ஜெய்ப்பூர் இலக்கிய விழா
ஜெய்ப்பூர் இலக்கிய விழா (Jaipur Literature Festival) 2006ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வெளிர்சிவப்பு வண்ண நகரம் எனப் பெயர்பெற்றுள்ள இராசத்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவாகும்.[1][2] இங்குள்ள டிக்கி அரண்மனை ஓட்டல் விழா மையமாகத் திகழ்கிறது. இவ்விழா இந்தியாவில் மட்டுமன்றி ஆசியாவிலேயே பெரும் நிகழ்வாக இளங்குகிறது.[3] நகரத்தின் மையத்திலுள்ள டிக்கி ஓட்டலின் அரங்கத்திலும் பூங்காக்களிலும் சனவரி மாதத்தில் நடைபெறும் இந்த விழாவில் இராசத்தானிய, இந்திய மற்றும் பன்னாட்டுப் படைப்புகள் கொண்டாடப்படுகின்றன.
Jaipur Literature Festival | |
---|---|
வகை | இலக்கிய விழா |
அமைவிடம்(கள்) | ஜெய்ப்பூர், இந்தியா |
இயக்கத்திலுள்ள ஆண்டுகள் | 2006-நடப்பு |
துவக்கம் | 2006 |
வலைத்தளம் | |
http://jaipurliteraturefestival.org/ |
இந்த விழாவினை டீம்வொர்க் தயாரிப்பின் சஞ்சய் ராய் உருவாக்கிட எழுத்தாளர்கள் நமீதா கோகலே மற்றும் வில்லியம் டால்ரிம்பிள் விழா இயக்குநர்களாக உள்ளனர். ஃபெய்த் சிங் நிறுவிய ஜெய்ப்பூர் விரசத் பவுண்டேசன் இதற்கு முனைப்பாக விளங்கியது.[4] ஜெய்ப்பூர் மரபுடமை பன்னாட்டு விழாவின் அங்கமாக 2006ஆம் ஆண்டு துவங்கிய இவ்விழா 2008ஆம் ஆண்டிலேயே தனது சொந்த வலிமையில் தனித்து இயங்கக்கூடிய ஒரு விழாவாக உதவியது.[1][5] இந்த பவுண்டேசனின் சமூக இயக்குநர் வினோத் ஜோஷி இவ்விழாவின் மண்டலப் பரிந்துரையாளராக உள்ளார். விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் கட்டணமில்லாத இலவச நிகழ்வுகளாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Writes of passage". Hindustan Times. 2008-01-30 இம் மூலத்தில் இருந்து 2008-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081020092621/http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=0640ff75-70ec-460d-8d06-a9bfc6d124aa. பார்த்த நாள்: 2008-04-23.
- ↑ Literacy in India & the Jaipur Literature Festival, January 25th, 2010. "Today [Jan 25, 2010] marks the end of the 5th annual Jaipur Literature Festival .. First organized in 2005.."
- ↑ மிராண்டா செய்மோர் ,த மெயில், ஞாயிறு ,ஆகத்து 10, 2008 - "the grandest literary Festival of them all"
- ↑ "In the throes of joy". The Hindu. 2006-01-20 இம் மூலத்தில் இருந்து 2008-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081020084454/http://www.hindu.com/fr/2006/01/20/stories/2006012002190400.htm. பார்த்த நாள்: 2008-08-12.
- ↑ "Looking for something special? Try treasure hunting in India". KiwiCollection.com. Archived from the original on 2008-06-02. பார்க்கப்பட்ட நாள் 2008-04-22.
வெளியிணைப்புகள்
தொகு- Jaipur Literature Festival official website
- Jaipur Literature Festival Website பரணிடப்பட்டது 2010-10-01 at the வந்தவழி இயந்திரம்
- In Jaipur, the Indian Book Market Comes Into Its Own, 2010 பரணிடப்பட்டது 2012-01-24 at the வந்தவழி இயந்திரம் TIME
- Jaipur Literature Festival: Bigger, yes, but better?
- Jaipur Literature Festival Registrations பரணிடப்பட்டது 2012-01-21 at the வந்தவழி இயந்திரம்