மக்கள் சிவில் உரிமைக் கழகம்

மக்கள் சிவில் உரிமைக் கழகம் (People's Union for Civil Liberties (PUCL) பி. யூ. சி. எல்) என்பது இந்தியாவில் இயங்கி வரும் மனித உரிமை அமைப்பாகும்[1]. 1976 ஆம்ஆண்டில் சோசலிசத் தலைவர் செயப் பிரகாசு நாராயணன், ஆசாரிய கிருப்பளானி, கிருட்டின காந்த், நீதிபதி தார்குண்டே போன்ற அறிஞர்களால் இது உருவாக்கப் பட்டது. இந்திய நாடு முழுவதிலும் சிவில் உரிமைகளையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் முன் நின்று இயங்குகிறது.

சாதனைகள்

தொகு
  • மோதல் சாவுகள், காவல் நிலைய சித்திர வதைகள், சாதி-மதம் தொடர்பான பூசல்கள், வழக்குகள் போன்றவற்றில் பியூசிஎல் தலையிட்டு அவற்றிற்குத் தீர்வுகள் கண்டுள்ளது.
  • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தம்மைப் பற்றிய விவரங்களையும் சொத்து விவரங்களையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும், நோட்டா போன்ற தேர்தல் தொடர்பான சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்றும் பியூசிஎல் வலியுறுத்தியது.
  • 2013 உணவுப் பாதுகாப்பு உரிமைச் சட்டம் நிறைவேற்றுவதில் பியூசிஎல் முன்னின்று பாடுபட்டது.

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு