விஜய் பர்சே

விஜய் பர்சே (Vijay Barse)(பிறப்பு 5 பிப்ரவரி 1946) என்பவர் இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார். இவர் இசுலம் புட்பால் என்ற அமைப்பை நிறுவியதற்காக அறியப்படுகிறார். இது பின்தங்கிய குழந்தைகளைக் கால்பந்து மூலம் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவரது முயற்சிகள் நாக்பூரில் பின்தங்கிய குழந்தைகளைக் கால்பந்து விளையாட்டை ஆதாரமாகப் பயன்படுத்தி மேம்படுத்த வழிவகுத்தது.[1]

விஜய் பர்சே
Vijay Barse
பிறப்பு5 பிப்ரவரி 1946
நாக்பூர், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிசமூக சேவகர்
அறியப்படுவதுஇசுலம் சாக்கர்

தொழில்

தொகு

நாக்பூரில் உள்ள கிசுலாப் கல்லூரியில் விளையாட்டு ஆசிரியராக பர்சே பணியாற்றினார். 2001ஆம் ஆண்டில், இவர் இசுலம் சாக்கர் அமைப்பை நிறுவினார். பின்தங்கிய குழந்தைகள் கால்பந்து விளையாடுவதைக் கண்டறிந்து, ஒரு கால்பந்து குழுமத்தினை தொடங்கினார். இவர் தனது மனைவி ரஞ்சனா பர்சே மற்றும் மகன் அபிஜீத் பர்சே ஆகியோருடன் கிரிடா விகாசு சன்ஸ்தா நாக்பூர் என்ற அமைப்பினை நிறுவினார்.[2]

நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கிய சத்யமேவ ஜெயதே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 3 தொடரின் 1வது நிகழ்ச்சியில் விஜய் பர்சேயின் கதையும் வெளியிடப்பட்டது.

பிரபலமான கலாச்சாரத்தில்

தொகு

நாகராஜ் மஞ்சுளே எழுதி இயக்கி 2022ஆம் ஆண்டு வெளியான விளையாட்டுத் திரைப்படமான ஜுண்ட் திரைப்படத்தில் பர்சே மற்றும் இசுலம் சாக்கரின் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் பர்சே அமிதாப் பச்சனால் சித்தரிக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Amitabh Bachchan meets social worker Vijay Barse for character insights". mid-day (in ஆங்கிலம்). 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2020-01-21.
  2. "Ghetto superstars in the making?". Hindustan Times (in ஆங்கிலம்). 2009-09-02. பார்க்கப்பட்ட நாள் 2020-01-21.
  3. Šimkovic, Matúš; Träuble, Birgit (September 15, 2015). "Pursuit tracks chase: exploring the role of eye movements in the detection of chasing". எண்ணிம ஆவணச் சுட்டி:10.7717/peerj.1243/supp-10. பார்க்கப்பட்ட நாள் 2023-03-31.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_பர்சே&oldid=3788971" இலிருந்து மீள்விக்கப்பட்டது