என். விஜய் சிவா

(விஜய் சிவா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

என். விஜய் சிவா (பி. 29 மார்ச், 1967) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். இவர் டி. கே. ஜெயராமனின் மாணாக்கர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

என்.விஜய் சிவா, அகிலா சிவாவுக்கும் ஏ. என். சிவாவுக்கும் மகனாகப் பிறந்தார். பத்மா சேஷாத்ரி பால பவன் உயர்நிலைப்பள்ளி, சென்னையில் இவர் படித்தார். இளநிலைப்பட்டத்தை சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் முதுநிலைப்பட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். இவர் மிருதங்கமும் வாசிக்கக்கூடியவர். இதற்குரிய பயிற்சியை கும்பகோணம் ராஜப்பா ஐயரிடம் பெற்றுள்ளார்.

தொழில் வாழ்க்கை

தொகு

இந்தியா முழுக்க அனைத்து முக்கிய சபாக்களில் இவர் பாடியுள்ளார். தனது இசைக் கச்சேரிகளை அமெரிக்கா,கனடா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் நிகழ்த்தியுள்ளார்.

விருதுகள்

தொகு
  • இசைப் பேரோலி, 1995 - கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்
  • 'சிறப்பான இசை தந்த இளங்கலைஞர்' விருது, 1995 - மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை
  • கல்கி கிருஷ்ணமூர்த்தி விருது, 1996 - கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை
  • சங்கீத கலாசாரதி பட்டம், 2014; வழங்கியது: பார்த்தசாரதி சுவாமி சபா, சென்னை[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sangeetha Kalasarathy title for Vijay Siva". பார்க்கப்பட்ட நாள் 21 டிசம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._விஜய்_சிவா&oldid=2719259" இலிருந்து மீள்விக்கப்பட்டது