விண்வெளிக்கடலியல்
விண்வெளிக்கடலியல் (Astrooceanography) என்பது பூமி என்ற கோள்கிரகத்துக்கு வெளியே இருக்கும் கடல்களைப் பற்றிப் படிக்கும் அறிவியல் துறையாகும். விண்வெளி உயிரியல், விண்வெளி வேதியியல், விண்வெளி நிலவியல் போன்ற மற்ற கோள் அறிவியல் துறைகள் போலல்லாமல் சனி கோளின் டைட்டன்[1] மற்றும் வியாழன் கோளின் கனிமீடு[2] போன்ற நிலாக்களில் கடல் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர்தான் விண்வெளிக்கடலியல் துறை தோன்றியது. மேலும் இந்நிலவுகளை நோக்கிய பயணங்கள் தொடர்ந்து அங்குள்ள பாறை அல்லது பனிக்கட்டி அடுக்குகளுக்கு கீழே இருக்கும் சமுத்திரங்களை அடையும் வரை இந்தத் துறையின் ஆய்வுகள் ஊகத்தின் அடிப்படையிலான நெடுநீள் ஆய்வுகளாகவே இருக்கும். நெப்டியூனில் உள்ள கடலில் திரவ வைரம் உள்ளது என்பது தொடங்கி வியாழனில் உள்ள கடலில் இராட்சத திரவ ஐதரசன் பெருங்கடல் உள்ளது[3][4] என்பது வரையிலான பல கோட்பாடுகள், நமது சூரிய மண்டலத்தில் உள்ள விண்பொருட்கள் தொடர்பாக உள்ளன.
விண்வெளிக்கடலியல் துறை விண்வெளி உயிரியல் துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது ஆகும். ஏனெனில் சிறிய வகை உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற சூழல்வாய்ப்பு கடல்களில்தான் சாத்தியமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://science.nasa.gov/science-news/science-at-nasa/2012/28jun_titanocean/
- ↑ http://www.washingtonpost.com/news/speaking-of-science/wp/2015/03/12/theres-an-underground-ocean-on-jupiters-largest-moon/
- ↑ http://listverse.com/2015/04/03/10-mind-boggling-oceans-that-exist-in-space/
- ↑ http://science.nasa.gov/science-news/science-at-nasa/2011/09aug_juno3/