வினாவிடைப் புராணம்

அகத்தியர் கேட்கும் வினாக்களுக்கு முருகப்பெருமான் விடை சொல்வதாக நூல் தொடர்கிறது

வினாவிடைப் புராணம் என்னும் தமிழ்நூல் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புராணத் திருமலைநாதர் என்பவரால் இயற்றப்பட்டது. இவரது சிவ மகா புராணம் தொகுப்பில் மூன்றாவதாக வரும் புராணம்.

இதில் 44 பாடல்கள் உள்ளன. அகத்தியர் கேட்கும் வினாக்களுக்கு முருகப்பெருமான் விடை சொல்வதாக நூல் தொடர்கிறது.

சில வினாக்களும் விடைகளும்

  • சிவன் கயிலை இருக்கையில் சுடலையில் நடனம் ஆடியது ஏன்?
    • எல்லோருடைய உடலும் வெந்தழியும் இடத்தை இருப்பிடமாகக் கொண்டதால்.
  • கொன்றை முதலான மாலைகள் இருக்கையில் மண்டை ஓட்டு மாலை அணிந்தது ஏன்?
    • தேவர்கள் தொகுதி அழிந்தபின் மிஞ்சுவது மண்டையோடு மட்டுமே

இப்படி விபூதி அணிந்தது, எருது ஏறியது முதலான வினாக்களுக்கு விடைகள் இந்த நூலில் கூறப்படுகின்றன.

பாடல் எடுத்துக்காட்டு

வினா

சாந்து காரகில் சந்தனம் குங்குமம்
தோய்ந்த நாள் அங்கத்து ஊரி இமசலம்
வாய்ந்த வாச வகை விட்டு மார்பில் நூல்
ஆய்ந்த நாயகன் பூதி அணிந்தது ஏன்?

விடை

வெய்ய வினை நீறு ஆக்கும் முறைமையால் நீறு என்றும், விளங்கு பூதி
துய்ய நெறி தருகையால் பூதி என்றும், மல இருளைத் துரத்தி யார்க்கும்
உய்யும் வகை விளக்கலால் ‘துளக்கம்’ என்றும், எழு பவத்தை ஒழித்தல் தன்னால்
மெய்யின் அருள் ஆக்கை என்றும், அப் பொடிக்குப் பெயராகப் புகலல் ஆகும் [1]

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு தொகு

  1. பாடல் 25 – இது கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்துள்ள பாடல். பொருள் விளங்குவதற்காகப் பிரித்து எழுதிக் காட்டப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினாவிடைப்_புராணம்&oldid=1282197" இலிருந்து மீள்விக்கப்பட்டது