வின்சென்சோ பரோன்

இத்தாலிய வேதியியலாளர்

வின்சென்சோ பரோன் (Vincenzo Barone) இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். 1952 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் நாள் இத்தாலியின் அங்கோனா நகரத்தில் இவர் பிறந்தார். கோட்பாட்டு மற்றும் கணக்கீட்டு வேதியியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவராக இவர் செயல்பட்டார். [1]

1994 ஆம் ஆண்டில் நேபிள்சு பல்கலைக்கழகத்தில் இயற்பிய வேதியியல் பாட முழு பேராசிரியராகவும், 2009 ஆம் ஆண்டு முதல் சுகூலா நார்மலே சுப்பீரியோர் டி பிசா எனப்படும் உயர்கல்வி நிறுவனம் லா நார்மலேவில் கோட்பாட்டு மற்றும் கணக்கீட்டு வேதியியல் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். [2] 2016 ஆம் ஆண்டு சுகூலா நார்மலின் இயக்குநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] பேராசிரியர்கள் குழுவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக எழுந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு காரணமாக 2019 ஆம் ஆண்டு இப்பதவியை விட்டு விலகினார். [4]

2011 முதல் 2013 வரை இத்தாலிய வேதியியல் கழகத்தின் தலைவராக இருந்துள்ளார். குவாண்டம் மூலக்கூறு அறிவியல் அகாடமி, ஐரோப்பிய அறிவியல் அகாடமி, மற்றும் இராயல் வேதியியல் கழகம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்சென்சோ_பரோன்&oldid=4040315" இலிருந்து மீள்விக்கப்பட்டது