விஜய் அசாரே கிண்ணம்
விஜய் அசாரே கோப்பை (The Vijay Hazare Trophy) ரஞ்சிக் கோப்பை ஒருநாள் போட்டி எனவும் அழைக்கப்படும் இந்தத் தொடரானது குறைந்த பட்ச ஓவர்களைக் கொண்டு விளையாடப்படும் ஒரு உள்ளூர்ப் போட்டித் தொடராகும்.[1] இதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் அணிகள் இதில் விளையாடுகின்றன. இது 2002- 2003 ஆம் ஆண்டு முதலாக விளையாடப்பட்டு வருகிறது. விஜய் அசாரேவின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நாடு(கள்) | இந்தியா |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
வடிவம் | பட்டியல் அ துடுப்பாட்டம் |
முதல் பதிப்பு | 2002–03 |
கடைசிப் பதிப்பு | 2018-2019 விஜய் அசாரே வாகையாளர் கோப்பை |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல் முறை, மிகையாட்டம் (பிளே ஆஃப்) |
மொத்த அணிகள் | 37 |
தற்போதைய வாகையாளர் | மும்பை துடுப்பாட்ட அணி |
அதிகமுறை வெற்றிகள் | தமிழ்நாடு துடுப்பாட்ட அணி (5 முறை) |
வலைத்தளம் | Bcci.tv |
இந்தத் தொடரில் தமிழகத் துடுப்பாட்ட அணி 5 முறை கோப்பை வென்று அதிகமுறை கோப்பை வென்றவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 2018 -19 ஆம் ஆன்டிற்கான விஜய் அசாரே துடுப்பாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் தில்லித் துடுப்பாட்ட அணியை வீழ்த்தி மும்பை அணி வாகையாளரானது. [2]
சான்றுகள்
தொகு- ↑ "viay hazare trophy 2018-19".
- ↑ "Dubey, Tare the stars as Mumbai lift Vijay Hazare title after 12 years". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 October 2018.