விசெவோலத் சரனோவ்

விசெவோலத் சரனோவ் (Vsevolod Sharonov) (1901–1964) ஓர் உருசிய வானியலாளர் ஆவார்.

வாழ்க்கை

தொகு

இவர் புனித பீட்டர்சுபர்கில் 1901 மார்ச்சு 10 இல் பிறந்தார்.[1] இவர் இலெனின்கிராதில் 1964 நவம்பர் 26 இல் இறந்தார்.[1]

கல்வி

தொகு

இவர்1918 இல் பள்ளிப் படிப்பை முடித்தார்[1] பின்னர் பெத்ரோகிராது பல்கலைக்கழகத்தில் 1926 இல் பட்டப் படிப்பை முடித்தார்.[1]

வாழ்க்கைப்பணி

தொகு

இவரது பெருபாலான பணிகள் புல்கோவோ வான்காணகத்திலேயே அமைந்தது.[1] இவ்ர் இலெனின்கிராது பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். அப்போது அதன் வான்காணகத்துக்கும் இயக்குநராக இருந்தார்.[2] இவரது ஆய்வு ஆர்வம் கோளாய்விலும் அவற்றின் வளிமண்டல ஒளியியலிலும் குவிந்திருந்தது.

தகைமைகள்

தொகு

பின்வருவன இவரது பெயரால் அழைக்கப்படுகின்றன:

நூல்தொகை

தொகு

இவர் தன் வாழ்நாளில் 300 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[3]

இவர் பின்வரும் நூல்களின் ஆசிரியர்:

  • கோள்களின் இயல்புகள்[4]
  • ஆழ்தொலைவுப் பொருள்களின் காண்திற அளவீடும் கணிப்புகளும்
  • செவ்வாய்
  • சூரியனும் அதன் நோக்கீடுகளும்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Basu, S.K. Encyclopaedic biography of the world great physicists. Global Vision Publishing House. p. 1453. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788182201569. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.
  2. New Scientist. Reed Business Information. p. 594. பன்னாட்டுத் தர தொடர் எண் 0262-4079. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.
  3. "OBITUARY: Vsevolod V. Sharonov; Fernand Baldet; Erich Schoenberg". Irish Astronomical Journal 9: 166. December 1969. Bibcode: 1969IrAJ....9..166.. http://adsabs.harvard.edu/full/1969IrAJ....9..166.. பார்த்த நாள்: 2014-10-31. 
  4. Vsevolod Vasilʹevich Sharonov (1964). The Nature of Planets: (Priroda Planet). Israel Program for Scientific Translations.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசெவோலத்_சரனோவ்&oldid=2231863" இலிருந்து மீள்விக்கப்பட்டது