விஜயலட்சுமி அட்லூரி

விஜயலட்சுமி அட்லூரி (Vijayalakshmi Atluri)(பிறப்பு 1956) [1] தகவல் அமைப்பு பாதுகாப்பு மற்றும் தரவுத்தள மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்ற இந்தியக் கணினி விஞ்ஞானி ஆவார். இவர் ரட்ஜர்ஸ் தொழில் பள்ளி - நெவார்க்கில் மேலாண்மை அறிவியல் மற்றும் தகவல் அமைப்புகளின் பேராசிரியராக உள்ளார். அட்லூரி மக்கள் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

விஜய் அட்லூரி
பிறப்புவிஜயலட்சுமி அட்லூரி
1956 (அகவை 67–68)
துறைகணினியியல், தகவல் அமைப்பு பாதுகாப்பு, தரவுத்தளம் நிர்வாகம்
பணியிடங்கள்ஆச்சார்யா நாகார்ஜீணா பல்கலைக்கழகம்
ஆந்திரப் பல்கலைக்கழகம்
ரட்சர்ஜர்சு வணிகப் பள்ளி, – நெவார்க் மற்றும் நியூ பிரன்சுவிக்
மக்கள் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காக்கிநாடா
இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர்
ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகம்
ஆய்வேடுபல நிலை பாதுகாப்பான தரவுத்தளங்களில் ஒருசந்திக் கட்டுப்பாடு (1994)
ஆய்வு நெறியாளர்சுசில் ஜஜோடியா

கல்வி

தொகு

அட்லூரி மே 1977-இல் காக்கிநாடாவிலுள்ள ஜவகர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியலில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தார். சூன் 1979-இல் காரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல் (கட்டுப்பாடுகள் மற்றும் ஆட்டோமேஷன்) துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அட்லூரிஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் மே 1994-இல் முனைவர் பட்டம் பெற்றார். இவரது ஆய்வுக் கட்டுரை பல நிலை பாதுகாப்பான தரவுத்தளங்களில் ஒருசந்திக் கட்டுப்பாடு என்ற தலைப்பிலிருந்தது. இவரது முனைவர் பட்ட ஆலோசகர் சுசில் ஜஜோடியா ஆவார்.[2]

அட்லூரி ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் ஆகத்து 1980 முதல் திசம்பர் 1982 வரையிலும், மீண்டும் திசம்பர் 1983 முதல் மார்ச் 1985 வரையிலும் விரிவுரையாளராக பணியாற்றினார். பின்னர் திசம்பர் 1982 முதல் திசம்பர் 1983 வரை ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். மார்ச் 1985 முதல் ஆகத்து 1990 வரை, இவர் நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் கணினி பொறியியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருந்தார்.[2]

அட்லூரி ஆகத்து 1990 முதல் ஆகத்து 1994 வரை ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பான தகவல் அமைப்புகளுக்கான மையத்தில் ஆராய்ச்சி உதவியாளராக இருந்தார்.[2]

அட்லூரி அக்டோபர் 1996 இல் நெவார்க் - ரட்ஜர்ஸ் வணிகப் பள்ளியில் மேலாண்மை முனைவர் பட்ட திட்டத்தின் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். 1996-இல், இவர் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் தொழில் விருதை வென்றார்.[2] அட்லூரி சூலை 1995 முதல் சூன் 2001 வரை உதவிப் பேராசிரியராகவும், சூலை 2001 முதல் சூன் 2006 வரை இணைப் பேராசிரியராகவும் இருந்தார். சூலை 2006-இல் மேலாண்மை அறிவியல் மற்றும் தகவல் அமைப்புகள் துறையில் பேராசிரியரானார். அட்லூரி தரவுத்தள மேலாண்மை, கணினி தகவல் அமைப்புகள், தகவல் அமைப்புகள் பாதுகாப்பு, மின்னணு வர்த்தகம், கணினி கட்டமைப்பு மற்றும் கணினி மொழிகள் ஆகிய பாடங்களைக் கற்பிக்கிறார்.[2]

2010-இல், இவர் மக்கள் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையின் ஆலோசனைக் குழுவில் சேர்ந்தார்.[2][3]

அட்லூரி பிப்ரவரி 2007 முதல் பிப்ரவரி 2011 வரை தேசிய தர மற்றும் தொழில்நுட்ப நிறுவன தகவல் தொழில்நுட்ப ஆய்வகம், கணினி பாதுகாப்பு பிரிவு, அமைப்பு & வலையமைப்பு குழுவில் கணினி விஞ்ஞானியாக இருந்தார். செப்டம்பர் 2011 முதல் செப்டம்பர் 2013 வரை, இவர் தகவல் மற்றும் நுண்ணறிவு அமைப்புகள், தகவல் ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் மற்றும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான மின்வெளி ஆகியவற்றின் தேசிய அறிவியல் அறக்கட்டளைப் பிரிவில் திட்ட இயக்குநரானார்.[2]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

தொகு
  • Atluri, Vijay; Jajodia, Sushil; George, Binto (2000). Multilevel Secure Transaction Processing (in ஆங்கிலம்). Springer US. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7923-7702-3.

மேற்கோள்கள்

தொகு
  1. "VIAF: Atluri, Vijay". பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Atluri, Vijay. "Curriculum Vita" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.
  3. "Dr. Vijay Atluri". University of the People. பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.

வெளி இணைப்புகள்

தொகு
  • Vijay Atluri publications indexed by Google Scholar
  • Vijay Atluri's publications indexed by the Scopus bibliographic database. (subscription required)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயலட்சுமி_அட்லூரி&oldid=3886967" இலிருந்து மீள்விக்கப்பட்டது