விமல் குமார் சோர்டியா

இந்திய அரசியல்வாதி

விமல் குமார் சோர்டியா (Vimal Kumar Chordia) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1924 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஓர் அரசியல்வாதியாக இவர் அறியப்படுகிறார். 1952 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை மத்திய பாரத சட்டமன்ற உறுப்பினராகவும், 1957 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். சோர்டியா பாரதிய சன சங்கத்தின் மாநிலப் பிரிவின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார், 1962 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[1] சோர்டியாவின் மரணம் 9 ச்னவரி 2019 அன்று அறிவிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "C" (PDF). 4 டிசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "MP House remembers Atal, Somnath". 9 ஜனவரி 2019. http://www.uniindia.com/mp-house-remembers-atal-somnath/north/news/1462831.html. பார்த்த நாள்: 8 மார்ச் 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விமல்_குமார்_சோர்டியா&oldid=3798469" இலிருந்து மீள்விக்கப்பட்டது