வியட்நாம் வரலாறு
வியட்நாம் வரலாறு (history of Vietnam) 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமை வாய்ந்ததாகும்.[1] வியட்நாமில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடக்கின்றன; 1965 க்குப் பின்னரான தொல்லியல் கண்டுபிடிப்புகள் சினாந்திரப்பசு வகை நிமிர்நிலை மாந்த இனத்தினைச் சார்ந்த இரு தொல்மாந்தரின் எச்சங்கள் கிடைத்துள்ளதைக் காட்டுகின்றன. இவை இடைநிலைப் பிளிசுட்டோசீன் காலத்தைச் சேர்ந்தவை; அதாவது, அரை மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியவை. எனவே, பண்டைய வியட்நாமுலகின் சில தொடக்கநிலை நாகரிகங்களில் ஒன்றாக அமைந்து, முதலில் வேளாண்மையை உருவாக்கிய மக்கள் வாழ்ந்த இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[2][3] சிவப்பாற்றுப் பள்ளத்தாக்கு அல்லது கணவாய் இயற்கையான புவிப்பரப்பியல், பொருளியல் அலகாக அமைந்த்தாகும். இதன் வடக்கிலும் மேற்கிலும் மலைகளும் காடுகளும் அரணாக உள்ளன; கிழ்க்கில் கடலும் தெற்கில் சிவப்பாற்றுக் கழிமுகப் படுகையும் உள்ளன. எனவே, சிவப்பாற்றின் வெள்ளப் பெருக்கைக் கட்டுபடுத்தவும் நீரியல் கட்டுமானங்களைக் கட்டியமைக்கவும் தொழில்வணிகப் பரிமாற்றத்தை ஆளவும் முற்றுகைகளைத் தடுக்கவும் ஓர் ஒருங்கிணைந்த தேவை நிலவியது. இந்நிலைமை, முதல் வியட்நாமிய விடுதலையான அரசும் ஆட்சியும் தோரயமாக கி.மு 2879 இலேயே உருவாக வழிவகுத்துள்ளது.[4][5][6] வியட்நாம் வரலாற்றில் அடுத்த பெருந்தாக்கம் விளைவித்த பகுதியான பிந்தைய வெண்கலக் காலத்தின், தோங் சோன் பண்பாடுசெழித்த நாகரிகத்தைப் பெற்றெடுத்தது.வியட்நாமின் தனித்தன்மை வாய்ந்த புவியியல் அயலவர் முற்றுகையிட அரியதாக அமைந்தது. இதனால் தான் கூங் அரசகுலத்தின் கீழமைந்த வியட்நாம் நெடுங்காலமாக தற்சார்புள்ள விடுதலையான தன்னிறைவான நாடாக விளங்கியது. மிகத் தொடக்கத்தில் வியட்நாமை முற்றுகையிட்டவர்களாக சிக்தய்களும் குவின் அரசகுலமும் விளங்கின. ஆனால், பண்டைய வியட்நாமியர்கள் முற்றுகைகள் முடிந்தவடைந்த உடனே தம் தாய்நாட்டை மீட்டெடுத்துள்ளனர்.
ஒருமுறை சீன ஆட்சிக்கு உட்பட்டதும் வியட்நாமால் தன்னாட்சிக்கு மீள இயலவில்லை; மேலும், அது அயலாட்சியில் இருந்து 1100 ஆண்டுகளுக்குத் தப்பவும் முடியவில்லை; அதுவரை வியட்நாமைப் பல சீன அரசகுலங்கள் ஆண்டனஅவையாவன: ஏன் அரசகுலம், கீழை வூ அரசகுலம், யின் அரசகுலம் (265–420), இலியூ சோங் அரசகுலம், தென்குவி அரசகுலம், இலியாங் அரசகுலம், சூயி அரசகுலம், தாங் அரசகுலம், தென் ஏன் அரசகுலம்; இதனால், வியட்நாமிய மொழியும் பண்பாடும் தேசிய அடையாளமும் இழக்கப்பட்டது. இந்த 1100 ஆண்டுகளில் சில காலங்களில் பின்வரும் அரசகுலங்களின் தன்னாட்சிகளும் ஏற்பட்டாலும் மிகக் குறுகிய ஆயுளையே அவை பெற்றிருந்தன;அவையாவன: திரியேயு அரசகுலம், திரங் உடன்பிறப்புகள் (மகலிர்), தொடக்கநிலை இலய் அரசகுலம், கூசு கணம், துவோங்தின் நிகே அரசகுலம்.
வடக்கு வியட்நாமில் சீன ஆட்சி நிலவியபோது, இன்றைய நடுவண், தென் வியட்நாம் பகுதிகளில் பல நாகரிகங்கள் செழித்திருந்தன. குறிப்பாக புனானிய, சம்பா அரசுகள் நிலவின. இந்த ஆட்சியின் நிறுவனர்களும் ஆட்சியாளர்களும் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல.என்றாலும், 10 ஆம் நூற்றாண்டு முதல், சிவப்பாற்றுக் கழிமுகப் படுகையில் எழுச்சி பெற்ற வியட்நாமியர் இந்த நாகரிகங்களை வென்றனர்.
முந்துவரலாறு
தொகுமுதன்மைக்கட்டுரை:வரலாற்றுக்கு முந்தைய வியட்நாம்
முதல் மாந்தவாழ்வுச் சான்று
தொகுபழைய கற்காலம் முதல் புதிய கற்காலம் வரையில்
தொகுமுதன்மைக்கட்டுரை:வியட்நாமின் பண்டைய, வரலாற்றுக்கு முந்தைய பண்பாடுகள்
தொடக்கநிலை அரசகுல ஊழி (கி.மு 2879–கி.மு 111)
தொகுமுத்ன்மைக்க்ட்டுரை:தொடக்கநிலை அரசகுல ஊழி
கோங் பாங் காலம்/அரசகுலம் (கி.மு 2879–கி.மு258)
தொகுமுதன்மைக்கட்டுரை:கோங் பாங் அரசகுலம்
தொடக்கநிலைக் கோங் பாங் (கி.மு 2879–கி.மு1913)
தொகுஇடைநிலைக் கோங் பாங் (கி.மு 1912–கி.மு1055)
தொகுபிந்தைய கோங் பாங் (கி.மு 1054–கி.மு258)
தொகுபண்பாட்டுப் படிமலர்ச்சி
தொகுதூசு அரசகுலம் (கி.மு257–கி.மு179)
தொகுமுதன்மைக்கட்டுரை:ஆன் துவோங் வுவோங்|சோலாவோ கோட்டை
திரியேயு அரசகுலம் (கி.மு207–கி.மு111)
தொகுமுதன்மைக்கட்டுரை:திரியேயு அரசகுலம்
சீன ஆயிரம் ஆண்டாட்சி (கி.மு 111 – கி,பி 939)
தொகுமுதன்மைக்கட்டுரை: வியட்நாமில் சீன ஆட்சி
ஏன் அரசகுல ஆட்சி (கி.மு111 –கி.பி 40)
தொகுமுதன்மைக்கட்டுரை:வியட்நாமில் முதல் சீன ஆட்சி
திரங் உடன்பிறப்புகள் (மகளிர்) (40–43)
தொகுமுதன்மைக்கட்டுரை:திரங் உடன்பிறப்புகள் (மகளிர்)
ஏன் முதல் இலியங் வரையிலான சீன ஆட்சி (43–544)
தொகுமுதன்மைக்கட்டுரை:வியட்நாமில் இரண்டாம் சீன ஆட்சி
தொடக்கநிலை இலய் அரசகுலம் (544–602)
தொகுமுதன்மைக்கட்டுரை:தொடக்கநிலை இலய் அரசகுலம்}}
சூயி முதல் தாங் வரையிலான சீன ஆட்சி (602–905)
தொகுமுத்ன்மைக்கட்டுரை:வியட்நாமில் மூன்றாம் சீன ஆட்சி
தன்னாட்சி (905–938)
தொகுமுதன்மைக்கட்டுரை:கூசு கணம், துவோங்தின் நிகே, கியேயுகோங் தியேன்
பிந்தைய அரசகுல ஊழி (939–1945)
தொகு
நிகோ, தின், தொடக்கநிலை இலே அரசகுலங்கள் (939–1009)
தொகுமுதன்மைக்கட்டுரைகள்: நிகோ அரசகுலம், தின் அரசகுலம், தொடக்கநிலை இலே அரசகுலம்
இலய், திரான், கோ அரசகுலங்கள் (1009–1407)
தொகுமுதன்மைக்கட்டுரைகள்: இலய் அரசகுலம், திரான் அரசகுலம், கோ அரசகுலம்
மிங் சீன ஆட்சி முதல் பிந்தைய இலே அரசகுலம் வரை (1407–1527)
தொகுமுதன்மைக்கட்டுரைகள்: நான்காம் சீன ஆட்சி, பிந்தைய திரான் அரசகுலம், பிந்தைய இலே அரசகுலம்
மாசு, இலே அரசகுலங்கள் (1527–1788)
தொகுமுதன்மைக்கட்டுரைகள்: இலே அரசகுலம், மசு அரசகுலம், வியட்நாம் தெற்கு, வடக்கு அரசகுலங்கள்
திரின், நிகுயேன் நிலக்கிழார்கள்
தொகுமுதன்மைக்கட்டுரைகள்:திரின் நிலக்கிழார்கள், நிகுயேன் நிலக்கிழார்கள், திரின்–நிகுயேன் போர்.
மேலும் காண்க,நிகுயேன் நிலக்கிழார்களின் தரைப்படைகள்
ஐரோப்பியர் வருகையும் தெற்கு நொக்கிய விரிவாக்கமும்
தொகுமுதன்மைக்கட்டுரைகள்:வியட்நாமில் கிறித்தவம்,நாம் தியேன்.
தாய்சோன், நிகுயேன் அரசகுலங்கள் (1778–1945)
தொகுமுதன்மைக் கட்டுரைகள்:தாய்சோன் அரசகுலம்,நிகுயேன் அரசகுலம்.
பிரெஞ்சு இந்தோசீனா
தொகுகுடியாட்சிக் காலம் (1945 இல் இருந்து)
தொகுபொதுவுடைமை வடக்கும் முதலுடைமைத் தெற்கும் (1945–76)
தொகு1976 க்குப் பிறகான சமவுடைமைக் குடியரசு
தொகுவியட்நாமின் மாறும் பெயர்கள்
தொகுகீழே காலந்தோறும் வியட்நாமின் பெயர்மாற்றங்கள் தரப்படுகின்றன:
காலம் | நாட்டின் பெயர் | காலச் சட்டகம் | எல்லை |
---|---|---|---|
கோங்பாங் அரசகுலம் | சிச் குய் 赤鬼 | கி.மு 2879–2524 | குனானின் தோங்திங் ஏரியில் இருந்து tமிகத் தெற்கே உள்ள பகுதியான இன்றைய குவாங் திரி மாகாணம் வரை (இது சீனாi சார்ந்த குவாங்சி, குவாங்தோங் ஆகிய மாகாணங்களையும் உள்ளடக்கும்). |
கோங்பாங் அரசகுலம் | வான்லாங் 文郎 | கி.மு 2524–258 | இக்கால வடக்கு வியட்நாம்+ இக்கால தாங்கோவா, நிகேயான், காதின் ஆகிய மூன்று மாகாணங்கள். சிவப்பாற்றுக் கழிமுகப் படுகை இலாசு வியட் பண்பாட்டின் தயகம் ஆகும். |
தூசு அரசகுலம் | ஆவுலாசு 甌雒 | கி.மு 257–207 | சிவப்பாற்றுக் கழிமுகப் படுகையும்அதுசார்ந்த வடக்கு, மேற்கு மலப்பகுதிகளும். |
திரியேயு அரசகுலம் | நாம் வியட் 南越 | கி.மு 207–111 | இன்றைய வடக்கு, வடக்கு நடுவண் வியட்நாம் (தெற்கெல்லை கோவான்சோன் வரை விரிவுபடுத்தியது)+ குவாங்தோங், குவாங்சி பகுதிகள் . |
சீன ஏன் அரசகுல ஆட்சி | கியாவோ சி (யியாவோழி) 交趾 | கி,மு 111 – கி.பி 39 | இன்றைய வடக்கு, வடக்கு நடுவண் வியட்நாம் (தெற்கெல்லை மாவாறு வரை விரிவுபடுத்தியது)+ சா ஆற்றுக் கழிமுகப் படுகை, குவாங் தோங், குவாங்சி பகுதிகள். |
திரங் உடன்பிறப்புகள் (மகளிர்) | இலிங்கான்/இலின் நாம் 嶺南 | கி.பி 40–43 | இன்றைய வடக்கு, வடக்கு நடுவண் வியட்நாம் (தெற்கெல்லை மாவாறு வரை விரிவுபடுத்தியது)+ சா ஆற்றுக் கழிமுகப் படுகை. |
சீன ஏன் அரசகுலம் முதல் சீன கீழை வூ அரசகுலம் வரையிலான ஆட்சி | கியாவோ சி 交趾 | கி.பி 43–229 | இன்றைய வடக்கு, வடக்கு நடுவண் வியட்நாம் (தெற்கெல்லை மாவாறு வரை விரிவுபடுத்தியது)+ சா ஆற்றுக் கழிமுகப் படுகை, குவாங் தோங், குவாங்சி பகுதிகள். |
கீழை வூ முதல் இலியாங் அரசகுலம் வரையிலான ஆட்சி | கியாவோ சாவு (யியாவோழவு) 交州 | கி.பி 229–544 | மேலே உள்ள எல்லை |
தொடக்கநிலை இலய் அரசகுலம் | வான்சுவான் 萬春 | கி.பி 544–602 | மேலே உள்ள எல்லை |
சீன சூயி அரசகுலம் முதல் சீன தாங் அரசகுல ஆட்சி வரை | கியாவோ சாவு 交趾 | 602–679 | மேலே உள்ள எல்லை |
சீன தாங் அரசகுல ஆட்சி | ஆன் நாம் 安南 | 679–757 | மேலே உள்ள எல்லை |
சீன தாங் அரசகுல ஆட்சி | திரான் நாம் 鎮南 | 757–766 | மேலே உள்ள எல்லை |
சீன தாங் அரசகுல ஆட்சி | ஆன் நாம் 安南 | 766–866 | மேலே உள்ள எல்லை |
சீன தங் அரசகுல ஆட்சி, கூசு கணத் தன்னாட்சி, துவோங் தின் நிகே, கியேயு கோங் தியேன், நிகோ அரசகுலம் | தின்காய் குவான் 静海军 | 866–967 | மேலே உள்ள எல்லை |
தின் அரசகுலம், தொடக்கநிலை இலே அரசகுலம், இலய் அரசகுலம் | தாய்சோ வியட் 大瞿越 | 968–1054 | மேலே உள்ள எல்லை |
இலய் அரசகுலம், திரான் அரசகுலம் | தாய் வியட் 大越 | 1054–1400 | தென்னெல்லை இன்றைய குயே பகுதி வரை விரிவுபடுத்தியது. |
கோ அரசகுலம் | தாய்நிகு 大虞 | 1400–1407 | மேலே உள்ள எல்லை |
சீன மிங் அரசகுல ஆட்சி, பிந்தைய திரான் அரசகுலம் | கியாவோ சி 交州 | 1407–1427 | மேலே உள்ள எல்லை |
இலே ஆரசகுலம், மாசு அரசகுலம், திரின் நிலக்கிழார்கள்–நிகுயேன் நிலக்கிழார்கள், [[தாய்சோன் அரசகுலம், நிகுயேன் அரசகுலம் | தாய்வியட் | 1428–1804 大越 | இன்றைய வியட்நாம் எல்லை வரை படிப்படியாக விரிவுபடுத்திய பகுதி. |
நிகுயேன் அரசகுலம் | வியட்நாம் 越南 | 1804–1839 | இன்றைய வியட்நாம்+ கம்போடியா, இலாவோசில் உள்ள சில கைப்பற்றிய பகுதிகள். |
நிகுயேன் அரசகுலம் | தாய்நாம் 大南 | 1839–1887 | மேலே உள்ள எல்லை |
நிகுயேன் அரசகுலம், பிரெஞ்சுக் காப்புக் குடியேற்றம் | பிரெஞ்சு இந்தோசீனா, இதில் கொச்சின்சீனா ( தென்வியட்நாம்), ஆன்னம், நடுவண் வியட்நாம், தோங்கின் (வடக்கு வியட்நாம்) ஆகிய பகுதிகள் அடங்கும். | 1887–1945 | இன்றைய வியட்நாம். |
குடியரசு ஊழி | வியட்நாம் (பின்வரும் வேறுபாடுகளுடன் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு, வியட்நாம் அரசு, வியட்நாம் குடியரசு, வியட்நாம் சமவுடைமைக் குடியரசு) | வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு (1945–1976 வடக்கு வியட்நாமில்), வியட்நாம் அரசு (1949–1955), வியட்நாம் குடியரசு (1955–1975 தெற்கு வியட்நாமில்), வியட்நாம் சமவுடைமைக் குடியரசு (1976–அண்மை வரை) |
இன்றைய வியட்நாம். |
கோங்பாங் தாய்சோன் அரசகுலங்களைத் தவிர, அனைத்து வியட்நாம் அரச குலங்களும் அரசனின் குடும்பப் பெயரால் அழைக்கப்படுகின்றன’ ஆனால், சீன அரசகுலங்கள் அரசகுலத்தை நிறுவியவர் பெடரால் அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை நாட்டின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.நிகுயேன் குயேவின் "தாய்சோன் அரசகுலம்" வரலாற்றாசிரியர்கள் இட்ட பெயராகும். இது நிகுயேன் ஆனின் நிகுயேன் அரசகுலத்துடன் குழப்பிக்கொள்ளாமல் இருக்க இட்ட பெயராகும்.
வியட்நாமியத் தேசிய வரலாறெழுதியல்
தொகுமுதன்மைக் கட்டுரை: வரலாறெழுதியலும் தேசியமும்
மேலும் காண்க
தொகு- வியட்நாம்|வரலாறு
- வியட்நாமின் பொருளியல் வரலாறு
- கிழக்காசிய வரலாறு
- ஆசிய வரலாறு
- தென்கிழக்காசிய வரலாறு
- வியட்நாமிய அரசியல்
- வியட்நாம் குடியரசுத் தலைவர்
- வியட்நாம் முதன்மை அமைச்சர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Origin of Vietnamese people". Archived from the original on 2010-01-06. பார்க்கப்பட்ட நாள் 2010-01-06.
- ↑ "History of Vietnam". Archived from the original on 2020-08-01. பார்க்கப்பட்ட நாள் 2017-11-22.
- ↑ Hoa Binh Culture
- ↑ Ancient time பரணிடப்பட்டது சூலை 23, 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Lê Huyền Thảo Uyên, 2012-13. Welcome to Vietnam. International Student. West Virginia University.
- ↑ Handbook of Asian Education: A Cultural Perspective, p. 95
நூல்தொகை
தொகு- Andaya, Barbara Watson. (2006). The Flaming Womb: Repositioning Women in Early Modern Southeast Asia (illustrated ed.). University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0824829557. Retrieved 7 August 2013.
- Cœdès, George. (1966). The Making of South East Asia (illustrated, reprint ed.). University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0520050614. Retrieved 7 August 2013.
- Dardess, John W. (2012). Ming China, 1368-1644: A Concise History of a Resilient Empire. Rowman & Littlefield. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1442204907. Retrieved 7 August 2013.
- Hall, Kenneth R., ed. (2008). Secondary Cities and Urban Networking in the Indian Ocean Realm, C. 1400-1800. Volume 1 of Comparative urban studies. Lexington Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0739128353. Retrieved 7 August 2013.
- Nguyen Ba Khoach (1978). "Phung Nguyen". ScholarSpace - University of Hawaii.
- Taylor, K. W. (2013). A History of the Vietnamese (illustrated ed.). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521875862. Retrieved 7 August 2013.
- Taylor, Keith Weller. (1983). The Birth of Vietnam (illustrated, reprint ed.). University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0520074173. Retrieved 7 August 2013.
- Tsai, Shih-shan Henry. (1996). The Eunuchs in the Ming dynasty (illustrated ed.). SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1438422369. Retrieved 7 August 2013.
- Contributor: Far-Eastern Prehistory Association Asian Perspectives, Volume 28, Issue 1. (1990) University Press of Hawaii. Retrieved 7 August 2013.
மேலும் படிக்க
தொகு- Hill, John E. 2003. "Annotated Translation of the Chapter on the Western Regions according to the 'Hou Hanshu'", 2nd draft edition பரணிடப்பட்டது 2006-04-26 at the வந்தவழி இயந்திரம்
- Hill, John E. 2004. The Peoples of the West from the Weilue 魏略 by Yu Huan 魚豢: A Third Century Chinese Account Composed between 239 and 265 AD. Draft annotated English translation. பரணிடப்பட்டது 2005-03-15 at the வந்தவழி இயந்திரம்
முதன்மைத் தகவல் வாயில்கள்
தொகு- Werner, Jayne, et al. eds. Sources of Vietnamese Tradition (2012) excerpt and text search