விட்டுணுவர்தனன்

விஷ்ணுவர்தனன் ( ஆங்கிலத்தில் Vishnuvardhana, கன்னடத்தில் : ವಿಷ್ಣುವರ್ಧನ) (1108-1152), என்பவன் போசாள மரபைச் சேர்ந்த மன்னனாவான். இவன் கி.பி.1108-இல் தன் அண்ணனான முதலாம் வீர வள்ளாளன் இறந்த பிறகு, மன்னனானான். முதலில், தன் முன்னோர்களைப்போலவே சமண சமயத்தைப் பின்பற்றுபவனாக இருந்தான். பிட்டி தேவா என அழைக்கப்பட்ட இவன், வைணவ தத்துவாதியான இராமாணுசரால் வைணவராக்கப்பட்டு, "விட்டுணுவர்தனன்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டான்.[5]

விட்டுணுவர்தனன்
Vishnuvardhana
விட்டுணுவர்தனன்
போசள மன்னன்
ஆட்சிக்காலம்அண். 1108 – அண். 1152 CE
முன்னையவர்முதலாம் வீர வல்லாளன்
பின்னையவர்முதலாம் வீர நரசிம்மன்
பிறப்புபிட்டி தேவன்
துணைவர்சந்தலதேவி, லெச்சுமிதேவி
அரசமரபுபோசளப் பேரரசு
மதம்வைணவ சமயம் (சைன சமயத்திலிருந்து மாற்றப்படுதல்) [1][2][3][4]

இவன் தனது ஆட்சி சுயாட்சி பெறவேண்டி மேலைச் சாளுக்கிய மன்னரான ஆறாம் விக்ரமாதித்யனுடன் போராடி அதில் வெற்றிபெற்றான். மேலும் சோழர் மேலாதிக்கத்தில் இருந்த கங்கப்பாடி (தற்போதைய தெற்கு கருநாடகம், கொங்கு நாட்டின் வடபகுதி) பகுதிகளின் சில பகுதிகளைத் தன் அரசுடன் இணைத்துக்கொண்டான்.[6] வரலாற்றாசிரியர்கள் விட்டுணுவர்தனை போசாள மன்னர்களில் சிறந்தவனாகக் கருதுகின்றனர்.

இவன் காலத்தில் கன்னட இலக்கிய வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. பல இலக்கியங்களும் படைக்கப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. Govindāchārya 1906, ப. 180.
  2. Stein 1989, ப. 16.
  3. Menon 2013, ப. 127.
  4. Smith 1920, ப. 203.
  5. Alkandavilli Govindāchārya (1906), "The life of Ramanujacharya: the exponent of the Visistadvaita philosophy", page 180, Publishers - S. Murthy and Co., Madras
  6. Sen (1999), pp.386-387, p.485
"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்டுணுவர்தனன்&oldid=4072214" இலிருந்து மீள்விக்கப்பட்டது