வின்னிப்பெக் ஏரி

கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் உள்ள வின்னிப்பெக் ஏரி, மத்திய வட அமெரிக்காவில் உள்ள பெரிய ஏரியாகும். வின்னிப்பெக் நகருக்கு வடக்கே 55 கிலோமீட்டர் (34 மைல்) தொலைவில் உள்ள இந்த ஏரி 24,514 சதுர கிலோமீட்டர் (9,465 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. தென் கனடாவில் உள்ள மிகப் பெரிய ஏரி இது என்பதுடன், கனடாவில் உள்ள ஐந்தாவது பெரியதும், உலகின் பதினோராவது பெரியதுமான நன்னீரேரி இதுவேயாகும். எனினும், ஒப்பீட்டளவில் இது மிகவும் ஆழம் குறைந்தது. வடக்கு மற்றும் கிழக்கு வடிநிலங்களை இணைக்கும் ஒடுங்கிய கால்வாய் 36 மீ (118 அடி) தவிர்ந்த ஏனைய பகுதிகளின் சராசரி ஆழம் 12 மீ (39 அடி) ஆகும்.

வின்னிப்பெக் ஏரி
நிலப்படம்
அமைவிடம்மனித்தோபா, கனடா
ஆள்கூறுகள்52°7′N 97°15′W / 52.117°N 97.250°W / 52.117; -97.250
வகைமுன்னர் பனியாற்று ஏரி அகாசிசின் பகுதி, நீர்த்தேக்கம்
முதன்மை வரத்துவின்னிப்பெக் ஆறு, சாஸ்கச்சேவான் ஆறு, மழை வீழ்ச்சி, சிவப்பாறு
முதன்மை வெளியேற்றம்நெல்சன் ஆறு
வடிநிலப் பரப்பு984,200 km2 (380,002 sq mi)
வடிநில நாடுகள்கனடா, ஐக்கிய அமெரிக்கா
அதிகபட்ச நீளம்416 km (258 mi)
அதிகபட்ச அகலம்100 km (60 mi) (N Basin)
40 km (20 mi) (S Basin)
மேற்பரப்பளவு24,514 km2 (9,465 sq mi)
சராசரி ஆழம்12 m (39 அடி)
அதிகபட்ச ஆழம்36 m (118 அடி)
நீர்தங்கு நேரம்3.5 ஆண்டுகள்
கரை நீளம்11,858 km (1,155 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்217 m (712 அடி)
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்னிப்பெக்_ஏரி&oldid=1372153" இலிருந்து மீள்விக்கப்பட்டது