கட்டுப்பாட்டு பகுதி (விண்டோஸ்)
கட்டுப்பாட்டு பகுதி (Control Panel) என்பது மைக்ரோசாஃட் விண்டோஸின் வரைகலைப் பணிச்சூழலில் வன்பொருட்களைச் சேர்த்தல் மென்பொருட்களை அகற்றுதல் பயனர் கணக்குகளை நிர்வாகித்தல் அணுக்கத் தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டதாகும். மேலதிக ஆப்லெட்டுக்கள் மைக்ரோசாப்ட் தவிர்ந்த ஏனைய மென்பொருள் விருத்தியாளர்களாலும் விருத்தி செய்யபடலாம்.
உருவாக்குனர் | மைக்ரோசாப்ட் |
---|---|
அண்மை வெளியீடு | 6.0.6001.18000 / 4 பெப்ரவரி, 2008 |
இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோஸ் |
மென்பொருள் வகைமை | கணினி நிர்வாகம் |
உரிமம் | Proprietary software |
விண்டோஸ் 1.0 பதிப்பில் இருந்தே விண்டோஸ் கூட்டுக் கட்டுப்பாட்டகம் ஓர் முக்கிய பங்கினை வகித்துவருகின்றது. இதன்தற்போதைய கட்டுப்பாட்டகங்கள் பின்னர் வந்த இயங்குதளங்களில் படிப்படியாகச் சேர்க்கப்பட்டது. விண்டோஸ் 95 இல் இருந்து கூட்டுக் கட்டுப்பாட்டகம் ஆனது ஓர் விசேட கோப்புறையாகும் அதாவது இந்தக் கோப்புறையானது பௌதீகரீதியில் கிடையாது. இதில் பெரும்பாலும் பிரயோகங்களுக்கான குறுக்கு வழிகளையே கொண்டுள்ளன. இந்த ஆப்லெட்டுக்கள் .cpl என்ற கோப்புறையுள்ள கோப்புக்களாகச் சேமிக்கப்படும். எடுத்துக்காட்டாக விண்டோஸ் மென்பொருட்களைச் சேர்க்கவோ அல்லது அகற்றவோ உதவும் கட்டுப்பாட்டகம் ஆனது appwiz.cpl என system32 கோப்புறையில் சேமிக்கப்படும்.
அண்மைய விண்டோஸ் பதிப்புக்களில் விண்டோஸ் கட்டுப்பாட்டகமானது இரண்டு விதமான பார்வையைக் கொண்டுள்ளது ஒன்று குழுப்பார்வை, மற்றையது எல்லாக் கட்டுப்பாட்டகங்களையும் ஒன்றாகப் பார்க்கும் சாதாரண (கிளாசிக்) பார்வை.
பெரும்பாலான விண்டோஸ் குழுக்கட்டுப்பாடகங்களானது மாற்றுவழிகளால் அணுகக்கூடியதே.
விண்டோஸ் கூட்டுக் கட்டுப்பாட்டகத்தை அணுக
- Start -> Run -> control (அல்லது control.exe)
எனைய கட்டுப்பாட்டகங்களை அணுகத் தேவைப்படும் கட்டளைகள் (எடுத்துக்காட்டுகள்)
- access.cpl - அணுக்கத் தேர்வுகளுக்கு
- appwiz.cpl - மென்பொருட்களை கணினியில் நிறுவத்தற்கோ அல்லது பாகங்களை சேர்க்க அல்லது திருத்தம் செய்வதற்கான அணுக்கத் தேர்வுகள்
- desk.cpl - காட்சித் தன்மை
- firewall.cpl - விண்டோஸ் தீச்சுவர்
- hdwwiz.cpl - மேதவித்தனமான முறையில் வன்பொருளைச் சேர்க்கும் முறை (பெரும்பாலும் இணைத்தவுடன் இயங்கும் வன்பொருட்கள் அல்லாதவற்றிக்கு - Mainly for non plug and play devices)
- intl.cpl - பிராந்திய மற்றும் மொழித்தேர்வுகள்
- main.cpl - சுட்டி (மவுஸ்) தொடர்பான தேர்வுகள்
- mmsys.cpl - ஒலிக்கட்டுப்பாட்டகம்
- ncpa.cpl - வலையமைப்பு இணைப்புக்கள்
- netsetup.cpl - மேதாவித்தனமான முறையில் வலையமைப்பை உருவாக்குதல்
- nusrmgr.cpl - பயனர் கணக்குகளை நிர்வாகித்தல்
- odbccp32.cpl - திறந்த தரத்தள நிர்வாகம் (Open Data Base Connectivity)
- powercfg.cpl - மின்சாரப் பாவனையை நிர்வாகித்தல்.
- sysdm.cpl - சிஸ்டம் பற்றியது.
- telephon.cpl - தொலைபேசி நிர்வாகம்
- timedate.cpl - நேரம் மற்றும் தேதி (இலங்கை வழக்கு திகதி) தேர்வுகள்
தொழில்நுட்ப விவரங்கள் தொகு
கட்டுப்பாட்டு பகுதி கோப்புறையை உயர்தர அல்லது வகைப்படுத்தப்பட்ட பார்வையை தன்னியக்கமாக கீழ்க்கண்ட regkey ஐ மாற்றுவதன் மாற்றலாம்.
- HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explore\ForceClassicControlPanel
விண்டோஸின் பிற கோப்புறைகளும்l[1]Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} என பெயரிடப்பட்டால், கட்டுப்பாட்டு பகுதியாக ஆகிவிடும்.