விஜமா யாதவ்

இந்திய அரசியல்வாதி

விஜமா யாதவ் (Vijama Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மறைந்த தலைவர் ஜவகர் யாதவின் (பண்டிட்) மனைவி ஆவார். விஜமா யாதவ் 2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக பிரதாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

விஜமா யாதவ்
Vijama Yadav
சட்டமன்ற உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
முன்னையவர்முகமது முஜ்தாபா சித்திக்
தொகுதிபிரதாப்பூர்
சட்டமன்ற உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில்
2012–2017
முன்னையவர்கோகு லால் யாதவ்
பின்னவர்முகமது முஜ்தாபா சித்திக்
தொகுதிபிரதாப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1971
அலகாபாத்து
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
துணைவர்ஜவகர் யாதவ் (பண்டிட்)
பிள்ளைகள்தேவேந்திர பிரதாப் சிங் யாதவ், ஜோதி யாதவ்
வாழிடம்(s)அலகாபாத்து, இலக்னோ

அரசியல்

தொகு

விஜமா யாதவின் கணவர் ஜவகர் யாதவ் அக்கா பண்டிட், அலகாபாத்தின் அப்போதைய ஜுன்சி சட்டமன்றத் தொகுதி சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வலுவான தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஜவகர் யாதவ் என்ற பண்டிட், முலாயம் சிங் யாதவின் சிறப்பு நம்பிக்கைக்கு உரிய நபர்களில் ஒருவரானார். படிப்படியாக இவர் மதுபானத் தொழிலிலும், யமுனை கங்கைப் படுகையிலிருந்து மோராங் மணலை அகழும் தொழிலிலும் ஈடுபட்டார். அதில் இவர் கார்வாரியாவுடன் கும்பல் சண்டையிட்டார். [3] சூன் 1995-ல் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு வீழ்ந்தது. 1996-ல் சட்டசபை கலைக்கப்பட்ட பிறகு, சட்டமன்ற உறுப்பினராக இருந்த யாதவிற்கு பாதுகாப்பு விலக்கப்பட்டது. இவர் பாதுகாப்பிற்காக அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தார். ஆனால் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டது. ஆகத்து 13, 1996 அன்று, திரிவேணி சங்கமத்தில் அனுமான் ஜியைப் பார்க்கச் சென்றபோது, இவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்குக் காரணமானவர்களாக கர்வாரியா குடும்பம் கொலைக்குற்றம் சாட்டப்பட்டது. கணவரின் கொலைக்குப் பிறகு, விஜமா யாதவ் அரசியலுக்கு வந்து 1996, 2002 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தொடர்ந்து இரண்டு முறையும் சமாஜ்வாதி கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007 மற்றும் 2017 சட்டசபைத் தேர்தல்களில் தோல்வியடைந்தார். இருப்பினும் 2012 மற்றும் 2022 சட்டமன்றத் தேர்தல்களில் விஜமா யாதவ் பிரதாப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

குடும்பம்

தொகு

விஜமா யாதவுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகளின் பெயர் ஜோதி யாதவ். இவர் பிரயாக்ராஜின் புல்பூர் தொகுதியின் பகுதி பிரமுகராக உள்ளார். மகன் கோலு என்ற தேவேந்திர பிரதாப் சிங் யாதவ் பிரயாக்ராஜ் மாநகராட்சியின் கௌரவ உறுப்பினராக இருந்துள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Uttar Pradesh Election Results 2022". NDTV. பார்க்கப்பட்ட நாள் 12 March 2022.
  2. "ALL WINNERS LIST UTTAR PRADESH ASSEMBLY ELECTIONS 2022". News18. பார்க்கப்பட்ட நாள் 12 March 2022.
  3. "जब जवाहर पंडित ने करवरिया बंधुओं के सीने पर रायफल तान दी थी". m.thelallantop.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.
  4. "Kahani UP Ki: यादव से 'पंडित' बना मुलायम का वो खासमखास विधायक, जिसे बीच सड़क पर घेरकर गोली मारी गई". Navbharat Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜமா_யாதவ்&oldid=3689490" இலிருந்து மீள்விக்கப்பட்டது