விசையாள்சில்லு

விசையாள்சில்லு என்பது குறிப்பிடத்தக்க அளவு சடத்துவத் திருப்புதிறன் கொண்டதும், சுழற்சி ஆற்றலைச் சேமிக்க உதவுவதுமான ஒரு எந்திரவியல் கருவி ஆகும். விசையாள்சில்லுகள் அவற்றின் சுழற்சி வேகத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை எதிர்த்து நிற்கக்கூடியவை. இந்த இயல்பு ஆடுதண்டு இயந்திரங்களால் உருவாக்கப்படும் ஏற்றத்தாழ்வு கொண்ட முறுக்கு விசையை வலுமூலமாகக் கொண்டு இயங்கும் சுழல் அச்சுக்களின் சுழற்சிவேகத்தை, உறுதிப்படுத்த உதவுகின்றது. அண்மைக்காலங்களில், வண்டிகளிலும், மின்னுற்பத்தி இயந்திரங்களிலும் ஆற்றல் சேமிப்புக் கருவியாகப் பயன்படுத்துவதற்காக விசையாள்சில்லு தொடர்பான ஆய்வுகள் பரவலாக நடைபெறுகின்றன.

இறுக்கத்தன்மை கொண்ட வடிவமைப்புக்களிலும் கூடுதலான வேக வீதத்தைத் தரக்கூடிய விசையாள்சில்லு ஒன்றின் நிகழ்படம். லியொனார்டோ டா வின்சியின் வரைபடத்தைத் தழுவி உருவாக்கப்பட்டது.

பயன்பாடு

தொகு

விசையாள்சில்லுகள் பண்டைக்காலம் முதலே பயன்பாட்டில் இருந்துவருகின்றன. மட்பாண்டம் வனைதற்சில்லு இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு ஆகும். தொழில் புரட்சியின்போது ஜேம்சு வாட் தனது நீராவி எந்திரத்தில் பயன்படுதியதன் மூலம் விசையாள்சில்லின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தார். இவரது சம காலத்தைச் சேர்ந்தவரான ஜேம்சு பிக்கார்ட் விசையாள்சில்லை மாற்றச்சு ஒன்றுடன் சேர்த்துப் பயன்படுத்தியதன் மூலம், இடுவழி இயக்கத்தை சுழற்சி இயக்கமாக மாற்றினார்.

விசையாள்சில்லுகள், துளையிடு எந்திரங்களிலும், தறையும் எந்திரங்களிலும் பயன்படுகின்றன. இவற்றில் விசையாள்சில்லுகள் மோட்டாரிலிருந்து கிடைக்கும் ஆற்றலைச் சேமித்துப் பின்னர் வெளிவிடுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
 
விசையாள்சில்லு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசையாள்சில்லு&oldid=1629972" இலிருந்து மீள்விக்கப்பட்டது