விசைத்தமிழ்
விசைத்தமிழ் ஒரு தமிழ் உள்ளீடு மென்பொருள். சர்மா ப்ராடக்ஸ் மற்றும் சொல்யூசன்ஸ் நிறுவனத்தினர் இதனை உருவாக்கியுள்ளனர்.
இதனைப் பயன்படுத்தி டைப்-ரேட்டர், எழுத்துப்பெயர்ப்பு முறை போன்று 12 வகையான முறையில் பேஜ்மேக்கர், வேர்டு, அடோப் இன்டிசைன், உட்பட எல்லா மென்பொருள்களிலும் தட்டச்சு செய்யலாம். விண்டோஸ் XP, விண்டோஸ் விஸ்டா ஆகிய இயங்குதளங்களில் இது செயல்படும். தமிழ் மொழியில் உள்ள ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக் குடும்பங்களும், 10-ற்கும் மேற்பட்ட விசைபலகை வகைகளும் கொண்டு இயங்கூடியது
இந்த மென்பொருட்களோடு உடனுள்ள துணை மென்பொருட்கள்
- ஸ்பெல் செக் : 23 இலட்சம் வார்த்தைகளை உள்ளடக்கிய தமிழ் சொற்திருத்தி, விசைத்தமிழ் மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது.
- ஆட்டோ கரெக்ட் : இவை தமிழ் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தவிர்க்க உதவுகிறது.
- ஃபான்ட் சாம்ப்ளர் : ஒரே நேரத்தில் பல்வேறு எழுத்துருக்களில் எழுத்துகளை முன்தோற்றம் காட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழ் - ஆங்கிலம் அகராதி : இதில் ஏறத்தாழ 60,000 ஆங்கில வார்த்தைகளுக்கு 2,30,000 தமிழ் பொருள்களை கொண்டுள்ளது.
- ஃபாண்ட் அனலைசர் - மூலக்கோப்புகளின் எழுத்துருகளைக் கண்டறிந்து மாற்ற
- அகர வரிசைப்படுத்துதல்
வெளி இணைப்புகள்
தொகு- [www.tamil.sarma.co.in தமிழ் சர்மா]
- தமிழ் வணிகம் பரணிடப்பட்டது 2020-09-29 at the வந்தவழி இயந்திரம்