வினிதா அக்ரவால்
வினிதா அக்ரவால் (Vinita Agrawal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கவிஞராவார். புத்தக ஆசிரியராகவும் அருங்காட்சியகக் காப்பாளராகவும் இவர் இயங்கினார். நான்கு கவிதை புத்தகங்களை எழுதியுள்ளார். பருவநிலை மாற்றம் குறித்த ஒரு தொகுப்பின் ஆசிரியரும் ஆவார். பசியின் பட்டு (தி சில்கு ஆப் அங்கர்) என்ற கவிதைத் தொகுப்பிற்காக 2018 ஆம் ஆண்டுக்கான இரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசுக்காக இவர் பெயர் பட்டியலிடப்பட்டது. பின்னர் கூட்டாக இப்பரிசு வழங்கப்பட்டது. தாகூர் இலக்கிய பரிசின் ஆலோசனைக் குழுவில் வினிதா இடம்பெற்றுள்ளார். பெண்ணிய இலக்கியம் மற்றும் எழுதப்படாத சமூகங்களின் எழுத்துக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள உசாவா இலக்கிய விமர்சனம் என்ற ஆங்கில மொழி இலக்கிய இதழில் வினிதா கவிதை ஆசிரியராகவும் ஈடுபட்டு வருகிறார். [1]
வினிதா அக்ரவால் Vinita Agrawal | |
---|---|
பிறப்பு | பிகானேர், இராசத்தான், இந்தியா | 18 ஆகத்து 1965
தொழில் | கவிஞர், பத்திரிகை ஆசிரியர் மற்றும் அருங்காட்சியகக் காப்பாளர் |
மொழி | ஆங்கிலம் |
தேசியம் | இந்தியன் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தி சில்க்கு ஆப் அங்கர் |
இணையதளம் | |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
படிநிலைகள், மேலாதிக்கங்கள் மற்றும் இயல்பான சார்புகளை கேள்விக்குள்ளாக்கும் கவிதை, புனைகதை, புனைகதை, விமர்சனங்கள் மற்றும் நேர்காணல்களை உசாவா இதழ் வெளியிட்டு வருகிறது.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுவினிதா அக்ரவால் 1965 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 18 ஆம் தேதியன்று இந்தியாவின் இராசத்தான் மாநிலம் பிகானேர் நகரில் பிறந்தார்.[2] குசராத்து மாநிலம் ஆனந்த் நகரம், மேற்கு வங்க காளிம்பொங், கொல்கத்தா நகரங்களில் வினிதா பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் பரோடாவின் மகாராசா சாயாசிராவ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களைப் பெற்றார். ஆப்டெக் நிறுவனத்தில் கணினி நிரலாக்கத்தில் ஒரு பட்டயப் படிப்பையும் முடித்தார். [3]
படைப்புகள்
தொகுஇவரது கவிதைகள் ஆசியன்சா, விண்மீன்கள், தி ஃபாக்சு சேசு விமர்சனம், பீயா ரிவர் செய்தி இதழ், திறந்த சாலை விமர்சனம், சிடாக்கோம் இலக்கிய விமர்சனம், கவிதை பசிபிக் போன்ற இதழ்களில் வெளியிடப்பட்டன. [4] [5] உசாவா இலக்கிய விமர்சனம் என்ற பத்திரிகையில் கவிதை ஆசிரியராக பணியாற்றினார். [6]
செயந்தா மகாபத்ரா, பப்லோ நெருடா மற்றும் ரூமி ஆகியோரின் படைப்புகளால் வினிதா பெரிதும் பாதிக்கப்பட்டார். இருத்தலியல் கோபம் மற்றும் பெண்கள் அதிகாரம் போன்ற கருப்பொருள்கள் மற்றும் பாடப்பொருள்களில் இவர் கவிதைகள் எழுதுகிறார். [3] நான்கு கவிதை புத்தகங்களை எழுதியுள்ளார்: இரண்டு முழு நிலவுகள், பேசாத வார்த்தைகள், மிக நீண்ட மகிழ்ச்சி மற்றும் பசியின் பட்டு என்பவை அந்த நான்கு நூல்களாகும். [6]. கவிதைகள் இயல்பாக வாழ்க்கையின் ஆழத்தோடு நெருக்கமாகவும், ஆழ்ந்த சிந்தனையோடும் ஆக்கப்படுகின்றன. இரண்டு முழு நிலவுகள் என்ற நூல் பிறப்பு, இறப்பு, இருப்பு, குடும்பம், ஆன்மா மற்றும் இதயம் உள்ளிட்ட பல்வேறு கவலைகளையும், உலக ஒழுங்கையும், அவை எப்படி மனநலத்தை பாதிக்கின்றன போன்ற செய்திகளை ஆராய்கிறது. [7] இருத்தலியல் கோளாறில் புதிய முன்னோக்குகளை கொண்டு வருகிறது. வெளி உலகத்தில் பரவும் வேதனை மற்றும் கோபத்திற்கு எதிரான கடைசி அமைதியாக உள் அமைதி தோன்றும் வரை இவை நெருக்கமான மற்றும் தனிப்பட்ட குழந்தைப் பருவ நினைவுகளை நெசவு செய்கின்றன என்கிறார் வினிதா.
2020 ஆம் ஆண்டில் உங்கள் கண்களைத் திறக்கவும் என்ற காலநிலை மாற்றம் குறித்த ஒரு தொகுப்பைத் தொகுத்தார். 63 இந்திய எழுத்தாளர்கள் எழுதிய கவிதை மற்றும் உரைநடைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இயற்கை உலகத்துடனான மனித உறவுகளை இத்தொகுப்பு ஆராய்கிறது. [5] [8]
சிறப்புகள்
தொகு- இந்தியாவின் சமகால இலக்கிய விமர்சனம் 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. [2]
- ஆங்கிலப் பிரிவில் (2015) காயத்ரி கமர்சு நினைவு விருது வென்றார். [9]
- டால் கிராசு ரைட்டர்சு கில்ட்டு விருதில் (2017) இரண்டாவது பரிசை வென்றார். [3]
- எதிர் கவிதை பரிசு (2017). [3]
- இரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசுக்கு (2018) இவர் பெயர் பட்டியலிடப்பட்டது. [3] [10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Advisory Board – Tagore Prize". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ 2.0 2.1 "Cha: An Asian Literary Journal". March 2012. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Verses From the Heart". Marwar. 25 January 2019. Archived from the original on 20 டிசம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Two Poems by Vinita Agrawal". Mithila Review. 4 May 2016. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ 5.0 5.1 Mehdi, Tamanna S (22 October 2020). "Wake up to climate change". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ 6.0 6.1 "Open Your Eyes—Poetry's Response to Climate Change". The Chakkar. 19 October 2020. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021."Open Your Eyes—Poetry's Response to Climate Change". The Chakkar. 19 October 2020. Retrieved 24 January 2021.
- ↑ Nalini, Priyadarshni (May 2019). "Review of Two Full Moons by Vinita Agrawal". பார்க்கப்பட்ட நாள் 31 January 2021.
- ↑ Sen, Sudeep (22 January 2021). "Essay: Poetry for every day of the year, for all seasons". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ Sivakumar, Srividya (18 December 2015). "Running in Poetry: Of paintings in poetry". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ "Shortlist year 2018. – Rabindranath Tagore Literary Prize". பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
புற இணைப்புகள்
தொகு- Works by Vinita Agrawal at Google Books
- அதிகாரப்பூர்வ இணையதளம்