ஆஷிஸ் நந்தி
ஆஷிஸ் நந்தி ( வங்காள மொழி: আশিস নন্দী ; பிறப்பு 1937) என்பவர் ஒரு இந்திய அரசியல் உளவியலாளர், சமூக கோட்பாட்டாளர் மற்றும் விமர்சகர் ஆவார். இவர் ஒரு பயிற்சிபெற்ற மருத்துவ உளவியலாளர். நந்தி ஐரோப்பிய காலனித்துவம், வளர்ச்சி, நவீனத்துவம், மதச்சார்பின்மை, இந்துத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், அணுசக்தி, அகல்குடிவாதம், கற்பனாவாதம் ஆகியவை குறித்து தத்துவார்த்த விமர்சனங்களை வழங்கியுள்ளார். அகல்குடிவாதம் மற்றும் விமர்சன பாரம்பரியம் தொடர்பான மாற்று கருத்துகளையும் வழங்கியுள்ளார். மேற்கூறியவற்றைத் தவிர, இந்தியாவின் வணிக திரைப்படத்தின் அசல் வரலாற்றையும், அரசு மற்றும் வன்முறை பற்றிய விமர்சனங்களையும் வழங்கியுள்ளார்.
ஆஷிஸ் நந்தி | |
---|---|
பேராசிரியர் நந்தி 2007 இல் ஜப்பானின் ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசு விழாவில். | |
பிறப்பு | 1937 (அகவை 86–87) பிரித்தானிய இந்தியா, பீகார், பாகல்பூர் |
தொழில் | அரசியல் உளவியலாளர், சமூக கோட்பாட்டாளர் மற்றும் விமர்சகர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி நிலையம் | குஜராத் பல்கலைக்கழகம் (முனைவர்) |
துணைவர் | உமா நந்தி |
பிள்ளைகள் | அதீதி (மகள்) |
குடும்பத்தினர் | பிரிதிஷ் நந்தி மற்றும் மனீஷ் நந்தி (சகோதிரர்) |
கல்விப் பின்னணி | |
ஆய்வு | Role of a Valued Object in Personality: a Clinical Psychological Study of Money (1967) |
முனைவர் பட்ட நெறியாளர் | பி. எச். பிரபு |
கல்விப் பணி | |
முனைவர் பட்ட மாணவர்கள் | Tridip Suhrud |
இவர் பல ஆண்டுகளாக வளரும் சமூகங்களின் ஆய்வு மையத்தின் (சி.எஸ்.டி.எஸ்) மூத்த சகா மற்றும் முன்னாள் இயக்குநராக இருந்தார். இன்று, இவர் இந்த நிறுவனத்தில் மூத்த கௌரவ சக உறுப்பினராக உள்ளார். மேலும் புதுதில்லியில் உள்ள த கமிடி ஆப் கல்சுரல் சாய்ஸ் அண்ட் குலோபல் கல்சர் குழுவின் தலைவராக இருக்கிறார். [1]
நந்தி 2007 இல் ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசைப் பெற்றார். [2] 2008 ஆம் ஆண்டில் , சர்வதேச அமைதிக்கான தி கார்னகி எண்டோமென்ட் வெளியிட்ட பாரின் பாலிசி இதழின் தலைசிறந்த 100 அறிவுஜீவிகள் பட்டியலுக்கான வாக்கெடுப்பு பட்டியலில் இவர் இடம்பிடித்தார். [3]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுநந்தி 1937 இல் பீகார் மாநிலம் பாகல்பூரில் ஒரு வங்காளி கிறிஸ்தவ குடும்பத்தில் [4] [5] பிறந்தார். இவர் சதீஷ் சந்திர நந்தி மற்றும் பிரபுல்லா நளினி நந்தி ஆகியோரின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார். மேலும் இவர் பிரிதிஷ் நந்தியின் சகோதரரும் ஆவார். பின்னர், இவரது குடும்பம் கல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தது. நந்தியின் தாயார் கல்கத்தாவின் லா மார்டினியர் பள்ளியில் ஆசிரியராக இருந்தார், பின்னர் பள்ளியின் முதல் இந்திய துணை முதல்வரானார். இவருக்கு 10 வயதாக இருந்தபோது, பிரித்தானிய இந்தியாவானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு இறையாண்மை கொண்ட நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் மற்றும் அட்டூழியங்களை அப்போது இவர் நேரில் கண்டார்.
மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த இவர் அதில் இருந்து விலகி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நாக்பூரின் ஹிஸ்லோப் கல்லூரியில் சமூக அறிவியல் படிப்பதற்காக சேர்ந்தார். [6] பின்னர் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இருப்பினும், இவரது கல்வி ஆர்வம் மருத்துவ உளவியலில் மிகுந்து இருந்தது. பின்னர் இவர் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக உளவியல் துறையில் முனைவர் (பி.எச்.டி) பட்ட ஆய்வுவை மேற்கொண்டார்.
கல்வி வாழ்க்கை
தொகுடெல்லி, வளரும் சமூகங்களின் ஆய்வு மையத்தில் (சி.எஸ்.டி.எஸ்) ஒரு இளம் ஆசிரிய உறுப்பினராக நந்தி சேர்ந்தார். அங்கு பணிபுரியும் போது, மருத்துவ உளவியல் மற்றும் சமூகவியலை ஒருங்கிணைத்து தானே ஒரு சொந்த வழி முறையை உருவாக்கினார். இதற்கிடையில், வெளிநாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவை தங்கள் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் விரிவுரையாற்றவும் அழைப்புவிடுத்தன. 1992 மற்றும் 1997 க்கு இடையில் சி.எஸ்.டி.எஸ் இயக்குநராக பணியாற்றினார். டியூக் யுனிவர்சிட்டியால் பதிப்பிக்கபட்டு வெளியிடபட்ட பத்திரிகையான எடிட்டோரியல் கலெக்டிவ் ஆஃப் பப்ளிக் கல்சரில் இதழிலும் பணியாற்றினார்.
நந்தி பல மனித உரிமை அறிக்கைகளை பிறருடன் இணைந்து எழுநியுள்ளார். மேலும் அமைதி, மாற்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் மற்றும் கலாச்சார பேணுதலுக்கான இயக்கங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். உலக எதிர்கால ஆய்வுகள் கூட்டமைப்பு, காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முனைவு, வளர்ச்சிக்கான கலாச்சார மாற்றுகளுக்கான சர்வதேச வலையமைப்பு மற்றும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் ஆகியவற்றின் நிர்வாக குழுக்களில் உறுப்பினராக உள்ளார். நந்தி வாஷிங்டன் டி.சி.யின் வில்சன் மையத்தில் உட்ரோ வில்சன் ஃபெலோவாகவும் , ஹல் பல்கலைக்கழகத்தில் சார்லஸ் வாலஸ் ஃபெலோவாகவும் , எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மனிதநேயத்தில் மேம்பட்ட ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1994 ஆம் ஆண்டில் ட்ரியர் பல்கலைக்கழகத்தின் ஐரோப்பிய ஆய்வுகள் மையத்தில் முதல் யுனெஸ்கோ தலைவராக இருந்தார். 2006 ஆம் ஆண்டில் அவர் இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் ககத்தின் தேசிய உறுப்பினரானார்.
பேராசிரியர் நந்தி ஒரு அறிவுஜீவி, இவர் பல மாறுபட்ட சிக்கல்களை அடையாளம் கண்டு ஆராய்கிறார். இவர் கடந்த இரண்டு தசாப்தங்களாக விரிவாக எழுதிவருகிறார்.
படைப்புகள்
தொகுபுத்தகங்கள்
- 1978 – The New Vaisyas: Entrepreneurial Opportunity and Response in an Indian City. Raymond Lee Owens and Ashis Nandy. Bombay: Allied, 1977. Durham, NC: Carolina Academic P, 1978.
- 1980 – At the Edge of Psychology: Essays in Politics and Culture. Delhi: Oxford UP, 1980. Delhi; Oxford: Oxford UP, 1990.
- 1980 – Alternative Sciences: Creativity and Authenticity in Two Indian Scientists. New Delhi: Allied, 1980. Delhi: Oxford UP, 1995.
- 1983 – The Intimate Enemy: Loss and Recovery of Self Under Colonialism. Delhi: Oxford UP, 1983. Oxford: Oxford UP, 1988.
- 1983 – Science, Hegemony and Violence: A Requiem for Modernity. Ed. Ashis Nandy. Tokyo, Japan: United Nations University, 1988. Delhi: Oxford UP, 1990.
- 1987 – Traditions, Tyranny, and Utopias: Essays in the Politics of Awareness. Delhi; New York: Oxford UP, 1987. New York: Oxford UP, 1992.
- 1987 – Science, Hegemony and Violence: A Requiem for Modernity. Ed. Ashis Nandy. Tokyo, Japan: United Nations University, 1988. Delhi: Oxford UP, 1990.Traditions, Tyranny, and Utopias: Essays in the Politics of Awareness. Delhi; New York: Oxford UP, 1987. New York: Oxford UP, 1992.
- 1988 – Science, Hegemony and Violence: A Requiem for Modernity. Ed. Ashis Nandy. Tokyo, Japan: United Nations University, 1988. Delhi: Oxford UP, 1990.
- 1989 – The Tao of Cricket: On Games of Destiny and the Destiny of Games. New Delhi; New York: Viking, 1989. New Delhi; New York: Penguin, 1989.
- 1993 – Barbaric Others: A Manifesto on Western Racism. Merryl Wyn Davies, Ashis Nandy, and Ziauddin Sardar. London; Boulder, CO: Pluto Press, 1993.
- 1994 – The Illegitimacy of Nationalism: Rabindranath Tagore and the Politics of Self. Delhi; Oxford: Oxford UP, 1994.
- 1994 – The Blinded Eye: Five Hundred Years of Christopher Columbus. Claude Alvares, Ziauddin Sardar, and Ashis Nandy. New York: Apex, 1994.
- 1995 – The Savage Freud and Other Essays on Possible and Retrievable Selves. Delhi; London: Oxford UP, 1995. Princeton, NJ: Princeton UP, 1995.
- 1995 – Creating a Nationality: the Ramjanmabhumi Movement and Fear of the Self. Ashis Nandy, Shikha Trivedy, and Achyut Yagnick. Delhi; Oxford: Oxford UP, 1995. New York: Oxford UP, 1996.[7][8]
- 1996 – The Multiverse of Democracy: Essays in Honour of Rajni Kothari. Eds. D.L. Sheth and Ashis Nandy. New Delhi; London: Sage, 1996.
- 1999 – Editor, The Secret Politics of Our Desires: Innocence, Culpability and Indian Popular Cinema Zed: 1999. (also wrote introduction)
- 2002 – Time Warps – The Insistent Politics of Silent and Evasive Pasts.
- 2006 – Talking India: Ashis Nandy in conversation with Ramin Jahanbegloo. New Delhi: Oxford University Press, 2006.
- 2007 – TIME TREKS: The Uncertain Future of Old and New Despotisms. New Delhi: Permanent Black, 2007.
- 2007 – A Very Popular Exile. New Delhi: Oxford University Press, 2007.
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்
- Ashis Nandy (1984). "Culture, State and the Redisovery of Indian Politics". Economic and Political Weekly 19 (49).
- Ashis Nandy (1995). "An Anti-secularist Manifesto". India International Centre Quarterly 22 (1).
- Ashis Nandy (1997). "The Twilight of certitudes: Secularism, Hindu Nationalism, and Other Masks of Deculturation". Alternatives: Global, Local, Political 22 (2). doi:10.1177/030437549702200201.
- Ashis Nandy (12 August 2006). "Nationalism, Genuine and Spurious: Mourning Two Early Post-Nationalist Strains". Economic and Political Weekly 41 (32).
- Unclaimed Baggage, The Little Magazine
- 1982 – The Psychology of Colonialism: Sex, Age, and Ideology in British India. Psychiatry 45 (Aug. 1982): 197–218.
- 1983 – Towards an Alternative Politics of Psychology. International Social Science Journal 35.2 (1983): 323–38.
- 1989 – The Fate of the Ideology of the State in India. The Challenge in South Asia: Development, Democracy and Regional Cooperation. Eds. Poona Wignaraja and Akmal Hussain. Thousand Oaks: Sage, 1989.
- 1989 – The Political Culture of the Indian State. Daedalus 118.4 (Fall 1989): 1–26.
- 1990 – Satyajit Ray's Secret Guide. East-West Film Journal 4.2 (June 1990): 14–37.
- 1991 – Hinduism Versus Hindutva: The Inevitability Of A Confrontation
- 1993 – Futures Studies: Pluralizing Human Destiny. Futures 25.4 (May 1993): 464–65.
- 1994 – Tagore and the Tiger of Nationalism. Times of India 4 September 1994.
- 1995 – History's Forgotten Doubles. History & Theory 34.2 (1995): 44–66.
- 1996 – Bearing Witness to the Future. Futures 28.6–7 (Aug. 1996): 636–39.
- 1999 – Indian Popular Cinema as a Slum’s Eye View of Politics. The Secret Politics of Our Desires: Innocence, Culpability and Indian Popular Cinema. Zed: 1999. 1–18. (also editor)
- 2000 – Gandhi after Gandhi after Gandhi (May, 2000)
- 2002 – Obituary Of A Culture
- 2004 – A Billion Gandhis
- 2006 – Cuckoo over the cuckoo’s nest Tehelka
- 2007 – What fuels Indian Nationalism? Tehelka
- 2009 – The Hour Of The Untamed Cosmopolitan Tehelka; Partition And The Fantasy Of A Masculine State பரணிடப்பட்டது 2012-10-24 at the வந்தவழி இயந்திரம் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
விருதுகள்
தொகுசர்ச்சைகள்
தொகு2013 சனவரியில் நடைபெற்ற ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் போது, இந்தியாவில் "கீழ்" சாதியினரிடமிருந்தே ஊழல் வருவதாக சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டதாக குறிப்பிடபட்ட ஒரு குழுவில் நந்தி பங்கேற்றார். கீழ்கண்டவை அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது,
ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் அதிகளவு ஊழலில் ஈடுபடுபவர்கள். பெரும்பாலான ஊழல்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்துதான் வருகின்றன. இதற்கு உதாரணம் ஒன்றை கூற விரும்புகிறேன். மேற்கு வங்க மாநிலத்தில், சிபிஐ(எம்) ஆட்சியிலிருந்தபோது, ஊழல் மிகக்குறைவாக காணப்பட்ட மாநிலங்களில் அதுவும் ஒன்றாக இருந்தது.கடந்த 100 ஆண்டுகளில் இந்த மாநிலத்தில் ஓபிசி, எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்த யாருமே ஆட்சி அதிகாரத்தை நெருங்க முடியாமல் இருந்ததையும், அந்த மாநிலம் முற்றிலும் தூய்மையான மாநிலமாக விளங்கியதையும் நான் இங்கே கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.[9]
இதனையடுத்து எஸ்சி / எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தபட்ட சாதியினர் மத்தியில் ஊழல் நிலவுவது தொடர்பான இவரது அறிக்கைக்கு எதிராக வண்கொடுமை சட்டத்தின் கீழ் முதல்தகவல் அறிக்கையானது இராசத்தான் காவல் துறையினரால் தாக்கல் செய்யபட்டது. [10] இதனையடுத்து நந்தியின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தை நாடி இவருக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரிய பிறகு இவரைக் கைது செய்ய 1 பிப்ரவரி 2013 அன்று உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இதனிடையே தமது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக ஆஷிஸ் நந்தி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நான் சொல்ல வந்த கருத்து இதுவல்ல; புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் கருத்து நான் சொல்ல விரும்பிய கருத்தும் அல்ல. என் கருத்தில் எந்த உள நோக்கமும் இல்லை என்றும், இதில் யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேடபதாகவும் தெரிவித்தார்.
நரேந்திர மோடியை பற்றிய பார்வை
தொகுபாபர் மசூதி சர்ச்சைகளின் போது, ஆஷிஸ் நந்தி ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுடன் தொடர் நேர்காணல்களை நிகழ்த்தத் தொடங்கினார். பயிற்சி பெற்ற உளவியலாளரான இவர், வளர்ந்து வரும் இந்து தேசியவாதிகளின் மனநிலையை அறிய விரும்பினார். இவர் சந்தித்தவர்களில் ஒருவரான நரேந்திர மோதி, அப்போது கொஞ்சம் பிரபலமான பாஜக செயல்பாட்டாளராக இருந்தார். நந்தி மோடியை பல மணி நேரம் செவ்வி கண்டார். பின்னர் மோடி பற்றிய கணிப்பை எழுதினார். இவர் ஒரு சர்வாதிகார ஆளுமையின் அனைத்து பண்புகளையும் வெளிப்படுத்தினார். இந்தியாவுக்கு எதிராகச் சதிபுரிவதில் ஒவ்வொரு இசுலாமியரும் சக்தி வாய்ந்த பயங்கரவாதி - சந்தேகத்திற்குரிய தேசத்துரோகி என்று கூறி, உலக அலவிலான ஒரு சதிக் கோட்டாட்டை அமைதியாகவும் பொறுமையான குரலிலும் மோடி எனக்கு விளக்கினார். மேலும் நந்தி கூறியது:
"மோடி ஒவ்வொரு உணர்விலும் ஒரு பாசிசவாதி. நான் இதை அவதூறாக சொல்லவில்லை. இது ஒரு அறுதியீட்டு வகை."[11]
நேர்காணல்கள்
தொகு- குர்ச்சரன் தாசுடன் ஆஷிஸ் நந்தி செவ்வி கண்டார் [12] [13] [14]
- வினய் லாலுடன் ஆஷிஸ் நந்தி செவ்வி கண்டார் [15]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ashis Nandy Emory University.
- ↑ "Fukuoka Asian Culture Prize – Laureates for 2007". The Fukuoka Asian Culture Prizes. Archived from the original on 8 February 2009. பார்க்கப்பட்ட நாள் 19 November 2008.
- ↑ "Top 100 Public Intellectuals". Foreign Policy. May 2008. Archived from the original on 5 December 2008. பார்க்கப்பட்ட நாள் 19 November 2008.
- ↑ "25, yet no Christian". The Herald of India. பார்க்கப்பட்ட நாள் 27 January 2013.
- ↑ "A short pause". Rediff. 12 January 1999. பார்க்கப்பட்ட நாள் 27 January 2013.
- ↑ "The Oppressed Have No Obligation to Follow the Rules of the Game". www.nakedpunch.com. Archived from the original on 2020-09-19. பார்க்கப்பட்ட நாள் 2019-05-21.
- ↑ Israel, Milton (October 1998). "Ashis Nandy et al. Creating a Nationality: The Ramajanmabhumi Movement and Fear of the Self (book review)". The American Historical Review 103 (4). doi:10.2307/2651320. https://archive.org/details/sim_american-historical-review_1998-10_103_4/page/1311.
- ↑ Menski, Werner (1998). "Creating a Nationality: The Ramajanmabhumi Movement and Fear of the Self by Ashis Nandy (book review)". Bulletin of the School of Oriental and African Studies 61 (2). doi:10.1017/s0041977x00014294.
- ↑ "Most of the Corrupt From SC/STs, OBCs: Ashis Nandy". Outlook India. Outlook Publishing India Pvt. Ltd. பார்க்கப்பட்ட நாள் 16 December 2016.
- ↑ "Rajasthan Police file FIR, summon Ashis Nandy". 29 January 2013.
- ↑ Filkins, Dexter. "Blood and Soil in Narendra Modi's India". The New Yorker (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-24.
- ↑ யூடியூபில் நிகழ்படம்
- ↑ யூடியூபில் நிகழ்படம்
- ↑ யூடியூபில் நிகழ்படம்
- ↑ "Frontpage - MANAS". MANAS.
ஆதாரங்கள்
- Sardar, Ziauddin and Loon, Borin Van. 2001. Introducing Science. US: Totem Books (UK: Icon Books).
மேலும் படிக்க
தொகு- அட்டைப்படம்: எங்கள் காலத்தின் பாலிமத் தெஹல்கா 2 ஜூன் 2012
- Bonnett, Alastair (2012). "The Critical Traditionalism of Ashis Nandy: Occidentalism and the Dilemmas of Innocence". Theory, Culture & Society 29. doi:10.1177/0263276411417462.
- Deftereos, Christine (June 2009). "Contesting Secularism: Ashis Nandy and the Cultural Politics of Selfhood" (PDF). University of Melbourne. பார்க்கப்பட்ட நாள் 30 March 2015.
- Mehta, Nalin (2010). "Ashis Nandy vs. the state of Gujarat: Authoritarian developmentalism, democracy and the politics of Narendra Modi". South Asian History and Culture 1. doi:10.1080/19472498.2010.507028.
- Miller, Don (1998). "Nandy: Intimate enemy number one". Postcolonial Studies 1. doi:10.1080/13688799889978.
வெளி இணைப்புகள்
தொகு- ஆஷிஸ் நந்தி, மூத்த க orary ரவ சக, வளரும் சங்கங்களின் ஆய்வு மையத்தின் முகப்புப்பக்கம் (சி.எஸ்.டி.எஸ்)
- எமோரி பல்கலைக்கழகத்தில் பிந்தைய காலனித்துவ ஆய்வுகள்: ஆஷிஸ் நந்தி
- ஆஷிஸ் நந்தி: வினய் லால் யு.சி.எல்.ஏ எழுதிய ஒரு குறுகிய வாழ்க்கை வரலாறு குறிப்பு (2004)
- நெடுவரிசைகள்