விட்டலி நாபாதோ

அமெரிக்க நரம்பியால் அறிஞர்

விட்டலி நாபாதோ (Vitaly Napadow) உக்ரைனிய நாட்டைச் சேர்ந்த அமெரிக்க நரம்பியல் விஞ்ஞானி மற்றும் குத்தூசி மருத்துவ நிபுணராவார். தற்போது ஆர்வர்டு மருத்துவப் பள்ளி மற்றும் மார்டினோசு உயிரி மருத்துவ உருவரைவு மையத்தில் முழுநேரப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். மேலும், ஒருங்கிணைந்த வலி நரம்பு உருவரைவு மையத்தின் இயக்குநராகவும், குத்தூசி மருத்துவ ஆராய்ச்சி சங்கத்தின் இணைத் தலைவராகவும் உள்ளார். [1] குத்தூசி மருத்துவம் மற்றும் மூளையில் அதன் விளைவுகள் குறித்து ஆராய்ச்சி செய்வதில் இவர் பெயர் பெற்றவர். [2] [3] மூளை செயல்படுத்துவதில் குமட்டலின் [4] மற்றும் தன்னிச்சையான பைப்ரோமையால்சியா தசை வலியின் தீவிரத்தோடு தொடர்புடைய நிலைக்கும் மூளை ஓய்வுவெடுக்கும் நிலைக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் இவர் ஆய்வு செய்துள்ளார். [5]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

நாபாதோ 2002 ஆம் ஆண்டில் நியூ இங்கிலாந்து அக்குபஞ்சர் பள்ளியில் குத்தூசி மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2001 ஆம் ஆண்டில் ஆர்வர்டு-எம்ஐடி சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டத்திலிருந்து முனைவர் பட்டத்தைப் பெற்றார். 2004 ஆம் ஆன்டில் ஆர்வர்டு மருத்துவப் பள்ளியின் ஆசிரியராக கதிரியக்கவியல் பயிற்றுவிப்பாளராக சேர்ந்தார். அங்கு அவர் 2010 ஆம் ஆண்டில் மயக்கவியல் உதவி பேராசிரியராகவும், 2014 ஆம் ஆண்டில் கதிரியக்கவியல் இணை பேராசிரியராகவும், [6] 2021 ஆம் ஆண்டு ஒரு முழு பேராசிரியராகவும் உயர்ந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Vitaly Napadow, PhD LicAc". scholar.harvard.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-08-27.
  2. Bakalar, Nicholas (2017-03-02). "Acupuncture Can Ease Wrist Pain of Carpal Tunnel Syndrome". The New York Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-08-27.
  3. Alderman, Lesley (2010-05-08). "A Chinese Art, In the Context Of the West". The New York Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-08-27.
  4. Powell, Kendall (2013-11-18). "Researchers look for effective treatments for a common problem: Nausea". Washington Post. பார்க்கப்பட்ட நாள் 2017-08-27.
  5. "Resting brain linked to fibromyalgia pain". UPI (in ஆங்கிலம்). 2010-07-31. பார்க்கப்பட்ட நாள் 2017-08-27.
  6. "Vitaly Napadow CV" (PDF).

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்டலி_நாபாதோ&oldid=3195075" இலிருந்து மீள்விக்கப்பட்டது