விசால் சிக்கா

விசால் சிக்கா (Vishal Sikka) என்பவர் ஓர் இந்திய அமெரிக்கர். இன்போசிஸ் குழுமத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகவும் மேலாண் இயக்குநராகவும் பதவியில்  இருந்தவர்.  2017 ஆகத்து 18 இல் அப்பொறுப்புகளிலிருந்து விலகினார். தற்போது இன்போசிசின் செயல் துணைத் தலைவராக அமர்த்தப்பட்டுள்ளார்.[1] 2017 ஆம் ஆண்டுக்குரிய மிகு அதிகாரம் கொண்ட மனிதர்களில் சிக்கா 32 ஆவது எண்ணில் உள்ளதாக இந்தியா டுடே கணித்துள்ளது.[2] இன்போசிசு குழுமத்தில் சேருவதற்கு முன்பு சாப் என்ற செருமானிய மென்பொருள் பன்னாட்டுக் குழுமத்தில் உயர் பதவிகளில் இருந்து 12 ஆண்டுகள் பணியாற்றினார். விசால் சிக்கா 2014 மே மாதத்தில் சாப் நிறுவனத்திலிருந்து விலகி 2014 சூன் மாதத்தில் இன்போசிசு குழுமத்தில் சேர்ந்தார்

விசால் சிக்கா

பிறப்பும் படிப்பும் தொகு

விசால் சிக்கா இந்தியாவில் மத்தியப்பிரதேசத்தில் சாஜாப்பூர் என்ற ஊரில், ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில்  பிறந்தார். இவரின் தந்தை  இரயில்வே பொறியாளர் மற்றும் தாயார் ஆசிரியர் ஆவர். இவருக்கு ஆறு அகவை ஆகும் போது, இவரது குடும்பம்  குசராத்து  மாநிலத்தில், வடோதராவுக்குக் குடிபெயர்ந்தது  அங்கு ரோசரி உயர்நிலைப் பள்ளியில் சிக்கா படித்தார். பின்னர் வடோதரா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக் கழகத்தில்  சேர்ந்து கணினிப் படிப்பு படிக்கத் தொடங்கியபோதிலும் இடையிலே விட்டு விட்டார். நியூயார்க்கில் உள்ள சைராகூஸ்  பல்கலைக்கழகத்தில் கணினியில் பட்டம் பெற்றார். 1996 இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார்.[3]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசால்_சிக்கா&oldid=3095064" இலிருந்து மீள்விக்கப்பட்டது