வினய் வித்தல் தியோடர்

இந்தியக் கணிதவியலாளர்

வினய் வித்தல் தியோடர் (Vinay Vithal Deodhar) என்பவர் இந்தியானா பல்கலைக்கழகத்தின் இயற்கணிதக் குழுக்கள் மற்றும் பிரதிநிதித்துவக் கோட்பாடு போன்ற கணிதப் பிரிவுகளில் பணிபுரிந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஆவார் [1]. 1948 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 3 ஆம் நாள் பிறந்த இவர் 2015 ஆம் ஆண்டு சனவரி 18 அன்று காலமானார். இந்தியாவின் மும்பை இவரது சொந்த ஊராகும் [2].

1974 ஆம் ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முனைவர் பட்டத்தைப் பெற்றார். இந்தியக் கணிதவியலாளர் எம்.எசு. ரகுநாதன் மேற்பார்வையில் இயற்கணித குழுக்களின் பகுத்தறியும் புள்ளி விரிவாக்கங்கள் தொடர்பான ஆய்வு இவரது முனைவர் பட்டத்திற்கான தலைப்பாகும்.

1975-1977 மற்றும் 1992-1993 ஆம் ஆண்டுகளில் இப்பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தில் பார்வையிடும் அறிஞராகவும் பணியாற்றியுள்ளார் [3][4].

மேற்கோள்கள் தொகு

  1. "Profile: Vinay Deodhar". Indiana University. Archived from the original on 28 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "Obituary - Vinay Deodhar". Indiana University Department of Mathematics Alumni Newsletter: p. 9. August 2015. https://math.indiana.edu/newsletters/AlumniNewsletter2015.pdf. பார்த்த நாள்: 21 May 2018. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Community of Scholars Profile: Deodhar, Vinay Vithal". Institute for Advanced Study. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  4. "Professor Vinay Deodhar dies at 66". indiana.edu. 5 February 2015. http://www.indiana.edu/~asnews/news-release/558.html. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினய்_வித்தல்_தியோடர்&oldid=3571929" இலிருந்து மீள்விக்கப்பட்டது