வியட்நாமியப் புத்தாண்டு
வியட்நாமியப் புத்தாண்டு, வியட்நாம் கலாச்சாரத்தில் மிக முக்கியமான கொண்டாட்டமாகும். சீன-வியட்நாம் மொழியில் புத்தாண்டு என்பது "முதல் நாள் முதல் காலை விருந்து" என பொருள்படும். வியட்நாமியப் புத்தாண்டானது வழக்கமாக சீன நாட்காட்டியின் அடிப்படையில் வசந்த வருகையை கொண்டாடப்படுகிறது. இது ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் வருகிறது.[1]
வியட்நாமியப் புத்தாண்டு | |
---|---|
வியட்நாமியப் புத்தாண்டு அலங்காரம் (2012) | |
கடைப்பிடிப்போர் | வியட்நாமியர் |
வகை | பண்டிகை |
முக்கியத்துவம் | வியட்நாமியப் புத்தாண்டு, |
கொண்டாட்டங்கள் | டிராகன் நடனம், சிங்க நடனம், பகிர்ந்து உண்ணுதல், பரிசு கொடுப்பது, உறவுகளைக் காணுதல், பட்டாசு வெடித்தல் |
நாள் | சீன நாட்காட்டியில் முதல் நாள் |
தொடர்புடையன | சீனப் புத்தாண்டு, கொரியப் புத்தாண்டு, சப்பானியப் புத்தாண்டு |
வியட்நாம் மற்றும் சீனா இடையே உள்ள ஒரு மணி நேர வித்தியாசம் காரணமாக அமாவசை வெவ்வேறு நாட்களில் நிகழும் சந்தர்ப்பம் தவிர பொதுவாக சீனப் புத்தாண்டு கொண்டாடப்படும் அதே நாளில் வியட்நாமியப் புத்தாண்டும் கொண்டாடப்படுகின்றது. அது வியட்நாமிய நாட்காட்டியின் முதல் மாதத்தின் முதல் நாளில் இருந்து குறைந்தது மூன்றாம் நாள் வரை கொண்டாடப்படுகின்றது. வியட்நாம்வாசிகள் பல சிறப்பு உணவுகளை சமைத்தல், வீட்டைச் சுத்தப்படுத்தல் என்பன மூலம் புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டங்களுக்குத் தயாராகின்றனர்.
மேலும் புத்தாண்டானது யாத்திரைகளுக்கும் குடும்ப மறு சந்திப்புகளுக்குமான நேரமாக இருக்கின்றது. அவர்கள் கடந்த ஆண்டின் கடினமான பகுதிகளை பற்றி மறந்து வரவிருக்கும் ஆண்டை ஒரு நல்ல ஆண்டாக நம்பிக்கையுடன் வரவேற்கின்றனர். அவர்கள் புத்தாண்டை வசந்த காலத்தின் முதல் நாளெனக் கருதுகின்றனர். இப்பண்டிகை பொதுவாக "வசந்த விழா(Hội Xuan)" என அழைக்கப்படுகிறது.
References
தொகு- ↑ "TET NGUYEN DAN The Vietnamese New Year". Archived from the original on 27 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 12 June 2013.