விதை உறக்கம்

விதை உறக்கம், சாதகமான சூழ்நிலை அமைந்தாலும் சில விதைகள் உடனடியாக முளைக்காமல், குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பே முளைக்கின்றன. இந்த ஒய்வு நிலைக்கு உறக்க நிலை என்று பெயர். விதை உறக்கம் இரண்டு வகைப்படும். முதல் நிலை உறக்கநிலை மற்றும் இரண்டாம் நிலை உறக்கநிலை.

முதல்நிலை உறக்கநிலை

தொகு

சில விதைகள் முளைப்பதற்கு உரிய சூழ்நிலை அமைந்தாலும் அவற்றில் உள்ள கடின மேலுறை, விதைக்கரு முற்றாத நிலை போன்ற காரணங்களால் உடனடியாக முளைப்பதில்லை. இதற்கு முதல்நிலை உறக்கநிலை என்று பெயர். முதல்நிலை உறக்கநிலை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது

  • இயல்பு உறக்கநிலை
  • பாரம்பரிய உறக்கநிலை
  • தூண்டப்பட்ட உறக்கநிலை

இரண்டாம்நிலை உறக்கநிலை

தொகு

நல்ல முளைப்புத்திறன் உள்ள விதைகள் கூட சாதகமற்ற சூழ்நிலையில் உறக்க நிலையை அடைகின்றன. இதற்கு இரண்டாம்நிலை உறக்கநிலை என்று பெயர். இரண்டாம்நிலை உறக்கநிலையானது வெப்பநிலை மாறுபாடு, ஒளி பற்றாக்குறை, இரசாயனங்கள் மற்றும் வாயுக்கள் வளர்ச்சியைத் தடுக்கும் பொருட்கள் ஆகியவற்றால் ஏற்படுகின்றன.

உறக்கநிலையை நீக்குதல்

தொகு
  • இயந்திரங்கள் கொண்டு விதைகளின் மேல் சிராய்ப்புக்களை ஏற்படுத்துதல். எடுத்துக்காட்டு பயறு வகைகள்
  • இரசாயன மருந்துகளை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து உறக்கநிலையை குறைக்கலாம் உ.ம். பருத்தி விதை அமில சிகிச்சை
  • வளர்ச்சி ஊக்கி கொண்டு நேர்த்தி செய்து உறக்க நிலையை நீக்கலாம். உ.பி கோதுமை , பார்லி விதை ஜிப்ராலிக் அமில சிகிச்சை
  • மிகக்குறைந்த வெப்பநிலையில் (5 -10 c ) குறிப்பிட்ட காலத்திற்கு விதைகளை வைத்திருத்தல். உ.பி ஆப்பிள் , ரோஜா
  • விதைகளை ஓடும் நீரில் குறிப்பிட்ட காலம்வரை வைப்பதால் முளைப்பை தடை செய்யும் இரசாயனங்கள் நீக்கப்படுகிறது உ.பி கொத்தமல்லி
  • சில விதைகளை தீயில் வாட்டி எடுப்பதன் மூலம் விதை உரையின் தடிமனை குறைத்து உறக்க நிலை நீக்கப்படுகிறது உ.பி தேக்கு விதைகள்
  • அதிக வெப்பநிலை உள்ள நீரில் குறிப்பிட்ட காலம் வைத்து உறக்க நிலையை நீக்கலாம் உ.ம் வேலமரம்
  • சில விதைகளை நீரில் ஊறவைத்து விதைப்பதால் உறக்கநிலை நீக்கப்படுகிறது உ.ம் கருவேல மரம்
  • விதைகளை கைகளால் தரையில் தேய்த்து உறக்க நிலையை நீக்கலாம் இது அனைத்து மரவகை பயிர்களுக்கும் சிறந்த பயனை அளிக்கும்

சாதகமான சூழ்நிலை அமைந்தாலும் சில விதைகள் உடனடியாக முளைக்காமல் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பே முளைக்கின்றன. இந்த ஓய்வு நிலைக்கு உறக்கநிலை என்று பெயா். இது முதல் நிலை உறக்க நிலை, இரண்டாம் நிலை உறக்க நிலை என இரண்டு வகைப்படும்.

  • முதல் நிலை உறக்க நிலை என்பது விதைகள் முளைக்க சாதகமான சூழ்நிலை இருந்தாலும், கடினமான விதை மேலுறை, முற்றாத விதைக்கரு போன்றவற்றால் முளைப்பதில்லை.
  • இரண்டாம் நிலை உறக்க நிலை என்பது விதைகள் நல்ல முளைப்பு திறன் இருந்தாலும், சாதகமற்ற சூழ்நிலையில் உறக்கநிலையை அடைகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  • வேளாண் செயல்முறைகள் கருத்தியல் - 12-ஆம் வகுப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதை_உறக்கம்&oldid=3918313" இலிருந்து மீள்விக்கப்பட்டது