வித்யா ராவ்
வித்யா ராவ் (Vidya Rao) இந்துசுதானி இசைப் பாடகி மற்றும் ஓர் எழுத்தாளர் ஆவார். தும்ரி இசை மற்றும் தாத்ரா இசை பாணியில் பாடுவதில் இவர் புகழ்பெற்றவராகக் கருதப்படுகிறார்.[1]. நைனாதேவி என்னும் மறைந்த பாடகியைப் பற்றி நெஞ்சோடு நெஞ்சம் என்ற பெயரில் ஒரு நூலை இவர் எழுதியுள்ளார்.
வித்யா ராவ் Vidya Rao | |
---|---|
திசம்பர் 2016 இல் குசராத்திலுள்ள அகமதாபாத் இலக்கியத் திருவிழாவில் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | இந்தியா ஐதராபாத் |
தொழில்(கள்) | பாடகி |
இணையதளம் | www.vidyaraosinger.com |
வாழ்வும் பணியும்
தொகுவானாபர்தியில் பிறந்த வித்யா இந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் வளர்ந்தார். இவர் தனது பட்டப் படிப்பை சென்னையில் முடித்த பின், தில்லி பொருளாதாரப் பள்ளியில் சமூகவியல் பிரிவில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றார் [2].
இவர் தனது இசைப் பயணத்தைத் தொடங்குமுன் பெண்கள் மேம்பாட்டுக் கல்வி மையத்தில் ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்[2]. அமீர்குசுரு,கபீர் ஆகியோரைப் போன்று பாடல்களை இயற்றியுள்ளார்[3].
மணிரத்னத்தின் ராவணன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் அம்மாவாக இவர் அறிமுகமானார். இருப்பினும், படத்தின் இறுதிப் பதிப்பில் இருந்து இவரது காட்சிகள் வெட்டப்பட்டன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kuldeep Kumar. "On a delicate note". The Hindu. http://www.thehindu.com/arts/books/article2683984.ece. பார்த்த நாள்: 17 January 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 "Glimpses of Naina". The Hindu. December 8, 2011. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.
- ↑ Jyoti Nair Belliappa. "Cascade of thumris". The Hindu.
- ↑ "Aditi Rao shines as Delhi 6 sinks - Bollywood Movies - Zimbio". 4 November 2009. Archived from the original on 4 November 2009.