விஞ்ஞான பைரவ தந்திரம்
விஞ்ஞான பைரவ தந்திரம் அல்லது விஞ்ஞான் பைரவ தந்திரம் என்பது காசுமீர சைவத்தின் பிரிவான திரிக்கா நூலாகும். இந்த நூலில் சிவபெருமானுக்கும் உமைக்கும் இடையே ஆன உரையாடலில் தியானம் குறித்தவை இடம்பெற்றுள்ளன. இந்நூலில் 112 தியான முறைகள் இடம் பெற்றுள்ளன.[1] இது தந்திர வகை நூல்களுள் ஒன்றாக உள்ளது.
இந்நூலை ஓஷோ, ரங்கநாத ராவ் ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர்.
தந்த்ரா பற்றி ஓஷோ
தொகு"தந்திரா என்ற வார்த்தைக்குப் பொருள் யுக்தி, டெக்னிக், முறை, வழி என்பதுதான். ஆகவே, இந்நூல் விஞ்ஞான பூர்வமானது. விஞ்ஞானம் 'ஏன்?' என்பதில் அக்கறை உடையது அல்ல. விஞ்ஞானம் 'எப்படி?' என்பதில் அக்கறை உள்ளது. தந்த்ரா ஒரு தத்துவம் அல்ல என தந்த்ரா பற்றி ஓஷோ விளக்கம் அளிக்கிறார்.[2]
தேவியின் கேள்வியும் சிவாவின் பதிலும்
தொகுதேவியாகிய உமை சிவபெருமானிடம் 'சிவனே நீ உண்மையில் என்ன?; வியப்பு நிறைந்த இந்த பேரண்டம் யாது?; விதை எதனால் ஆனது?; பேரண்ட சக்கரத்தின் மையமாய் இருப்பவர் யார்?; உருவங்களில் நிறைந்தும் உருவங்களைக் கடந்தும் இருக்கின்ற இந்த வாழ்க்கை என்ன? என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்டு தனது சந்தேகங்களை போக்குமாறு வேண்டுகின்றாள். அதற்கு சிவபெருமான் யுக்திகளோடான வழிமுறைகளில் விளக்கம் தருகிறார். உமையின் சந்தேகங்களைப் போக்குகிறார்[3]
ஆதாரங்கள்
தொகு- ↑ Paul Reps, Zen Flesh, Zen Bones, A Collection of Zen and Pre-Zen Writings (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8048-0644-6)
- ↑ தந்த்ரா ரகசியங்கள்- பாகம் 1- விஞ்ஞான பைரவ் தந்த்ராவின் புதிய விளக்கம்-ஓஷோ-தமிழ் மொழிபெயர்ப்பு: தியான் சித்தார்த்- கண்ணதாசன் பதிப்பகம் - ஆறாம் பதிப்பு :செப்டம்பர் 2014.
- ↑ தந்த்ரா ரகசியங்கள்- பாகம் 1- விஞ்ஞான பைரவ் தந்த்ராவின் புதிய விளக்கம்-ஓஷோ-தமிழ் மொழிபெயர்ப்பு: தியான் சித்தார்த்- கண்ணதாசன் பதிப்பகம் - ஆறாம் பதிப்பு :செப்டம்பர் 2014.
வெளி இணைப்புகள்
தொகு- Muktabodha Online Library பரணிடப்பட்டது 2015-07-02 at the வந்தவழி இயந்திரம் - containing many Text of the Kashmir Series of Texts and Studies.