விண்டோஸ் மீட்டிங் ஸ்பேஸ்

விண்டோஸ் விஸ்டாவும் அதற்கு மேற்பட்ட கணினிகளிலும் 2-10 பயனர்களை ஒரே நேரத்தில் சகாக்களுக்கிடையிலான முறையில் (Peer-to-Peer) உரையாடுவதற்கென உருவாக்கப்பட்டதே விண்டோஸ் மீட்டிங் ஸ்பேஸ் ஆகும். இது ஏற்கனவே இருந்த நெட்மீட்டிங் மென்பொருளை மாற்றீடு செய்துள்ளதுள்ளதுடன் மைக்ரோபோன் ஒலி/ஒளி அமைப்பிலான கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் வசதி நீக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் மீட்டிங் ஸ்பேஸ்
மைக்ரோசாப்ட் விண்டோசின் ஒரு பாகம்.

விண்டோஸ் மீட்டிங் ஸ்பேஸ் நினைத்தவுடன் ஓர் கூட்டத்தை ஆரம்பிக்கும் வசதி, பிரயோகங்களைப் பகிர்தல். கோப்புக்களைப் பகிர்தல ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.

விண்டோஸ் விஸ்டா ஹோம் பேசிக் பதிப்பில் விண்டோஸ் லைவ் மீட்டிங் பேஸ் உள்ளடக்கப்படவில்லை. விண்டோஸ் விஸ்டா ஹோம் பிறிமியம், பிஸ்னஸ், அல்டிமேட் பதிப்புக்கள் இந்த வசதியை உள்ளடகியுள்ளது. [1] குறிப்பு: விண்டோஸ் மீட்டிங் ஸ்பேசில் ஒரு சமயத்தில் ஒரே ஒரு கூட்டத்தில் மாத்திரமே பங்குபற்றலாம். ஒருகூட்டத்தில் இருந்து மற்றோரு கூட்டத்தில் கலந்து கொள்ளவிரும்பினால் முதலில் பங்குபற்றிக் கொண்டிருக்கும் கூட்டத்தில் இருந்து வெளியேறியே மற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளும் வசதி கிடையாது.

உசாத்துணைகள்

தொகு
  1. விண்டோஸ் மீட்டிங் ஸ்பேஸ் அணுகப்பட்டது 08 மார்ச் 2009