employees are the best brand ambassadors". 15 September 2017. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019.
  5. "Trustees & Patrons". IndiaSpend (in அமெரிக்க ஆங்கிலம்). 19 September 2018. பார்க்கப்பட்ட நாள் 6 August 2019.
  6. "Common Cause". பார்க்கப்பட்ட நாள் 2 April 2020.
  7. "Vikram Lal". Forbes. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்_லால்&oldid=3945783" இலிருந்து மீள்விக்கப்பட்டது