கிசுலாப் கல்லூரி
கிசுலாப் கல்லூரி (Hislop College) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் நாக்பூர் நகரின் பழமையான கல்லூரிகளில் ஒன்றாகும். இது நாக்பூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
கிசுலாப் கல்லூரி அஞ்சல் தலை 2018ஆம் ஆண்டில் | |
வகை | இளநிலை கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1883 |
அமைவிடம் | , , |
வளாகம் | Urban |
சேர்ப்பு | நாக்பூர் பல்கலைக்கழகம் |
இணையதளம் | https://www.hislopcollege.ac.in/ |
நிறுவனர்
தொகுஇக்கல்லூரிக்கு இசுகாட்லாந்து சேவகர் இசுடீபன் கிசுலாப் (1817-1863) பெயரிடப்பட்டது. இவர் ஓர் குறிப்பிடத்தக்க சுவிசேஷகர், கல்வியாளர் மற்றும் புவியியலாளர் ஆவார். கலைக்களஞ்சிய அகராதியின் ஆசிரியரான ராபர்ட் ஆண்டருடன் இணைந்து விதர்பா பிராந்தியத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றினார்.[2]
வரலாறு
தொகுகிசுலாப் கல்லூரி 1883-ல் நாக்பூரின் மகால் பகுதியில் நிறுவப்பட்டது (ஆனால் இன்று அது மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ளது). நாக்பூர் மத்திய மாகாணங்களின் தலைநகராக இருந்தபோதிலும், 1882வரை இதில் கல்லூரி இல்லை.
கல்லூரி 1904 வரை கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. 1923-ல் நாக்பூர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆறு கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும்.
அமெரிக்கப் போதகர், ஜேம்ஸ் எம். லாசன், இளையோர், 1953 முதல் 1956 வரை வளாக அமைச்சக அலுவலகத்தில் ஒரு சேவகராகப் பணியாற்றினார். காந்திய அகிம்சை மற்றும் சத்தியாகிரகத்தைப் படித்தார். இது இவரது இயக்கத்தை உருவாக்கும் திறன்களைப் பாதித்தது. இதன்பிறகு இவர் குடிசார் உரிமைகள் இயக்கத்தில் முன்னணி அறிவார்ந்த சக்தியாக அமெரிக்கா திரும்பினார்.[3]
ஆராய்ச்சி
தொகுகிசுலாப் கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் தாவரவியல், சமூகவியல், உயிர் வேதியியல், வணிகவியல், இயற்பியல், கணினி அறிவியல், இலக்கியம் (ஆங்கிலம், இந்தி மற்றும் மராத்தி) ஆகிய துறைகளில் 60 ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டுள்ளனர். வணிகம், தாவரவியல், வரலாறு மற்றும் சமூகவியல் பற்றிய பிரிவில் 15 ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுகிறது.[1]
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
தொகுஇக்கல்லூரியின் அருகில் உள்ள பகுதியைச் பலர் கிசுலோப் கல்லூரியில் தங்கள் கல்வியை முடித்துள்ளனர்.
இவர்கள்:
- மாதவ சதாசிவ கோல்வால்கர், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் இரண்டாவது சர்சங்சாலக் (உச்ச தலைவர்).
- ராஜ்குமார் கிரானி, திரைப்பட தயாரிப்பாளர்
- ஷாபாஸ் கான், நடிகர்
- சிசிர் பார்கி - பரவலாகப் பாராட்டப்பட்ட இந்திய கஜல் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் நேரடி நிகழ்ச்சியாளர்.
- அனீஸ் அகமது
- பியூசு தாருகா, தொழிலதிபர்
- புருஷோத்தம் பாஸ்கர் பாவே, மராத்தி எழுத்தாளர்
- அரி சிங் கௌர், தில்லி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் துணைவேந்தர்
- ஆஷிஸ் நந்தி, அரசியல் உளவியலாளர்
- சீ. கே. நாயுடு, இந்தியத் துடுப்பாட்ட அணி முதல் அணித்தலைவர்
- நிதின் ராவத், அமைச்சர்
- முகுல் வாசுனிக், மத்திய அமைச்சரவை அமைச்சர்
- பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் 9வது பிரதமர்
- விலாஸ் முத்தேம்வார், நாடாளுமன்ற உறுப்பினர்
- பூஜா பானர்ஜி, தொலைக்காட்சி நடிகை
- பி. டி .குல்கர்னி, இரசாயன எதிர்வினை பொறியாளர், சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு பெற்றவர்
- மதுகர் நர்கர் சந்துர்கர், இந்திய உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Hislop College. Hislop College. Retrieved on 20 December 2018.
- ↑ "The Rev. Robert Hunter, M.A., LL.D., F.G.S". Geological Magazine 4 (8): 382–384. 1897. doi:10.1017/S0016756800184249. Bibcode: 1897GeoM....4..382..
- ↑ King, Mary Elizabeth. "What Makes Lawson's Role Unique?". www.jameslawsoninstitute.org. Archived from the original on 2022-01-12. பார்க்கப்பட்ட நாள் 2021-12-29.