வினாக்கொத்து
வினாக்கொத்து (questionnaire) என்பது பதிலாளி ஒருவரிடமிருந்து பதில்களை பெறுவதற்காக வினாக்களை கோர்வையாகக் கொண்ட ஒரு பத்திரம் ஆகும். வினாக்கொத்து சில சமயங்களில் புள்ளிவிபரவியல் ஆய்வுக்கும் பயன்படுத்தபட்டுவருகின்றது. வினாக்கொத்தானது 1838 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள புள்ளிவிபரவியல் சமூகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இதன் பிரதியானது புள்ளிவிபரவியல் சமூகத்தின் இதழில் 1838 ஆம் ஆண்டு தொகுதி ஒன்று, வெளியீடு ஒன்று, ஐந்து தொடக்கம் பதின் மூன்று வரையான பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.[2]
வினாக்கொத்து மற்றைய கணிப்பாய்வுகளை விட சில அனுகூலங்களை கொண்டுள்ளது. அவையாவன, செலவு குறைந்தது மற்றும் ஒப்பீட்டளவில் நேர்காணல், தொலைபேசி கணிப்பாய்வுகளை விட குறைந்தளவான முன்னாயத்தம் போதுமானது. மேலும் வரையறுக்கப்பட்ட பதில்களைக் கொண்டிருப்பதனால் தொகுப்பதற்கும் இலகுவானது. இந்த வரையறுக்கப்பட்ட பதில்களானது சில சமயங்களில் பயனாளிகளை வெறுப்பூட்டுவதாகவும் அமைந்துள்ளது. இந்த வினாத்தாளின் வினாக்கள் வரையறுக்கப்பட்டிருப்பதன் காரணமாக பதிலாளி வினாக்களை வாசித்து பதிலளிக்கக்கூடியதாக உள்ளது. ஆகவே குறிப்பிட்ட சில மக்களுக்கு வினக்கொத்தின் மூலம் தான் ஆய்வு நடத்த வேண்டும் என்ற அவசியமில்லை.
மற்றைய கணிப்பாய்வுகளில் ஏற்படும் வினாக்கட்டமைப்பு மற்றும் சொற்பிரயோகங்கள் தொடர்பான பிரச்சனைகள் இந்த வினாக்கொத்து கணிப்பிலும் காணப்படுகின்றது.
வகைகள்
தொகுமாறிகள் தொடர்பான வினாக்களை உள்ளடக்கிய வினாக்கொத்தும், அளவீடு தொடர்பான அல்லது சுட்டிகள் தொடர்பான வினாக்கொத்தும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் பிரித்தறியமுடியும்.[3] வினாக்கொத்தின் முற்பகுதியானது பொதுவாக கணிப்பபீடுகளையும், பிற்பகுதியானது பரீட்சித்தல் தொடர்பானதாகவும் அமைகிறது.
மாறிகளை அளவீடு செய்வதற்கான வினாக்கொத்தானது பின்வருவனவற்றை உள்ளடக்கி உள்ளது.
- விருப்பு (உ.ம் அரசியல் கட்சி)
- பழக்கவழக்கங்கள் (உ.ம் உணவு உட்கொள்ளும் முறை)
- உண்மைகள் (உ.ம் பாலினம்)
அளவீடு தொடர்பான அல்லது சுட்டிகளை உள்ளடக்கிய வினாக்கொத்தானது பின்வருவனவற்றை உள்ளடக்கி உள்ளது.
- உள்ளகப் பண்புகள் (உ.ம் ஆளியல்பு உதாரணமாக வெளிப்படையாக இருத்தல்)
- மனப்பாங்கு (உ.ம் குடிவரவு தொடர்பான)
- சுட்டி (உ.ம் சமூக பொருளாதார நிலை)
உதாரணங்கள்
தொகுஉணவு மீடிறன் பற்றிய வினாக்கொத்து என்பது மக்களால் உள்ளடக்கப்படும் வெவ்வேறு வகையான உணவைப்பற்றியதாகும். இதனை ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தமுடியும். உதாரணமாக உட்கொள்ளும் விற்றமின்கள் அல்லது நச்சுப்பொருட்களின் (எக்கிரலமைட்டு) அளவை மதிப்பீட்டு செய்தல்.[4][5]
வினாக்கொத்து உருவாக்கம்
தொகுவினா வகைகள்
தொகுபொதுவாக வினாக்கொத்தானது பதிலாளியிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பதில்களுக்கான பல வினாக்களை தொகுப்பாக கொண்டுள்ளது. விபரிக்கப்பட வேண்டிய விடை கொண்ட வினாக்களுக்கும், வரையறுக்கப்பட்ட விடை கொண்ட வினாக்களுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. விபரிக்கப்பட வேண்டிய விடை கொண்ட வினாக்களுக்கு பதிலாளி விடைகளை தானாக உருவாக்கக்கூடியதாகவும், வரையறுக்கப்பட்ட விடை கொண்ட வினாக்களுக்கு வழங்கப்பட்ட விடைகளிலிருந்து ஒன்றை தெரிவு செய்து கொள்ளக்கூடியதாகவும் அமையும். வரையறுக்கப்பட்ட விடை கொண்ட வினாக்கள் வெளிப்படையானதாகவும் முழுமையான பரஸ்பரத்தைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும். இந்த வரையறுக்கப்பட்ட விடை கொண்ட வினாக்கள் நான்கு வகையான பதில் அளவீட்டு முறைகளை கொண்டுள்ளது:
- இணைக்கவர் (இரு தெரிவு), இங்கு பதிலாளி பதிலளிப்பதற்கு இரண்டு தெரிவுகள் வழங்கப்பட்டிருக்கும்
- பெயர் ரீதியான- பல்தெரிவு ,இங்கு பதிலாளி பதிலளிப்பதற்கு இரண்டுக்கு மேற்பட்ட தெரிவுகள் ஒழுங்கற்ற முறையில் அமைந்திருக்கும்.
- வரிசையளவில் – பல்தெரிவு, இங்கு பதிலாளி பதிலளிப்பதற்கு இரண்டுக்கு மேற்பட்ட விடைகள் ஒழுங்கில் வழங்கபட்டிருக்கும்.
- (வரையறுக்கப்பட்ட) தொடர்ச்சியான , இங்கு பதிலாளி பதிலளிப்பதற்கு தொடர்ச்சியான பதில்கள் வழங்கப்பட்டிருக்கும்.
விபரிக்கப்பட வேண்டிய விடை கொண்ட வினாக்களுக்குரிய பதிலாளியின் பதில்களுக்குரிய துலங்கலானது பின்னர் குறிப்பிடப்படும். உதராணமாக விபரிக்கப்பட வேண்டிய விடை கொண்ட வினாக்களுக்குரிய பதில்கள் பதிலாளியால் முழுமையாக்கப்படவேண்டும்.[3]
வினா ஒழுங்கு
தொகுபொதுவாக வினாக்கள் தர்க்கரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும். மிகவும் துல்லியமான பதில்களைப் பெறுவதற்காக வினாக்கள், குறைந்த முக்கியத்துவமான வினாக்களிலிருந்து மிக முக்கியமான வினாக்களை நோக்கியும், உண்மைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் சம்பந்தமான வினாக்களிலிருந்து மனப்பாங்கு தொடர்பான வினாக்களை நோக்கியும், பொதுவான வினாக்களிலிருந்து குறிப்பிட்ட வினாக்களை நோக்கியும் இருத்தல் வேண்டும்.
ஓர் ஒழுங்கு முறையில் வினாக்களை வினவுவதற்காக பொதுவாக வினாக்களை அமைக்கும் முறையொன்று பினபற்றப்படுகிறது. அந்த ஒழுங்கு முறையானது:
வகைப்படுத்தல்
தொகு- ஆரம்ப வினாக்கள்
- பெயர்ச்சி வினாக்கள்
- கடந்து செல்லக்கூடிய வினாக்கள்
- சிரமமான வினாக்கள்
- மாற்று வினாக்கள்
வகைப்படுத்தல் என்பது ஆரம்ப கட்டத்திலேயே பதிலாளி குறித்த வினாக்கொத்தை முழுமையாக்க வேண்டுமா, இல்லையா என்பதை குறிக்கின்றது. ஆரம்ப வினாக்கள் இலகுவாக விடையளிக்கக் கூடியதாகவும், பதிலாளியின் கவனத்தை கணிப்பாய்வு தொடர்பாக ஈர்ப்பதாகவும் அமைந்திருக்கும் அதேவேளையில் குறித்த ஆய்வின் நோக்கத்தை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. பெயர்ச்சி வினாக்கள் பல தரப்பட்ட விடயங்களை ஒன்றிணைக்ககூடியதாக அமைந்திருக்க வேண்டும். கடந்து செல்லக்கூடிய வினாக்கள் என்பது உதராணமாக “ஆம் எனில் மூன்றாம் வினாவிற்கு விடையளிக்கவும் இல்லை எனில் ஐந்தாம் வினாவிற்கு விடையளிக்கவும்”. சிரமமான வினாக்கள் இறுதியை நோக்கி அமைந்திருக்கும் ஏனெனில் பதிலாளி பதிலளிக்ககூடிய ஒரு மனோநிலையை அடைந்திருப்பார். இணையத்தள நேரடித்தொடர்பு வினாக்கொத்தை நிரப்பும் போது மதிப்பீட்டு குறிகாட்டியானது வினாக்கள் முடியுறும் தறுவாயில் இருப்பதை பதிலாளி உணரும்போது பதிலாளிகள் சிரமமான வினாக்களுக்கு பதிலளிக்க மேலும் தயாராகிறார்கள். வகைப்படுத்தல் மற்றும் மக்கள் தொடர்பான வினாகள் இறுதியில் அமைந்திருக்க வேண்டும். ஏனெனில் அவை தனிப்பட்ட வினாக்களாக உணரப்படும் இடத்து பதிலாளி அசெளகரிய நிலைக்கு உட்படுத்தப்படுவதோடு கணிப்பாய்வை முழுமையாக முடிக்க முடியாத நிலைக்கும் தள்ளப்படுகிறார்.[6]
வினாக்கொத்து அமைப்பதற்கான அடிப்படை விதிகள்
தொகு- பதில் அளிப்பதற்கு பெரிய குடித்தொகையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்டப்பட்ட பதிலாளிகளின் மொழி நடைக்கேற்ப கூற்றுக்கள் இடம்பெற வேண்டும்.
- வெவ்வேறு கருத்து மற்றும் பண்புக்கு ஏற்பாக அளிக்கப்படும் பதில்களுக்கு அமைவாக கூற்றுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
- குறித்த வினாக்களுக்கான விடைகளுக்கு பின்னர் பதிலாளியின் விருப்பத்துக்கு ஏற்பவாறு அவர்களின் கருத்துகளுக்கான முன்வைக்க இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
- ஒவ்வொரு தனித்தனி நோக்கத்துக்கான வினாக்கள் அமைக்கப்பட வேண்டும்.
- எதிர்ப்பான வினாக்களை விடுத்து சார்பான வினாக்களாக அமைந்திருக்க வேண்டும்.
- பதிலாளியைப் பற்றி முன்ஊகங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
- ஒவ்வொருவருடைய கல்வி தகைமைக்கேற்றவாறு தெளிவானதாகவும், இலகுவானதாகவும் இருத்தல் வேண்டும்.
- சரியாக சொற்பிரயோகங்கள், இலக்கண இலக்கியங்களை உள்ளடக்கியவாறு இருக்க வேண்டும்.
- ஒரு கூற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வினாக்களை தவிர்க்க வேண்டும்.
- வினாக்கள் எவையும் பக்கசார்பாகவோ, இல்லை பதிலாளியை குறித்த விடை நோக்கி அழைத்து செல்வதாகவோ அமையக்கூடாது.
வினாக்கொத்து நிர்வாக முறைகள்
தொகுவினாக்கொத்து நிர்வாகத்தின் முக்கிய முறைகளாவன:[3]
- நேர்காணல் வினாக்கொத்து நிர்வாகம், இங்கு வினாக்களை நேர்காணல் செய்பவர் வாய்மூலமாக வினவுவார்.
- தாள் மற்றும் பென்சில் வினாக்கொத்து நிர்வாகம், இங்கு வினாக்கள் ஓர் தாளில் அச்சிடப்பட்டிருக்கும்.
- கணணி ஊடான வினாக்கொத்து நிர்வாகம், இங்கு வினாக்கள் கணனியில் தரவிறக்கப்படும்.
- மாற்றப்படக்கூடிய வினாக்கொத்து நிர்வாகம், இங்கு வினாக்கள் கணனியில் சேமிக்கப்படும் அதேவேளை பதிலாளியின் பதில்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படக்கூடியதாகவும் அமைந்திருக்கும்.
வினாக்கொத்து தொடர்பான கருத்து
தொகுவினாக்கொத்தானது மலிவானதாகவும் விரைவானதாகவும் மற்றும் இலகுவில் ஆராயப்படக்கூடியதாகவும் இருந்த போதிலும் அது பலதரப்பட்ட பிரச்சனைகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. உதாரணமாக நேர்காணல்கள் போலல்லாது பதிலாளியால் கேள்விகள் முற்றாக உணரப்பட்டனவா என்று கேள்விகளை வினவுபவரால் அறியப்படமுடியாது.[7] அத்துடன் வினாக்கள் மிகவும் துல்லியமாக இருப்பதனால் பதிலானது முளுமையடையாமலும் போகலாம். தபால் மற்றும் இணையத்தள நேரடித்தொடர்பு வினாக்கொத்தானது குறைந்தளவான பதில்களையே பெற்றுத்தருகின்றது. இதில் உள்ள இன்னொரு பிரச்சனையாக கருதக்கூடியது யாதெனில் பொதுவாக தபால் மற்றும் இணையத்தள நேரடித்தொடர்பு வினாக்களுக்கு பதிலளிப்பவர்கள் தமது சொந்த சார்பான அல்லது எதிரான கருத்துக்களை முன்வைப்பதற்காகவே மறுமொழி அமைப்பதாக அமைந்து விடுகிறது. அத்துடன் பக்கசார்பற்ற கருத்துக்களைக் கொண்ட மக்கள் இவ் வினாக்கொத்தானது தமது நேரத்தை வீணடிப்பதாக கருதி பதிலளிக்க தவறிவிடுகிறார்கள்.
சில வினாக்கள் பதிலாளியின் பாலினம் தொடர்பாக அமைந்து விடுகிறது. பாலின அடையாளம் என்பது தன்னிச்சையாக தோன்றும் ஒரு எண்ணமே தவிர அதிகளவான முக்கியத்துவம் கொடுத்து வினவப்படவேண்டியதில்லை. பால் அல்லது பாலினம் இரண்டும் ஒத்த கருத்துள்ள சொல் என்பதை அறியாது தவறான இடங்களில் பயன்படுத்துதல் தவறானதாக அமைந்து விடுகிறது.[8] பால் அல்லது பாலினம் தொடர்பான பூரண அறிவின்மை காரணமாக சில வினாக்கொத்துக்களில் அமைக்கப்பட்டிருக்கும் வினாக்கள் பதிலாளியால் தவறான முறையில் புரிந்து கொள்ளக்கூடியதாகவோ அல்லது தவிர்ப்பதாகவோ அமைந்து விடுகிறது.
மேலும் இந்த வினாக்கொத்தானது சிறந்த புள்ளிவிபரவியல் தொழில்நுட்பங்களை உபயோகிப்படுத்தி சேகரிக்கப்படாதவிடத்து பதில்களானது குறித்த குடித்தொகையை பிரதிபலிப்பதாக அமையாது. ஏனெனில் சிறந்த புள்ளிவிபரவியல் தெரிவும் அதன் பதில்களும் வினாக்கொத்தின் எதிர்பார்ப்பை முற்றாக நிவர்த்தி செய்வதாக அமைந்திருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Gault, RH (1907). "A history of the questionnaire method of research in psychology". Research in Psychology 14 (3): 366–383. doi:10.1080/08919402.1907.10532551.
- ↑ "Fourth Annual Report of the Council of the Statistical Society of London".
- ↑ 3.0 3.1 3.2 Mellenbergh, G.J. (2008). Chapter 10: Tests and Questionnaires: Construction and administration. In H.J. Adèr & G.J. Mellenbergh (Eds.) (with contributions by D.J. Hand), Advising on Research Methods: A consultant's companion (pp. 211--236). Huizen, The Netherlands: Johannes van Kessel Publishing.
- ↑ "High maternal vitamin E intake by diet or supplements is associated with congenital heart defects in the offspring". BJOG 116 (3): 416–23. February 2009. doi:10.1111/j.1471-0528.2008.01957.x. பப்மெட்:19187374.
- ↑ "A Prospective Study of Dietary Acrylamide Intake and the Risk of Endometrial, Ovarian, and Breast Cancer". Cebp.aacrjournals.org. பார்க்கப்பட்ட நாள் 2013-02-18.
- ↑ Burns, A. C., & Bush, R. F. (2010). Marketing Research. Upper Saddle River, NJ: Pearson Education.
- ↑ Kaplan, R. M., & Saccuzzo, D. P. (2009). Psychological testing: Principles, applications, and issues. Belmont, CA: Wadsworth
- ↑ Fausto-Sterling, Anne “Of Gender and Genitals” from Sexing the body: gender politics and the construction of sexuality New York, Basic Books, 2000, [Chapter 3, pp. 44-77]
வெளி இணைப்புகள்
தொகு- Harmonised questions from the UK Office for National Statistics