விஜயநகரப் பேரரசில் சமூக வாழ்க்கை
14 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் காலம் தென்னிந்தியாவில் வளம் நிறைந்த காலமாகக் கருதப்படுகிறது. பல பார்வையாளர்கள், தூதர்கள் மற்றும் ஆசிரியர்களால் எழுதப்பட்ட பல பயணக்குறிப்புகள் துடிப்பான ஒரு சகாப்தமாக இருந்தமைக்கான ஏராளமான சான்றுகளை வழங்குகின்றன. வேளாண்மை அரசின் முக்கிய ஆதாரமாகவும் துங்கபத்ரா ஆறு தலைநகரத்தின் வாழ்க்கையை இயக்கும் இரத்தமாகவும் கருதப்பட்டது.
கிருஷ்ணா, காவேரி மற்றும் கோதாவரி ஆகியவை இந்த நிலத்தின் வழியாகப் பாய்கின்ற மற்ற பெரிய ஆறுகளாக விளங்குகின்றன. சங்கமா வம்சத்தின் ஆட்சியின் 230 ஆண்டு கால ஆட்சியின் போது மிகவும் வெற்றிகரமான காலமாக தேவராயா II இன் ஆட்சிக்காலமாகவும், வளமும், வெற்றியும் உச்சகட்டத்தில் இருந்த காலம் கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலமாகவும் அமைந்தன. கால்வாய்கள், அரண்காப்பு மதில்கள், நீர் சேமிப்பு குளங்கள் ஆகிவை கட்டியெழுப்பப்பட்டதன் விளைவாக தொடர்ந்த முன்னேற்றம் ஏற்பட்டது. ஐரோப்பியர்கள் மற்றும் பாரசீகர்களுடன் மேற்கு கடல் துறைமுகங்களின் வழியாக நடந்த வர்த்தகம் இலாபகரமானதாக இருந்தது. கோவில் மற்றும் பாசன வசதிக்கான கட்டுமானப் பணிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக சிற்பிகள், கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் சுரங்கம் சார் பணியாளர்களின் தேவை அதிகமாக இருந்தது.
மக்கள்
தொகுஇந்து சாதி அமைப்பு முறை விஜயநகரப் பேரரசில் பரவலாக இருந்தது. ஒவ்வொரு சமுதாயத்திலும் மூத்தோர்கள் சாதி ஒழுங்குமுறைகளை கவனித்து வந்தனர். இருப்பினும், போரிலும் மற்ற சேவைகளிலும் தங்களை வேறுபடுத்திக் காட்டியவர்கள் சாதி அல்லது மத பாகுபாடு இல்லாமல் பதவி உயர்வு வழங்கப்பட்டு ஊக்கப்படுத்தப் பட்டனர்.நகரங்கள் மற்றும் மாகாண சபைகளில் அனைத்து சாதி, மதப் பிரிவினைச் சார்ந்தவர்களின் பிரதிநிதித்துவமும் இருந்தது. மங்களூரு மற்றும் அதைப் போன்ற பகுதிகளில் அன்ஜமணா குழு சிறுபான்மை முஸ்லீம்களை பிரதிநிதித்துவப்படுத்தியது.
பெண்கள் நூற்றாண்டுகளாக அடைந்திருந்த சுதந்திரமும் மரபும் தொடர்ந்தது.[1] சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கம் அரச குடும்பத்தினர் மற்றும் படைவீரர்களின் குடும்பங்களில் எங்கும் நிறைந்திருந்தது. பெண்கள் வணிகம். அமைச்சுப் பணிகள் மற்றும் மல்யுத்தம் போன்றவற்றில் பங்கெடுத்துக் கொண்டனர். சமூகமானது பெரும்பாலும் ஒரு தார மணப் பழக்கம் உடையதாக இருந்தது. ஆனால், அரசரும், உயர்குடி மக்களும் அந்தப்புர வாழ்க்கையைத் தொடர்ந்தனர். தேவதாசி முறை மற்றும் விபச்சாரத் தொழில் செழித்திருந்தது. அவர்களுக்கெனவே சில தெருக்கள் ஒதுக்கப்பட்டருந்தன. பெண்கள் இரவிக்கை மற்றும் சேலைகள் அணிந்திருந்தனர். ஆண்கள் பெரும்பாலும் இடுப்புக்குக் கீழ் மட்டும் ஆடைகள் அணிந்தனர். அவ்வப்போது சட்டைகளும் அணிந்தனர். ஆண்கள் பெண்களைப் போல நகைகளை அணிந்தனர். விரல்களில் மோதிரங்கள், காதுகளில் வளையங்கள், கழுத்தணி, வளையல்கள் மற்றும் கைக்காப்பு ஆகியவை பிரபலமானவை. கொண்டாட்டங்களின் போது, ஆண்கள், பெண்கள் இருவருமே தலைகளில் பூக்களுடன் கூடிய பட்டைகளை அணிந்து கொண்டு, சந்தனம், பன்னீர், பூக்கள், புனுகு, கஸ்துாரி ஆகியவற்றால் ஆன நறுமணப்பொருட்களை பூசிக்கொண்டு இருப்பர். பல விளையாட்டுப் பலகைகள் கண்டுபிடிப்பட்டு கோயில்களின் தளங்கள், பாறைகள், மற்றும் கூழாங்கற்கள் ஆகியவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. முக்கிய பொது இடங்களில் ஓய்வு நேர பொழுது போக்குகள் மற்றும் சமூக இடைவினைகள் நடந்ததற்கான போதிய சான்றுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான விளையாட்டுக்கள் இன்னும் கூட விளையாடப்படுகின்றன. சில விளையாட்டுக்கள் இன்னும் அடையாளம் காணப்பட வேண்டியவையாக உள்ளன.[2]
நிர்வாகம்
தொகுஆட்சி முறை
தொகுகலை மற்றும் கட்டிடக்கலைகளில் அனைத்து புகழ்பெற்ற சாதனைகள் இருந்தும், பேரரசுக்கு போர்களை நிர்வகிப்பது பெரும் பிரச்சனையாக இருந்தது. ஆட்சியின் ஒவ்வொரு அம்சமும் முஸ்லிம் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான ஒரே நோக்கத்தைத்தான் சுட்டிக் காட்டியது.[3] பேரரசு விரிவடைந்தாலும் கூட, தமது பேரரசுடன் இணைத்துக் கொண்ட பகுதிகளில் பாரம்பரியமான கலாச்சாரங்களை தொடர்ந்து பின்பற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ In the opinion of Dr. S.A. Saletore, A Concise History of Karnataka pp 179, Dr. S.U. Kamath
- ↑ In the opinion of Alexandra Mack, New Light on Hampi, Recent research in Vijayanagara, edited by John M. Fritz and George Michell, pp 38
- ↑ In the opinion of Dr. K.M. Panikkar, A Concise history of Karnataka pp 175-176, Dr. S.U. Kamath