விபா தாதீச்
விபக் தாதீச் (Vibha Dadheech) இவர் கதக் நடன வடிவத்தில் பிரபலமான இந்திய பாரம்பரிய நடனக் கலைஞராவார். ராய்கர் அரசவை நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜிடமும் பின்னர் பண்டிட் சம்பு மகாராஜிடமும் கதக் கற்கத் தொடங்கினார். [1] இவர் பத்மஸ்ரீ முனைவர், பண்டிட் புரு தாதீச்சின் மூத்த சீடரும் மனைவியுமாவார். [2]
கல்வி
தொகுஇவர், 1988 ஆம் ஆண்டில் கைராகர்இந்திரா கலா இசை விஸ்வவித்யாலயவிலிருந்து கதக்கில் முனைவர் பட்டம் பெற்றார். [3] கைராகர், இந்திரா கலா இசை விஸ்வவித்யாலயாவிலிருந்து 988 இல் முனைவர் பட்டம் பெற்றார் [3]
- குரு சீட பரம்பரையின் கீழ் கதக் பண்டிட். பிர்டு மகாராஜ் மற்றும் பண்டிட். சம்பு மகாராஜ் ஆகியோரிடம் பயின்றார்.
விருதுகள்
தொகு- மத்திய பிரதேசத்தின் மிக உயர்ந்த விருதான சிகர் சம்மானுடன் பாராட்டப்பட்டார். [4]
- 2011-12 ஆண்டுகளில் இந்திய அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சகத்தின் மூத்த கூட்டாளர் கௌரவம் இவருக்கு வழங்கப்பட்டது. [5]
- 50 ஆண்டுகளுக்கும் மேலாக கதக்கிற்கு சேவை செய்ததற்காக மும்பையின் 25 வது கோபி கிருட்டிணா மகோத்சவத்தில் இவர் 2015இல் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார். [1]
எழுத்துப்பணி
தொகுஇவர் ஒரு எழுத்தாளராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். தனது ஆராய்ச்சி புத்தகமான பாரதிய நிருத்ய கி வர்ணமாலா: ஹஸ்ட் முத்ரேயன் (இந்திய நடன சைகைகளின் ஏபிசி) என்ற நூலை இந்தி மொழியில் வெளியிட்டார். ஹார்ட்கவர் - 2003பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8190105712 [6] மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் இந்தூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை நடன பாடத்திட்டங்களுக்கும் இவரது புத்தகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. [7]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "कलाकार डॉ. विभा दाधीच को लाइफ टाइम अचीवमेंट अवॉर्ड". Dainik Bhaskar. 24 December 2018.
- ↑ "Celebrating a Guru". 26 July 2019.
- ↑ 3.0 3.1 "Sangeet Galaxy". www.sangeetgalaxy.co.in. Archived from the original on 2018-01-13. பார்க்கப்பட்ட நாள் 2020-12-14.
- ↑ "Shikhar Samman for Swayam Prakash, Rahat Indori, Lata Munshi & 24 others". The Times of India. 19 November 2019. https://timesofindia.indiatimes.com/city/bhopal/shikhar-samman-for-swayam-prakash-rahat-indori-lata-munshi-24-others/articleshow/72116760.cms. பார்த்த நாள்: 29 May 2020.
- ↑ http://www.indiaculture.nic.in/sites/default/files/Schemes/fellowship%202011-12.pdf
- ↑ "Buy BHARTIYA NRITYA KI VARNMAALA HAST MUDRAYEN (The ABC of Indian Dance Hand Gestures) in Hindi Book Online at Low Prices in India | BHARTIYA NRITYA KI VARNMAALA HAST MUDRAYEN (The ABC of Indian Dance Hand Gestures) in Hindi Reviews & Ratings - Amazon.in".
- ↑ https://www.dauniv.ac.in/public/frontassets/syllabus/UGPGAnnualSyllabus/DanceBhratnatayam.pdf