விச்சிசுலாவ் தீகனொவ்

விச்சிசுலாவ் வசிலியேவிச் தீகனொவ் (Vyacheslav Vasilyevich Tikhonov, (உருசியம்: Вячеслав Васильевич Тихонов, பெப்ரவரி 8, 1928டிசம்பர் 4, 2009[1]) என்பவர் சோவியத், மற்றும் இரசிய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர். இவர் சோவியத் காலத்தில் வெளிவந்த "வசந்தத்தின் பதினேழு கணங்கள்" (Seventeen Moments of Spring, Семнадцать мгновений весны) என்ற தொலைக்காட்சித் தொடரில் "ஸ்டேர்லிட்சு" என்ற சோவியத் உளவாளியாக நடித்துப் புகழ் பெற்றவர். இவர் "சோவியத் ஒன்றியத்தின் மக்கள் கலைஞர்" (1974), "சோசலிசத் தொழிலின் வீரர் (1982) போன்ற பல அரசு விருதுகளைப் பெற்றவர்.

விச்சிசுலாவ் தீகனொவ்
Vyacheslav Tikhonov

1998 இல் தீகனொவ்
இயற் பெயர் விச்சிசுலாவ் வசிலியேவிச் தீகனொவ்
பிறப்பு (1928-02-08)8 பெப்ரவரி 1928
பாவ்லொவ்சுக்கி பசாத், சோவியத் ஒன்றியம்
இறப்பு 4 திசம்பர் 2009(2009-12-04) (அகவை 81)
மாஸ்கோ, இரசியா
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1948–2006
துணைவர் நொன்னா மொர்டியுகோவா
(1948–1963)
தமாரா தீகொனொவா
(1968–2009)
இணையத்தளம் http://vtikhonov.ru/

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

தீகனொவ் மாஸ்கோவுக்கு அருகில் உள்ள பாவ்லொவ்சுக்கி பசாத் என்ற இடத்தில் பிறந்தார். உலோகத் தொழிலாளியாக வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்த இவர் 1945 ஆம் ஆண்டில் நடிப்புலகத்தில் புகுந்தார்[1]. கெராசிமொவ் திரைப்படக் கல்லூரியில் நடிப்புத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டு 1950 இல் சிறப்புப் பட்டம் பெற்று வெளியேறினார். அதன் பின்னர் மேடை நாடகங்களில் ஆறு ஆண்டுகள் நடித்தார்.

1948 இல் அக்காலத்தில் புகழ்பெற்ற நடிகையாகத் திகழ்ந்த "நொன்னா மொர்டியுகோவா" என்பவரைத் திருமணம் புரிந்தார்[2]. 1963 இல் மணமுறிவு பெற்று[3], தமாரா இவானொவ்னா என்ற நடிகையை 1969 இல் மணம் புரிந்தார்[4].

நடிப்புலகில்

தொகு

1948 ஆம் ஆண்டில் முதன் முதலாகத் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். 1958 ஆம் ஆண்டில் வெளிவந்த "அது நடந்தது பென்கோவோவில்" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் அதிகம் பேசப்படலானார். "வசந்தத்தின் பதினேழு கணங்கள்" என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரில் இவர் தோன்றி நடித்தார். இரண்டாம் உலகப் போரின் முடிவுக் கட்டத்தில் 1945 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் நாசி ஜெர்மனியரின் வீழ்ச்சிக்கு முன்னர் 17 நாட்கள் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இத்தொடர் தயாரிக்கப்பட்டிருந்தது. "நாசிகளுக்கும், அமெரிக்க மற்றும் பிரித்தானியர்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்படுவதாயிருந்த இரகசிய அமைதி உடன்படிக்கையை குலைப்பதற்கு ஜெர்மனியில் இருந்த சோவியத் உளவாளியின் பாத்திரத்தில் தீகனொவ் தோன்றியிருந்தார்"[1]. இத்திரைப்படத்தை இரசியாவின் பல்வேறு மட்டங்களிலும் பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் கண்டு களித்தனர்.

இவற்றை விட லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற "போரும் அமைதியும்" (1968) திரைப்படத்தில் நடித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Soviet Union's favorite 'spy' dies aged 81. RIA Novosti. December 4, 2009
  2. IMDb
  3. NONNA MORDYUKOVA; Star of 'The Commissar', cause celèbre of glasnost cinema.ம் தி இண்டெபெண்டெண்ட் (லண்டன்) ஜூலை 12, 2008
  4. IMDb

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விச்சிசுலாவ்_தீகனொவ்&oldid=3820372" இலிருந்து மீள்விக்கப்பட்டது