விதாபாய் பாவ் மங் நாராயண்காங்கர்

இந்தியப் பாடகர் மற்றும் நடனக் கலைஞர்

விதாபாய் பாவ் மங் நாராயண்காங்கர் (Vithabai Bhau Mang Narayangaonkar) (பிறப்பு: 1935 சூலை - இறப்பு: சனவரி 15, 2002) இவர் ஓர் இந்திய நடனக் கலைஞர், பாடகர் மற்றும் தமாசா கலைஞருமாவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

விதாபாய் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். மகாராட்டிராவின் சோலாப்பூர் மாவட்டம் பண்டரிபுரம் நகரில் பிறந்தார். பாவ்-பாபு மங் நாராயண்காங்கர் என்பது, இவரது தந்தை மற்றும் மாமா நடத்தும் குடும்ப குழுவாகும். இவரது தாத்தா நாராயண் குடே என்பவர் இந்தக் குழுவை அமைத்தார். அவர் புனே மாவட்டத்தின் ஷிரூர் தாலுகாவில் உள்ள காவத்தே யாமையைச் சேர்ந்தவர் ஆவார். [1] குழந்தை பருவத்திலிருந்தே, லாவண்யா, கவ்லான், பெடிக் போன்ற பல்வேறு வகையான பாடல்களை இவர் பாடியுள்ளார். ஒரு மாணவராக இவர், பள்ளியில் மிகச் சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும் இவர் , மிகச் சிறிய வயதிலிருந்தே எந்தவொரு முறையான பயிற்சியும் இல்லாமல் மேடையில் சிரமமின்றி நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சி

தொகு

இவரது வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று, இவருக்கு குழந்தை பிறந்த சமயத்தின் போது நடந்த நிகழ்வாகும். இவர் தனது பார்வையாளர்களுக்காக நிகழ்ச்சிகளை நடத்தி வந்தபோது 9 மாத கர்ப்பமாக இருந்தார். அவ்வாறு நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது தான், இவர் பேறுகாலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தார். இவர், அசாத்திய பொறுமை மற்றும் தைரியமான பெண் என்பதால், இவர் மேடைக்குப் பின்புறம் சென்று குழந்தையை பிரசவித்தார், தொப்புள் கொடியை ஒரு கல்லால் வெட்டி எடுத்தார். அடுத்த நிகழ்ச்சியில் பங்கேற்கத் தயாரானார். குழந்தை வயிற்றில் இல்லாததால் பார்வையாளர்கள் இவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். இவரது தைரியமான செயல் மற்றும் அர்ப்பணிப்பு பற்றி விசாரித்ததும், அறிந்ததும், நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் பார்வையாளர்கள் இவரைப் பாராட்டினர். ஆனால் மரியாதையுடன் இவரை ஓய்வெடுக்கச் சொன்னார்கள்.

பதக்கம்

தொகு

இவர் தனது கலைக்காக 1957 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து பதக்கங்களைப் பெற்றார். [2] இவரது புகழ் மற்றும் இவர் சம்பாதித்த கௌரவங்கள் இருந்தபோதிலும், இவர் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும், செல்வத்தின் மீது அதிக அக்கறை காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. [3] இவரது மரணத்திற்குப் பிறகு இவரது மருத்துவமனைச் செலவுக்கான தொகை நன்கொடையாளர்களின் பங்களிப்பால் பூர்த்தி செய்யப்பட்டன.

விருதுகள்

தொகு

இவர் தனது பங்களிப்புகளின் மூலமாக, அதிக பாராட்டுக்களைப் பெற்றார். இதன் மூலம் இவரது குழுவிற்கு, தமாஷா கலை வகைகளில் மிகவும் மதிப்புமிக்க குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது. மேலும், இவர் தனது ரசிகர்களால் "தமாசா சம்ரதினி" (தமாசா பேரரசி) என்று அழைக்கப்பட்டார். மேலும் அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டார்.

அங்கீகாரம்

தொகு

மகாராட்டிரா அரசு 2006 ஆம் ஆண்டில் இவரது நினைவாக ஆண்டுக்கு "விதாபாய் நாராயங்காவ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருதை" நிறுவியுள்ளது. தமாஷா கலையின் பாதுகாப்பு மற்றும் பரப்புதலுக்கு விரிவாக பங்களித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது 2006 முதல் வழங்கப்படுகிறது. திருமதி. காந்தபாய் சதர்கர், வசந்த் அவ்சரிகர், திருமதி சுலோச்சனா நலாவடே, ஹரிபாவ் பாத்தே, திருமதி மங்களா பன்சோட் (விதாபாயின் மகள்), சாது பட்சூட், அங்கூஷ் காதே, பிரபா சிவானேகர், பீமா சங்கவிகார், கங்காரம் கவதேகர், திருமதி. ராதாபாய் கோடே நசிக்கர், மதுக்கர் நெரலே போன்றோர் ஆவர். உலோக்சாகிர் பஷீர் மோமின் கவதேக்கர் போன்றவர்கள் விருதுகளைப் பெற்றுள்ளார்கள். [4] நாட்டுப்புற கலை, லவானி மற்றும் தமாசா துறையில் தனது வாழ்நாள் பங்களிப்புக்காக இந்த விருதை 2018 இல் பெற்றார். [5] .

குறிப்புகள்

தொகு
  1. Abp Majha (2016-09-08), माझा कट्टा: लावणी सम्राज्ञी मंगला बनसोडे, பார்க்கப்பட்ட நாள் 2016-12-18
  2. "Bowing out - Indian Express". archive.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-18.
  3. A Companion to Folklore.
  4. , https://www.esakal.com/pune/vithabai-narayangaonkar-award-momin-kawhetkar-163510
  5. [1]