விஜய மோகன முக்தாம்பா பாயி
விஜய மோகன முக்தாம்பா பாயி அம்மணி ராஜே சாகிப் சத்ரபதி அல்லது விஜய மோகன முக்தாம்பா பாயி (1846 – 31 சனவரி 1885) (Vijaya Mohana Muktamba Bai Ammani Raje Sahib Chhatrapati அல்லது Vijaya Mohana Mutumbar Bai) என்பவர் பிரித்தானிய ஆவணங்களின்படி தஞ்சாவூர் மராத்திய போன்சலே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் சிவாஜிக்குப் பிறகு தஞ்சாவூர் மராத்திய சமஸ்தானத்தை ஆண்டவர். இருப்பினும், இவரது பதவியானது முற்றிலும் பெயரளவில் இருந்தது. இவர் குறைந்த அதிகாரம் கொண்டவராகவே இருந்தார்.
முன்வாழ்கை
தொகுஇவர் 1846 இல் தஞ்சாவரின் கடைசி மராத்திய மன்னரான சிவாஜி மற்றும் இராணி காமாட்சி பாயி ஆகியோருக்கு இரண்டாவது மகளாக பிறந்தார். இவரது அக்காளான ராஜசோ போஜு அம்மாணி ராஜுர் பாயி மரணமடைந்த காரணத்தால் இவர் மன்னரின் வாரிசாக ஆனார்.
சிவாஜி மரணம் மற்றும் தஞ்சாவூரை பிரித்தானியப் பேரரசுடன் இணைத்தல்
தொகு1855 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மராத்திய மன்னர் சிவாஜி ஆண் வாரிசு இல்லாமல் இறந்தார். அப்போது பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியால், கொண்டுவரப்பட்ட அவகாசியிலிக் கொள்கைப்படி, தஞ்சாவூர் சமஸ்தானமானது கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.
1855 அக்டோபர் 31 ஆம் நாள் ஒன்பது வயதான விஜயா பாயி தஞ்சாவூர் ராணி என்ற பட்டத்தை ஏற்று, அவருக்கு சில அதிகாரப்பூர்வ சலுகைகளை வழங்கினர். ஆனால் தஞ்சாவூர் சிவாஜியின் தத்து மகனான மூன்றாம் சரபோஜியை அங்கீகரிக்க பிரித்தானியர் மறுத்து விட்டனர்.
திருமணம்
தொகுசென்னை அரசாங்கத்தின் அனுமதியுடன், விஜயா பாய் கோலபூரின் இளவரசனான சாகரம் சாஹிப்பை 1859இல் மணந்தார்.
மரியாதைகள்
தொகு8 டிசம்பர் 1874 அன்று முக்தம்பா பாயிக்கு 13 துப்பாக்கி குண்டு மரியாதை வணக்கம் வழங்கப்பட்டது.[1] 1876 ஆம் ஆண்டு இவருக்கு வேல்ஸ் இளவரசர் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் 1877இல் இந்தியப் பேரரசர் பதக்கமும் வழங்கப்பட்டது.[1] 1878 ஆம் ஆண்டின் புத்தாண்டு கௌரவப் பட்டியலில் முத்துப்பா பாய் இடம்பெற்றார்.[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "The Bhonsle Dynasty of Tanjore - Page 4". Christopher Buyers.