வித்யா முன்சி

இந்தியப் பத்திரிகையாளர்

வித்யா முன்சி ( Vidya Munshi ) (கனுகா எனவும் அறியப்படுகிறார் ) ( 5 டிசம்பர் 1919 - 8 ஜூலை 2014) ஒரு பத்திரிகையாளரும் மற்றும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவரும் ஆவார். இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் என்ற பெருமையும் இவருக்குண்டு.[1] [2]

அடையாளம் தெரியாத ஒரு தெரியாத பெண் மற்றும் எஸ்தர் கூப்பர் ஜாக்சனுடன் (இடது) வித்யா கனுகா (வலது) , 1945

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

வித்யா கனுகா, ஒரு குசராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். மும்பையில் டிசம்பர் 5, 1919 இல் ஒரு வழக்கறிஞரான தந்தைக்கும் மற்றும் சமூக ஆர்வலரான ஒரு தாய்க்கும் பிறந்தார். பள்ளிப்படிப்புத் தேர்வுகளில் முதலிடம் பிடித்த இவர பின்னர் பாம்பே எல்பின்ஸ்டன் கல்லூரியில் படித்தார்..1938 இல் மருத்துவம் படிக்க தனியாக இங்கிலாந்து செல்ல முடிவு செய்தார்

இங்கிலாந்தில்: பொதுவுடைமை தொகு

இவரது தந்தை ஒரு பிரபல குற்றவியல் வழக்கறிஞராக இருந்தார். இவர் தனது மாமாவால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். வித்யா 1938 இல் இங்கிலாந்தை அடைந்தார். மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதற்குள், இரண்டாம் உலகப் போர் மூண்டது . எனவே, இந்தியா திரும்புவதற்குப் பதிலாக, டர்ஹாம் உள்ள நியூகேஸில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு இவர் பொதுவுடமை சித்தாந்தம் மற்றும் இயக்கத்துடன் தொடர்பு கொண்டார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு படிப்பை கைவிட்டு இங்கிலாந்தில் முழுநேர ஆர்வலரானார். இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள இந்திய மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளராகவும் ஆனார் பின்னா கிரேட் பிரிட்டனின் பொதுவுடைமைக் கட்சியுடன் தொடர்பு கொண்டு விரைவில் உறுப்பினரானார். மேலும், இவர் இந்தியப் பொதுவுடமைவாதிகளுடன் தொடர்பில் இருந்தார். இது இவரது எதிர்கால வாழ்க்கைப் போக்கை வடிவமைத்தது. இவர் கிரேட் பிரிட்டனின் பொதுவுடைமைக் கட்சியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முக்கியமாக பாசிசத்திற்கு எதிராக பல நிகழ்ச்சிகளில் பல போராட்டங்களில் ஈடுபட்டார். .

1943 இல் இங்கிலாந்தில் இருந்தபோது இவரும் இவருடைய சகாக்களும் செல்பீல்டில் முதல் சுவரொட்டி கண்காட்சியை நடத்தினர். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட வங்காள மக்களின் பேரதிர்ச்சியை இந்த கண்காட்சி வெளிச்சம் போட்டுக் காட்டியது. சேகரிக்கப்பட்ட பணம் வங்காளப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது.[3] [4]

பெண்கள் இயக்கம் மற்றும் பத்திரிகை தொகு

1954 இல் கொல்கத்தாவில் நடந்த இந்தியப் பெண்களின் தேசிய கூட்டமைப்பின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டார். இவர் அதன் பத்திரிகை தொடர்புக் குழுவில் இருந்தார்.

இங்கிலாந்தில் இருந்து திரும்பியதும், இவர் புவியியலாளரும் பத்திரிகையாளருமான சுனில் முன்சி என்பவரை மணந்தார். சுனில் இதற்கு முன்பு மும்பையிலுள்ள 'தி ஸ்டூடண்ட்' என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்தார். வித்யா முன்சியும் 'தி ஸ்டூடண்ட்' இதழில் சேர்ந்தார். பின்னர் வித்யா பிளிட்ஸ் செய்தித்தாளின் நிருபராகவும் பணியாற்றினார். [5] இவருக்கு மொழி சரியாகத் தெரியாதபோதும் ‘சலார் பதே’ என்ற வங்காள செய்தித்தாளைத் திருத்தும் வாய்ப்பு கிட்டியது. எனவே இவள் கடினமாகவும் விரைவாகவும் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

1952 முதல் 1962 வரை மும்பையின் தி பிளிட்ஸ்வார இதழின் கொல்கத்தா நிருபராக பணியாற்றினார். இவர் இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் என்று அழைக்கப்படுகிறார்.

இவர் பல ஆண்டுகளாக இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் கலந்தர் என்ற தினசரியை வெளியிட்ட குழுவிற்கு தலைமை தாங்கினார். மேலும், கட்சியின் தீவிர உறுப்பினராகவும் இருந்தார். 2000 ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்தார். இவர் தனது வாழ்க்கை, அரசியல் எழுச்சிகள் மற்றும் தனது காலத்தின் பெண்களின் இயக்கங்களின் வடிவங்களை மிக விரிவாக ஒரு நினைவுக் குறிப்பில் ஆவணப்படுத்தினார். [6] [7] [8]

மேற்கோள்கள் தொகு

  1. Staff Reporter (July 8, 2014). "Veteran Communist leader Vidya Munshi dead".
  2. "India's first woman journalist Vidya Munshi, RIP". July 9, 2014.
  3. Staff Reporter (July 8, 2014). "Veteran Communist leader Vidya Munshi dead".
  4. "India's first woman journalist Vidya Munshi, RIP". July 9, 2014.
  5. "A small introduction to India's first 4 women Journalists - SheThePeople TV".
  6. Munsi, Vidya (June 28, 2006). "In Retrospect: War-time Memories and Thoughts on Women's Movement". Manisha Granthalaya.
  7. Staff Reporter (July 8, 2014). "Veteran Communist leader Vidya Munshi dead".Staff Reporter (July 8, 2014). "Veteran Communist leader Vidya Munshi dead" – via www.thehindu.com.
  8. "India's first woman journalist Vidya Munshi, RIP". July 9, 2014."India's first woman journalist Vidya Munshi, RIP". July 9, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யா_முன்சி&oldid=3886563" இலிருந்து மீள்விக்கப்பட்டது