வித்வான்சாக்

வித்வான்சாக் (Vidhwansak) என்பது தொலைதூரத்திலுள்ள இலக்குகளை தாக்கப் பயன்படும் ஒரு தொலைகுறித் துப்பாக்கி.(sniper rifle)[1] இது வடமொழியில் அழிப்பவன் என்று பொருளிலான “வித்வான்சாக்” எனும் பெயரில் திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் 2005ல் தயாரிக்கப்பட்டது.[2]

வித்வான்சாக் தொலைகுறித் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடு இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது2007 -
பயன் படுத்தியவர்பார்க்க பயன்படுத்துபவர்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்போர்த்தளவாட தொழிற்சாலை அமைப்பு
வடிவமைப்பு2005
தயாரிப்பாளர்திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலை
உருவாக்கியதுபிப்ரவரி 2007
அளவீடுகள் (12.7 மிமீ variant)
எடை25 kg
நீளம்1.7 மீ
சுடு குழல் நீளம்1.1 மீ
பணிக் குழு2

சுடுகுழல் அளவு14.5 x 114மிமீ
வெடிக்கலன் செயல்மனித தாழியங்கி
வாய் முகப்பு  இயக்க வேகம்1,040 மீ/நொடி
செயல்திறமிக்க அடுக்கு1,800 மீ
அதிகபட்ச வரம்பு2,000 மீ
கொள் வகைதாளிகை
காண் திறன்8X42 மடங்கு பெரிதாக்கும் தொலைநோக்கி

வரலாறு தொகு

  1. 2006ல் முழு பரிசோதனை செய்யப்பட்டது.[3]AMR Vidhwansak பரணிடப்பட்டது 2010-01-19 at the வந்தவழி இயந்திரம் at Indian Military Database</ref>
  2. 2007ல் எல்லை பாதுகாப்புப் படையால் (Border Security Force) 100 வித்வான்சாக்கள் வாங்கும் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது.[4]
  3. 2008ல் எல்லை பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டது.[5]

சிறப்புகள் தொகு

  • 2,000மீட்டர் வரையிலான தொலைதூர தாக்குதல் திறனுடையது.[3]
  • குறி வைத்து தாக்குதல் மற்றும் 8 மடங்கு பெரிதாக்கும் தொலைநோக்கியுடனானது.
  • போர்க் கருவிகள், ஆயுதக் கூடங்கள், சிறிய ரகப் போர் வாகனங்களைத் தகர்த்தல் போன்றவைக்கு உதவக்கூடியது.
  • 50 முதல் 60 சதவிகிதம் வரையிலான பின்னுதைப்பு விசை தாங்கும் கருவி கொண்டது.(muzzle brake to resist recoil velocity)[3]

விவரங்கள் தொகு

வித்வான்சாக் விவரங்கள்

வெடி மருந்துக் குண்டு 12.7x108மி.மீ. 14.5x114மி.மீ. 20x 82மி.மீ.
எடை 25 கி 29 கி 26 கி
நீளம் 1.7 மீ 2.015 மீ 1.795 மீ
புரியிடைத்தூரம் 1: 390 மிமீ 1 : 420 மிமீ 1 : 560 மிமீ
காண் திறன் 8 X 42 மடங்கு பெரிதாக்கும் தொலைநோக்கி.
பின்னுதைப்பு வேகம் 845 மீ/நொடி 1,080 மீ/நொடி 720 மீ/நொடி
செயல்திறமிக்க அடுக்கு 1,800 மீ 1,800 மீ 1,300 மீ

பயன்படுத்துபவர் தொகு

  •   - இந்திய எல்லை பாதுகாப்புப் படை (100 துப்பாக்கிகள்)[3][5]

மேற்கோள் தொகு

  1. G. Prasad (2006-03-20). "Exhibiting the `powers' that protect us". The Hindu. Archived from the original on 2006-11-18. பார்க்கப்பட்ட நாள் 2009-10-13.
  2. Girja Shankar Kaura (2006-02-05). "Ordnance factories bag order for 30,000 carbines". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 2009-06-07.
  3. 3.0 3.1 3.2 3.3 AMR Vidhwansak பரணிடப்பட்டது 2010-01-19 at the வந்தவழி இயந்திரம் at Indian Military Database
  4. "Anti-material rifle handed over to BSF". The Hindu. 2008-02-15. Archived from the original on 2008-02-20. பார்க்கப்பட்ட நாள் 2009-10-13.
  5. 5.0 5.1 "BSF IG satisfied of AMR produced at OFT". Oneindia.in. 2008-02-15. Archived from the original on 2012-03-13. பார்க்கப்பட்ட நாள் 2009-06-07.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்வான்சாக்&oldid=3591982" இலிருந்து மீள்விக்கப்பட்டது