விஜி பள்ளித்தோடி
விஜி பென்கூட்டு (பிறப்பு 1968) மகளிர் சங்கமான அசங்கடித மேகலா தொழிலாளர் சங்கத்தின் (அமைப்புசாரா துறைகளின் தொழிலாளர்கள் சங்கம்) என்ற பெண்கள் தொழிலாளர் குழுவின் ஒரு பகுதியாக பென்கூட்டு என்ற தொழிற்சங்க அமைப்பை நிறுவியர் ஆவார். இந்த அமைப்பானது, இந்தியாவின் கேரளாவில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு கடைகளில் பணிபுரியும் பெண்களுக்கு வேலை நேரத்தில் அமரும் உரிமை உட்பட விற்பனையாளர்களாக பணிபுரியும் பெண்களுக்கு அடிப்படை உரிமைகளை வென்றது. 2018 ஆம் ஆண்டிற்கான உலகெங்கிலும் உள்ள 100 ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க பெண்களின் பிபிசியின் பட்டியலில் இவர் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. [1] [2]
விஜி பள்ளித்தோடி |
---|
வாழ்க்கை
தொகுகுழந்தையாக இருந்தபோது, விஜி 1992 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் தேசிய மகளிர் மாநாட்டில் தன்னார்வலராகப் பணியாற்றினார், பெண்ணியத்தில் தனது அரசியல் உத்வேகத்தையும் திசையையும் கண்டார். 16 வயதில், விஜி தனது முதல் வேலையை ஒரு தையல் கடையில் தொடங்கினார். அந்த நேரத்தில், டைய எதிர்கால இயக்கங்களுக்கான உந்துதலின் ஒரு பகுதியாக, இவரது வீட்டிலுள்ள பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் குடும்பத்தின் தேவைக்கான பணத்திற்காக வேலை செய்தபோது, இவரது தந்தை கட்சிகள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்காக வேலை செய்ததோடு பணத்தையும் செலவிட்டார். [3] 2000 களின் முற்பகுதியில், கோழிக்கோடு, மிட்டாய்தெருவில் உள்ள மிகப்பெரிய வணிகப் பகுதியில் பெண்கள் சம்பளம் மற்றும் வேலை நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் கூட்டங்களை ஏற்பாடு செய்தார். அந்த நேரத்தில் சிலர் கோடை காலத்தில் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படவில்லை, மற்றவர்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க பெண்கள் கழிவறைகளுக்குச் செல்ல முடியவில்லை. கடையில் வாடிக்கையாளர்கள் இல்லையென்றாலும், பாதுகாப்பு கேமராக்களில் பெண்கள் உட்கார்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படும். [2]
இந்த அநீதியைக் கண்ட பிறகு, கேரளாவின் பல மாவட்டங்களில் பரவிய 'பெண்களுக்கிடையே ஒரு கூட்டம்' அல்லது 'பெண்களுக்காக பெண்கள்' போன்ற கூட்டங்களை நடத்தி பேச்சு வழக்கில் உள்ள வார்த்தையால் பெயரிடப்பட்ட பெண்கூட்டு என்ற மகளிர் குழுவை விஜி உருவாக்கினார். கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்காக உட்காரும் உரிமை போன்ற மேலதிக உரிமைகளுக்காக அவர்களால் வெற்றிகரமாக போராட முடிந்தது. ஜூலை 4, 2018 அன்று வேலை செய்யும் பெண்களுக்கு பல உரிமைகளை வென்றெடுக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, விஜி இன்னும் வெல்லப்படாத பல உரிமைகளுக்காக போராடுகிறார். அவர் தற்போது 2014-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'அசங்கடித மேகால தொழிலாளி யூனியன்' (AMTU) என்ற பெண்களை மையமாகக் கொண்ட தொழிலாளர் அமைப்பின் தலைவராக உள்ளார். பாரம்பரிய தொழிற்சங்கங்களில் பெண்களுக்கு போதுமான இடமின்மை காரணமாகவும் மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தனிப்பட்ட முறையில் உதவ வேண்டும் என்பதற்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. மற்ற தொழிற்சங்க அமைப்புகளிடமிருந்து கருத்து வேறுபாடுகள் உள்ளன, ஆனால் இவ்வாறான கோரிக்கைகளக்கான ஒரு இடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, இம்மாதிரியான அமைப்புகளை வலுப்படுத்த பெண்கள் அதிக அளவில் முன்வர வேண்டும். [4]
விஜி, 'தொழிலாளி' என்ற வார்த்தையை 'பணியாளர்' என்ற வார்த்தைக்குப் பதிலான பயன்பாட்டிற்கு வலியுறுத்துகிறார். ஏனெனில், இந்த வார்த்தையில் கூடுதல் வலிமை இருப்பதாக கூறுகிறார். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "BBC 100 Women 2018: Who is on the list?" (in en-GB). 2018-11-19. https://www.bbc.com/news/world-46225037.
- ↑ 2.0 2.1 2.2 "How saleswomen in India finally won the 'right to sit'" (in en-GB). 2018-07-23. https://www.bbc.com/news/world-asia-india-44896374.
- ↑ "Meet Viji P, Who Fought For Saleswomen's Right To Sit". Outlook (India). பார்க்கப்பட்ட நாள் 2019-12-01.
- ↑ Team, F. I. I. (2018-12-23). "18 Moments That Made 2018 Super Feminist!". Feminism In India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-01.