மதுரை விட்டவாசல் மண்டபம்

(விட்டவாசல் மண்டபம், மதுரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விட்டவாசல் மண்டபம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு எதிரில் உள்ள அம்மன் சன்னதி தெருவில் நகரா முரசு மண்டபத்திற்கு கிழக்கில் அமைந்த சிறு மண்டபம். விட்டவாசல் மண்டபத்தை 13 -ஆம் நுாற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் கட்டினர். மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி இருந்த ஐந்து கோட்டை வாயில்களில் ஒன்றாக விட்டவாசல் இருந்தது. விட்டவாசல் மண்டபச் சுவரில் முனீசுவரர் காவல் தெய்வமாக காட்சி அளிக்கிறார்.

விட்டவாசல் மண்டபம், மதுரை
1935-ஆம் ஆண்டில் விட்ட வாசல் மண்டபத்தின் மேற்கூரையில், மதுரை ஆங்கிலேயே நகரப் பொறியாளாரால் நிறுவப்பட்ட கல்வெட்டு

ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் மதுரையில் 1857 -இல் மதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஜான் பிளாக்பேர்ன் காலத்தில், மதுரை நகரின் எல்லைகள் நாற்புறமும் விரிவுபடுத்தப்பட்ட போது, விட்டவாசல் மண்டபத்தை தவிர்த்து, கோயிலின் மற்ற கோட்டை வாசல் மண்டபங்கள் அகற்றப்பட்டது.

1935-இல் மதுரை நகரச் செயற்பொறியாளராக இருந்த ஜி. எப். பிலிப் பெயரில், விட்டவாசல் மண்டபத்தில் கல்வெட்டு குறிப்பு உள்ளது. அக்கல்வெட்டுக் குறிப்பில், விட்டவாசல் மண்டபத்தை அதை யாரும் அகற்றவோ, ஆக்கிரமிக்கவோ, மாற்றம் செய்யவோ கூடாது என குறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுக் குறிப்பை மேற்கோள் காட்டி, தற்போது விட்டவாசல் மண்டபத்தில் உள்ள சில வணிகக் கடைகளை அகற்றக் கோரும் பொது நல வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. [1]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.dinamalar.com/district_detail.asp?id=1471042

வெளி இணைப்புகள்

தொகு