விசயநகரத்தில் சுற்றுலா

விசயநகரம் (Vizianagaram) என்பது இந்திய நாட்டின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். வங்காள விரிகுடா கடற்கரை, வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டைகள், கோயில்கள் மற்றும் நகரில் உள்ள சிறப்புமிக்க இயற்கை அடையாளங்கள் போன்றவை இந்நகரம் மற்றும் இதைச்சார்ந்த பகுதிகளின் சிறப்புகளாகும். பாரம்பரிய சுற்றுலாவிற்கு இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகள் துணைபுரிகின்றன. ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம், இம்மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சியையே கவனிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள துறையாக உள்ளது. சுற்றுலாத் தளங்களைப் பராமரிப்பது சுற்றுலாவை ஊக்குவித்து, சுற்றுலாத் துறையை வளர்ப்பது போன்றவை இம்மாநிலச் சுற்றுலாத் துறையின் பொறுப்புகளாகும்.

அரசுத் திட்டங்கள்

தொகு

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் புகைப்படப் போட்டியை நடத்துகிறது. சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் ஆந்திரப்பிரதேசத்தை தாயகமாகக் கொண்டவர்கள் மற்றும் ஆந்திராவிற்கு சுற்றுலாப் பயணிகளாக வருபவர்கள் என எவர் வேண்டுமானாலும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். மதம், கலாச்சாரம், வனவிலங்கு தொடர்பான காட்சிகள் அல்லது சுற்றுலா தொடர்பான ஆந்திரமாநிலத்தின் எழில்மிகு காட்சிகள் போன்றவற்றின் அசல் புகைப்படங்களை இப்போட்டியில் பங்கேற்பவர்கள் அனுப்ப வேண்டும். சுற்றுலாவை ஊக்கப்படுத்த இப்புகைப் படங்கள் ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இணைய தளத்தில் பயன்படுத்தப்படும். போட்டியாளர்கள் புகைப்படங்கள் சமர்ப்பிப்பதை ஊக்கப்படுத்த மாதந்தோறும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.[1]

கோட்டைகள் மற்றும் நிலக்குறியீடுகள்

தொகு
 
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள விசயநகரக் கோட்டையின் மேற்கு நுழைவாயில்
  • பண்டைய நகரமான பொப்பிலியில் பொப்பிலிக் கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பொப்பிலிப் போர் நடைபெற்றுள்ளது. இப்போரில் பொப்பிலி அரசரும் பிரெஞ்சு அரசாங்க நிதியுதவியுடன் விசயநகர சமீன்தாரும் போரிட்டனர். தியாகம், துணிவு, வீரம் போன்ற போரம்சங்களுடன் நிகந்த இக்கடுமையான போர் குறிப்பிடத்தகுந்த கலாச்சாரத் தாக்கத்தை உண்டாக்கியது. இப்போரில் ஈடுபட்ட வீரஞ்செறிந்த மக்களின் கதைகள் நாட்டுப்புறக் கலைகளின் பாடப்பொருளாக உருவாகிச் சிறந்தன. சரணடைவதவிட போராடி உயிர் நீப்பதே சிறந்தது என்று வீரத்துடன் கடுமையாக எதிர்த்துப் போராடி இன்னுயிர் ஈந்த பொப்பிலிய ராசாவுக்கு பெருமை சேர்க்கின்ற அமைதியான சாட்சியாக இப்பொப்பிலியக் கோட்டை அனைவரையும் ஈர்த்து நிற்கிறது.[2][3]
  • விசயநகரக் கோட்டை
  • பொண்டூர்

கோயில்கள்

தொகு
 
கோவிந்தாபுரம் கோயிலின் நுழைவாயில்

விசயநகரத்தில் பல கோயில்கள் சிறப்புற அமைந்துள்ளன.

  • கோவிந்தாபுரம் கோயில்[4]
  • யாமி விருக்சம்[5]
  • குமிலி கோயில்[6]
  • புண்யகிரி கோயில்[7]
  • பிடித்தள்ளி அம்மாவாரி கோயில்[8]
  • இராமதீர்த்தம் [9][10]: பண்டைய இராமச்சந்திர சுவாமியின் கோயில் இருப்பதால் இராமதீர்த்தம் புகழ்பெற்று விளங்குகிறது. இராமச்சந்திர சுவாமியின் சிற்பங்கள் மற்றும் சிலைகளுடன் அவருடைய மனைவி சீதாவின் சிலையும், அவருடைய தம்பி இலக்குவனின் சிலையும் வெள்ளி முலாம் பூசப்பட்ட எழில் தோற்றங்களை இங்குக் காணமுடியும். இராமநவமி , வைகுண்ட ஏகாதசி போன்ற திருவிழாக் காலங்களில் ஏராளமான பக்தர்களை இக்கோயில் ஈர்க்கிறது.
  • வேணுகோபால சுவாமி கோயில்[11]

மேற்கோள்கள்

தொகு
  1. "Photo Contest New..." aptourism.gov.in. Archived from the original on 2015-11-17. பார்க்கப்பட்ட நாள் 2015-11-11.
  2. "Vizianagaram". aptourism.gov.in. Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 2015-11-11.
  3. "Bobbili Fort". aptourism.gov.in. Archived from the original on 2016-08-01. பார்க்கப்பட்ட நாள் 2015-11-11.
  4. "Govindapuram Temple". aptourism.gov.in. Archived from the original on 2017-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-11-11.
  5. "Jami Vruksham". aptourism.gov.in. Archived from the original on 2017-08-12. பார்க்கப்பட்ட நாள் 2015-11-11.
  6. "Kumili Temple". aptourism.gov.in. Archived from the original on 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2015-11-11.
  7. "Punyagiri temple". aptourism.gov.in. Archived from the original on 2017-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-11-11.
  8. "Pydithalli Ammavari Temple". aptourism.gov.in. Archived from the original on 2017-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-11-11.
  9. "Ramatheertham". aptourism.gov.in. Archived from the original on 2016-08-26. பார்க்கப்பட்ட நாள் 2015-11-11.
  10. Ramateertham. https://en.wikipedia.org/w/index.php?title=Ramateertham&oldid=687509946. 
  11. "Venu Gopala Swamy Temple". aptourism.gov.in. Archived from the original on 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2015-11-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசயநகரத்தில்_சுற்றுலா&oldid=3850506" இலிருந்து மீள்விக்கப்பட்டது